حَدَّثَنَا عُبَيْدُ اللَّهِ بْنُ مُعَاذٍ الْعَنْبَرِيُّ حَدَّثَنَا أَبِي حَدَّثَنَا شُعْبَةُ عَنْ قَتَادَةَ عَنْ أَبِي أَيُّوبَ وَاسْمَهْ يَحْيَى بْنُ مَالِكٍ الْأَزْدِيُّ وَيُقَالُ الْمَرَاغِيُّ وَالْمَرَاغُ حَيٌّ مِنْ الْأَزْدِ عَنْ عَبْدِ اللَّهِ بْنِ عَمْرٍو :
عَنْ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ وَقْتُ الظُّهْرِ مَا لَمْ يَحْضُرْ الْعَصْرُ وَوَقْتُ الْعَصْرِ مَا لَمْ تَصْفَرَّ الشَّمْسُ وَوَقْتُ الْمَغْرِبِ مَا لَمْ يَسْقُطْ ثَوْرُ الشَّفَقِ وَوَقْتُ الْعِشَاءِ إِلَى نِصْفِ اللَّيْلِ وَوَقْتُ الْفَجْرِ مَا لَمْ تَطْلُعْ الشَّمْسُ
حَدَّثَنَا زُهَيْرُ بْنُ حَرْبٍ حَدَّثَنَا أَبُو عَامِرٍ الْعَقَدِيُّ قَالَ ح و حَدَّثَنَا أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ حَدَّثَنَا يَحْيَى بْنُ أَبِي بُكَيْرٍ كِلَاهُمَا عَنْ شُعْبَةَ بِهَذَا الْإِسْنَادِ وَفِي حَدِيثِهِمَا قَالَ شُعْبَةُ رَفَعَهُ مَرَّةً وَلَمْ يَرْفَعْهُ مَرَّتَيْنِ
“லுஹ்ருத் தொழுகையின் நேரம் அஸ்ரு நேரம் வரும்வரை உள்ளது. அஸ்ருத் தொழுகையின் நேரம் சூரியன் மஞ்சள் நிறமாவதற்கு முன்புவரை உள்ளது. மஃக்ரிபுத் தொழுகையின் நேரம் செம்மேகம் பரவி மறைவதற்கு முன்புவரை உள்ளது. இஷாத் தொழுகையின் நேரம் நள்ளிரவுவரை உள்ளது ஃபஜ்ருத் தொழுகையின் நேரம் சூரியன் உதயமாவதற்கு முன்புவரை உள்ளது” என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) கூறினார்கள்.
அறிவிப்பாளர் : அப்துல்லாஹ் பின் அம்ரு (ரலி)
குறிப்பு :
அபூபக்ரு பின் அபீஷைபா (ரஹ்), யஹ்யா பின் அபீபக்ரு (ரஹ்) ஆகிய இருவர் வழி அறிவிப்புகளிலும் இந்த ஹதீஸ், “நபி (ஸல்) கூறினார்கள்” என்று ஒருமுறையும் அறிவிப்பாளர் அப்துல்லாஹ் பின் அம்ரு கூறியதாக இருமுறையும் அறிவிக்கப்படுவதாக ஷுஅபா (ரஹ்) குறிப்பிடுகின்றார்.