அத்தியாயம்: 5, பாடம்: 32, ஹதீஸ் எண்: 970

و حَدَّثَنِي ‏ ‏إِبْرَاهِيمُ بْنُ مُحَمَّدِ بْنِ عَرْعَرَةَ السَّامِيُّ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏حَرَمِيُّ بْنُ عُمَارَةَ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏شُعْبَةُ ‏ ‏عَنْ ‏ ‏عَلْقَمَةَ بْنِ مَرْثَدٍ ‏ ‏عَنْ ‏ ‏سُلَيْمَانَ بْنِ بُرَيْدَةَ ‏ ‏عَنْ ‏ ‏أَبِيهِ ‏

أَنَّ رَجُلًا أَتَى النَّبِيَّ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏فَسَأَلَهُ عَنْ مَوَاقِيتِ الصَّلَاةِ فَقَالَ ‏ ‏اشْهَدْ مَعَنَا الصَّلَاةَ فَأَمَرَ ‏ ‏بِلَالًا ‏ ‏فَأَذَّنَ ‏ ‏بِغَلَسٍ ‏ ‏فَصَلَّى الصُّبْحَ حِينَ طَلَعَ الْفَجْرُ ثُمَّ أَمَرَهُ بِالظُّهْرِ حِينَ ‏ ‏زَالَتْ ‏ ‏الشَّمْسُ عَنْ بَطْنِ السَّمَاءِ ثُمَّ أَمَرَهُ بِالْعَصْرِ وَالشَّمْسُ مُرْتَفِعَةٌ ثُمَّ أَمَرَهُ بِالْمَغْرِبِ حِينَ وَجَبَتْ الشَّمْسُ ثُمَّ أَمَرَهُ بِالْعِشَاءِ حِينَ وَقَعَ الشَّفَقُ ثُمَّ أَمَرَهُ ‏ ‏الْغَدَ ‏ ‏فَنَوَّرَ ‏ ‏بِالصُّبْحِ ثُمَّ أَمَرَهُ بِالظُّهْرِ فَأَبْرَدَ ثُمَّ أَمَرَهُ بِالْعَصْرِ وَالشَّمْسُ بَيْضَاءُ نَقِيَّةٌ لَمْ تُخَالِطْهَا صُفْرَةٌ ثُمَّ أَمَرَهُ بِالْمَغْرِبِ قَبْلَ أَنْ يَقَعَ الشَّفَقُ ثُمَّ أَمَرَهُ بِالْعِشَاءِ عِنْدَ ذَهَابِ ثُلُثِ اللَّيْلِ ‏ ‏أَوْ بَعْضِهِ شَكَّ ‏ ‏حَرَمِيٌّ ‏ ‏فَلَمَّا أَصْبَحَ قَالَ أَيْنَ السَّائِلُ مَا بَيْنَ مَا رَأَيْتَ وَقْتٌ

நபி (ஸல்) அவர்களிடம் ஒருவர் வந்து தொழுகை நேரங்கள் குறித்து வினவினார். (அவரிடம்) நபி (ஸல்), “நம்முடன் தொழுகையில் கலந்துகொள்வீராக!” என்று கூறினார்கள். இதையடுத்து நபி (ஸல்), பிலால் (ரலி) அவர்களிடம் (இருள் மீந்து இருக்கும்போதே ஸுப்ஹுத் தொழுகைக்காக பாங்கும் இகாமத்தும் கூறுமாறு) உத்தரவிட பிலால் (ரலி), இருள் மீந்து இருக்கும்போதே (ஸுப்ஹுத் தொழுகைக்காக) பாங்கு சொன்னார்கள். வைகறைப் பொழுது உதயமாகும்போது நபி (ஸல்) அவர்கள் ஸுப்ஹுத் தொழுதார்கள். பிறகு சூரியன் நடுவானிலிருந்து சாய்ந்தபோது லுஹ்ருத் தொழுகைக்காக (பாங்கும் இகாமத்தும் கூறுமாறு) உத்தரவிட்டார்கள். பின்னர் சூரியன் (சாயாமல்) உயர்ந்திருக்கும்போதே அஸ்ருத் தொழுகைக்காக (பாங்கும் இகாமத்தும் சொல்லுமாறு) பிலால் (ரலி) அவர்களுக்குக் கட்டளையிட்டார்கள். பிறகு சூரியன் மறைந்தபோது மஃக்ரிப் தொழுகைக்காக (பாங்கும் இகாமத்தும் கூறுமாறு) உத்தரவிட்டார்கள். பிறகு செம்மேகம் மறைந்ததும் இஷாத் தொழுகைக்காக (பாங்கும் இகாமத்தும் கூறுமாறு) உத்தரவிட்டார்கள்.

மறுநாள் பிலால் (ரலி) அவர்களிடம் (ஸுப்ஹுத் தொழுகைக்காக பாங்கும் இகாமத்தும் கூறுமாறு) உத்தரவிட்டு, வெளிச்சம் வந்தபின் ஸுப்ஹுத் தொழுதார்கள். பிறகு லுஹ்ருத் தொழுகைக்கு (வெப்பம் தணிந்தபின் பாங்கும் இகாமத்தும் கூறுமாறு) உத்தரவிட்டு, வெப்பம் தணிந்தபின் தொழுதார்கள். பிறகு பிலால் (ரலி) அவர்களிடம் அஸ்ருத் தொழுகைக்காக (பாங்கும் இகாமத்தும் கூறுமாறு) உத்தரவிட்டு, சூரியன் மஞ்சள்நிறம் பெறாமல் ஒளிமிக்கதாகவும் தெளிவாகவும் இருந்தபோது அஸ்ருத் தொழுதார்கள். பிறகு பிலால் (ரலி) அவர்களிடம் செம்மேகம் மறைவதற்குமுன் மஃக்ரிப் தொழுகைக்கு (பாங்கும் இகாமத்தும் கூறுமாறு) உத்தரவிட்டார்கள். பிறகு இரவின் ஒருபகுதி/மூன்றில் ஒருபகுதி கடந்தபின் இஷாத் தொழுகைக்கு (பாங்கும் இகாமத்தும் கூறுமாறு) உத்தரவிட்டார்கள். அதிகாலையில், “கேள்வி கேட்டவர் எங்கே? நீங்கள் கண்ட (இவ்விரு தினங்களின் தொழுகை நேரங்களின்) இடைப்பட்ட நேரமே (ஐவேளைத்) தொழுகை நேரங்களாகும்” என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) கூறினார்கள்.

அறிவிப்பாளர் : புரைதா (ரலி)

குறிப்பு :

(இஷாவுடைய நேரம்) இரவின் ஒருபகுதி கடந்த பின்னரா அன்றி மூன்று பகுதிகள் கடந்த பின்னரா? என்பதில், ஹரமீ பின் உமாரா (ரஹ்) என்பவருக்கு ஐயம் இருந்திருக்கிறது.

Share this Hadith:

Leave a Comment