அத்தியாயம்: 48, பாடம்: 18, ஹதீஸ் எண்: 4877

حَدَّثَنَا قُتَيْبَةُ بْنُ سَعِيدٍ، حَدَّثَنَا عَبْدُ الْوَاحِدِ بْنُ زِيَادٍ، عَنِ الْحَسَنِ بْنِ عُبَيْدِ اللَّهِ، حَدَّثَنَا إِبْرَاهِيمُ بْنُ سُوَيْدٍ النَّخَعِيُّ، حَدَّثَنَا عَبْدُ الرَّحْمَنِ بْنُ يَزِيدَ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ مَسْعُودٍ قَالَ :‏

كَانَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم إِذَا أَمْسَى قَالَ ‏”‏ أَمْسَيْنَا وَأَمْسَى الْمُلْكُ لِلَّهِ وَالْحَمْدُ لِلَّهِ لاَ إِلَهَ إِلاَّ اللَّهُ وَحْدَهُ لاَ شَرِيكَ لَهُ ‏”‏ ‏


قَالَ الْحَسَنُ فَحَدَّثَنِي الزُّبَيْدُ أَنَّهُ حَفِظَ عَنْ إِبْرَاهِيمَ فِي هَذَا ‏”‏ لَهُ الْمُلْكُ وَلَهُ الْحَمْدُ وَهُوَ عَلَى كُلِّ شَىْءٍ قَدِيرٌ اللَّهُمَّ أَسْأَلُكَ خَيْرَ هَذِهِ اللَّيْلَةِ وَأَعُوذُ بِكَ مِنْ شَرِّ هَذِهِ اللَّيْلَةِ وَشَرِّ مَا بَعْدَهَا اللَّهُمَّ إِنِّي أَعُوذُ بِكَ مِنَ الْكَسَلِ وَسُوءِ الْكِبَرِ اللَّهُمَّ إِنِّي أَعُوذُ بِكَ مِنْ عَذَابٍ فِي النَّارِ وَعَذَابٍ فِي الْقَبْرِ ‏”‏ ‏

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) மாலை நேரத்தை அடையும்போது, “அம்ஸைனா வ அம்ஸல் முல்க்கு லில்லாஹ்; வல்ஹம்து லில்லாஹ். லாயிலாஹ இல்லல்லாஹு, வஹ்தஹு, லா ஷரீக்க லஹு” என்று கூறுவார்கள்.

(பொருள்: நாங்கள் மாலைப் பொழுதை அடைந்தோம். மாலைப் பொழுதின் ஆட்சி அல்லாஹ்வுக்கே உரியது. அனைத்துப் புகழும் அல்லாஹ்வுக்கே உரியன. அல்லாஹ்வைத் தவிர வேறு இறைவன் இல்லை. அவன் தனித்தவன். அவனுக்கு இணை யாருமில்லை)

அறிவிப்பாளர் : அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி)


குறிப்பு :

இதன் அறிவிப்பாளர்களில் ஒருவரான ஹஸன் பின் உபைதில்லாஹ் (ரஹ்) கூறுகின்றார்:

ஸுபைத் பின் அல்ஹாரிஸ் (ரஹ்), இப்ராஹீம் பின் ஸுவைத் (ரஹ்) அவர்களிடமிருந்து பின்வருமாறு கூடுதலாக மனனமிட்டதாகவும் என்னிடம் அறிவித்தார்கள்:

லஹுல் முல்க்கு வ லஹுல் ஹம்து. வஹுவ அலா குல்லி ஷையின் கதீர். அல்லாஹும்ம! அஸ்அலுக்க கைர ஹாதிஹில் லைலா. வ அஊது பிக்க மின் ஷர்ரி ஹாதிஹில் லைலா. வ ஷர்ரி மா பஅதஹா. அல்லாஹும்ம! இன்னீ அஊது பிக்க மினல் கஸலி, வ ஸூயில் கிபர். அல்லாஹும்ம! இன்னீ அஊது பிக்க மின் அதாபின் ஃபிந்நாரி, வ அதாபின் ஃபில் கப்ரி.

(பொருள்: ஆட்சி அவனுக்கே உரியது. புகழும் அவனுக்கே உரியது. அவன் அனைத்தின் மீதும் ஆற்றல் உள்ளவன். இறைவா! உன்னிடம் நான் இந்த இரவின் நன்மையை வேண்டுகின்றேன். மேலும், உன்னிடம் நான் இந்த இரவின் தீங்கிலிருந்தும் அதற்குப் பின்னுள்ள தீமையிலிருந்தும் பாதுகாப்புக் கோருகின்றேன். இறைவா! சோம்பலிலிருந்தும் முதுமையின் கேட்டிலிருந்தும் உன்னிடம் நான் பாதுகாப்புக் கோருகின்றேன். இறைவா! நரக நெருப்பின் வேதனையிலிருந்தும் மண்ணறையின் வேதனையிலிருந்தும் உன்னிடம் நான் பாதுகாப்புக் கோருகின்றேன்).

Share this Hadith: