அத்தியாயம்: 48, பாடம்: 3, ஹதீஸ் எண்: 4818

حَدَّثَنَا إِسْحَاقُ بْنُ مُوسَى الأَنْصَارِيُّ، حَدَّثَنَا أَنَسُ بْنُ عِيَاضٍ، حَدَّثَنَا الْحَارِثُ، – وَهُوَ ابْنُ عَبْدِ الرَّحْمَنِ بْنِ أَبِي ذُبَابٍ – عَنْ عَطَاءِ بْنِ مِينَاءَ، عَنْ أَبِي هُرَيْرَةَ قَالَ :‏

قَالَ النَّبِيُّ صلى الله عليه وسلم ‏ “‏ لاَ يَقُولَنَّ أَحَدُكُمُ اللَّهُمَّ اغْفِرْ لِي إِنْ شِئْتَ اللَّهُمَّ ارْحَمْنِي إِنْ شِئْتَ ‏.‏ لِيَعْزِمْ فِي الدُّعَاءِ فَإِنَّ اللَّهَ صَانِعٌ مَا شَاءَ لاَ مُكْرِهَ لَهُ ‏”‏ ‏

“உங்களில் யாரும் பிரார்த்திக்கும்போது ‘இறைவா! நீ நாடினால் எனக்கு மன்னிப்பு வழங்குவாயாக! இறைவா! நீ நாடினால் எனக்குக் கருணை புரிவாயாக!‘ என்று கேட்க வேண்டாம். (மாறாக) பிரார்த்திக்கும்போது (இறைவனிடம்) உறுதிப்பாட்டுடன் கேளுங்கள். ஏனெனில், இறைவன் தான் நாடியதைச் செய்து முடிப்பவன். அவனை எவரும் நிர்பந்திந்திக்க முடியாது” என்று நபி (ஸல்) கூறினார்கள்.

அறிவிப்பாளர் : அபூஹுரைரா (ரலி)

Share this Hadith: