حَدَّثَنَا قُتَيْبَةُ بْنُ سَعِيدٍ حَدَّثَنَا لَيْثٌ قَالَ ح و حَدَّثَنَا ابْنُ رُمْحٍ أَخْبَرَنَا اللَّيْثُ عَنْ ابْنِ شِهَابٍ أَنَّ عُمَرَ بْنَ عَبْدِ الْعَزِيزِ أَخَّرَ الْعَصْرَ شَيْئًا فَقَالَ لَهُ عُرْوَةُ أَمَا إِنَّ جِبْرِيلَ قَدْ نَزَلَ فَصَلَّى إِمَامَ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فَقَالَ لَهُ عُمَرُ اعْلَمْ مَا تَقُولُ يَا عُرْوَةُ فَقَالَ سَمِعْتُ بَشِيرَ بْنَ أَبِي مَسْعُودٍ يَقُولُ سَمِعْتُ أَبَا مَسْعُودٍ يَقُولُ :
سَمِعْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُولُ نَزَلَ جِبْرِيلُ فَأَمَّنِي فَصَلَّيْتُ مَعَهُ ثُمَّ صَلَّيْتُ مَعَهُ ثُمَّ صَلَّيْتُ مَعَهُ ثُمَّ صَلَّيْتُ مَعَهُ ثُمَّ صَلَّيْتُ مَعَهُ يَحْسُبُ بِأَصَابِعِهِ خَمْسَ صَلَوَاتٍ
“ஜிப்ரீல் (ஒரு நாள்) இறங்கிவந்து, எனக்குத் தலைமை தாங்கித் தொழுவித்தார்கள். அவர்களுடன் நான் தொழுதேன். பிறகும் அவர்களுடன் தொழுதேன். பிறகும் அவர்களுடன் தொழுதேன். பிறகும் அவர்களுடன் தொழுதேன்” என்று சொல்லி அல்லாஹ்வின் தூதர் (ஸல்) ஐந்து (நேரத்) தொழுகைகளைத் தம் விரல்களால் எண்ணிக் காட்டினார்கள்.
அறிவிப்பாளர் : அபூமஸ்ஊத் (ரலி) வழியாக அவரின் மகன் பஷீர் (ரஹ்)
குறிப்பு :
உமர் பின் அப்தில் அஸீஸ் (ரஹ்) அஸ்ருத் தொழுகையை ( ஒருநாள்) சிறிது நேரம் தாமதப்படுத்தினார்கள். அப்போது அவர்களிடம் உர்வா பின் அஸ்ஸுபைர் (ரஹ்), “ஜிப்ரீல் (அலை) இறங்கி வந்து அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுக்கு இமாமாக (நின்று) தொழுவித்தார்கள். (அப்போது அஸ்ருத் தொழுகையை இந்நேரத்துக்கு முந்தியே தொழுதார்கள்)” என்று கூறினார்கள். அதற்கு உமர் பின் அப்தில் அஸீஸ் (ரஹ்), “உர்வா! நீங்கள் என்ன சொல்கின்றீர்கள் என்பதைப் புரிந்து கொள்ளுங்கள்” என்று சொன்னார்கள். அதற்கு உர்வா (ரஹ்), மேற்காணும் ஹதீஸைக் கூறினார்கள் என்று இப்னு ஷிஹாப் அஸ்ஸூஹ்ரீ குறிப்பிடுகின்றார்.
ஐவேளைத் தொழுகைகள் கடமையாக்கப்பட்ட மிஃராஜ் இரவுக்கு மறுநாள் வானவர் தலைவர் ஜிப்ரீல் (அலை) இறங்கி வந்து, அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுக்கு இமாமாக இருந்து ஐவேளைகளின் உரிய நேரத்தில் தொழுகை நடத்திக் காட்டினார்கள்.