அத்தியாயம்: 48, பாடம்: 5, ஹதீஸ் எண்: 4826

حَدَّثَنَا سَعِيدُ بْنُ عَمْرٍو الأَشْعَثِيُّ، أَخْبَرَنَا عَبْثَرٌ، عَنْ مُطَرِّفٍ، عَنْ عَامِرٍ، عَنْ شُرَيْحِ بْنِ هَانِئٍ عَنْ أَبِي هُرَيْرَةَ قَالَ :‏

قَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم ‏”‏ مَنْ أَحَبَّ لِقَاءَ اللَّهِ أَحَبَّ اللَّهُ لِقَاءَهُ وَمَنْ كَرِهَ لِقَاءَ اللَّهِ كَرِهَ اللَّهُ لِقَاءَهُ ‏”‏ ‏.‏ قَالَ فَأَتَيْتُ عَائِشَةَ فَقُلْتُ يَا أُمَّ الْمُؤْمِنِينَ سَمِعْتُ أَبَا هُرَيْرَةَ يَذْكُرُ عَنْ رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم حَدِيثًا إِنْ كَانَ كَذَلِكَ فَقَدْ هَلَكْنَا ‏.‏ فَقَالَتْ إِنَّ الْهَالِكَ مَنْ هَلَكَ بِقَوْلِ رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم وَمَا ذَاكَ قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم ‏”‏ مَنْ أَحَبَّ لِقَاءَ اللَّهِ أَحَبَّ اللَّهُ لِقَاءَهُ وَمَنْ كَرِهَ لِقَاءَ اللَّهِ كَرِهَ اللَّهُ لِقَاءَهُ ‏”‏ ‏.‏ وَلَيْسَ مِنَّا أَحَدٌ إِلاَّ وَهُوَ يَكْرَهُ الْمَوْتَ ‏.‏ فَقَالَتْ قَدْ قَالَهُ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم وَلَيْسَ بِالَّذِي تَذْهَبُ إِلَيْهِ وَلَكِنْ إِذَا شَخَصَ الْبَصَرُ وَحَشْرَجَ الصَّدْرُ وَاقْشَعَرَّ الْجِلْدُ وَتَشَنَّجَتِ الأَصَابِعُ فَعِنْدَ ذَلِكَ مَنْ أَحَبَّ لِقَاءَ اللَّهِ أَحَبَّ اللَّهُ لِقَاءَهُ وَمَنْ كَرِهَ لِقَاءَ اللَّهِ كَرِهَ اللَّهُ لِقَاءَهُ ‏


وَحَدَّثَنَاهُ إِسْحَاقُ بْنُ إِبْرَاهِيمَ الْحَنْظَلِيُّ، أَخْبَرَنِي جَرِيرٌ، عَنْ مُطَرِّفٍ، بِهَذَا الإِسْنَادِ نَحْوَ حَدِيثِ عَبْثَرٍ ‏

அல்லாஹ்வின் தூதர் (ஸல்), “யார் அல்லாஹ்வைச் சந்திக்க விரும்புகின்றாரோ அவரைச் சந்திக்க அல்லாஹ்வும் விரும்புகின்றான். யார் அல்லாஹ்வைச் சந்திப்பதை வெறுக்கின்றாரோ அவரைச் சந்திப்பதை அல்லாஹ்வும் வெறுக்கின்றான்  என்று சொன்னார்கள்” என அபூஹுரைரா (ரலி) கூறினார்கள்.

(இதைக் கேட்ட) நான் ஆயிஷா (ரலி) அவர்களிடம் சென்று, “இறைநம்பிக்கையாளர்களின் அன்னையே! அபூஹுரைரா (ரலி), அல்லாஹ்வின் தூதர் (ஸல்) கூறியதாக ஒரு ஹதீஸை அறிவித்தார்கள். அவர்கள் கூறியதைப் போன்று இருந்தால் நாங்கள் (அனைவரும்) அழிந்தோம்” என்று சொன்னேன். அதற்கு ஆயிஷா (ரலி), “அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் கூற்று யாருக்குப் பொருந்துகிறதோ அவர் (உண்மையில்) அழிந்தவர்தாம். அது என்ன (ஹதீஸ்)?” என்று கேட்டார்கள்.

நான், “அல்லாஹ்வின் தூதர் (ஸல்), யார் அல்லாஹ்வைச் சந்திக்க விரும்புகின்றாரோ அவரைச் சந்திக்க அல்லாஹ்வும் விரும்புகின்றான். யார் அல்லாஹ்வைச் சந்திப்பதை வெறுக்கின்றாரோ அவரைச் சந்திப்பதை அல்லாஹ்வும் வெறுக்கின்றான் என்று கூறினார்கள். எங்களில் எவரொருவரும் மரணத்தை வெறுக்காதவர் இல்லையே?” என்று கேட்டேன்.

அதற்கு ஆயிஷா (ரலி), “அவ்வாறு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) கூறியது உண்மையே. ஆனால், அதன் விளக்கம் நீங்கள் நினைப்பதைப் போன்றில்லை. பார்வை நிலை குத்தி, மூச்சிறைத்து, ரோமக்கால்கள் சிலிர்த்து நின்று, கைவிரல்கள் மடங்கிக்கொள்ளும் (மரண) வேளையில், யார் அல்லாஹ்வைச் சந்திக்க விரும்புகின்றாரோ அவரைச் சந்திக்க அல்லாஹ்வும் விரும்புகின்றான். யார் அல்லாஹ்வைச் சந்திப்பதை வெறுக்கின்றாரோ அவரைச் சந்திப்பதை அல்லாஹ்வும் வெறுக்கின்றான் (என்பதே அதற்கான விளக்கம்)” என்றார்கள்.

அறிவிப்பாளர் : அன்னை ஆயிஷா (ரலி) வழியாக ஷுரைஹ் பின் ஹானீ (ரஹ்)

Share this Hadith: