அத்தியாயம்: 5, பாடம்: 38, ஹதீஸ் எண்: 1002

و حَدَّثَنَا ‏ ‏زُهَيْرُ بْنُ حَرْبٍ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏مَرْوَانُ بْنُ مُعَاوِيَةَ الْفَزَارِيُّ ‏ ‏أَخْبَرَنَا ‏ ‏إِسْمَعِيلُ بْنُ أَبِي خَالِدٍ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏قَيْسُ بْنُ أَبِي حَازِمٍ ‏ ‏قَالَ سَمِعْتُ ‏ ‏جَرِيرَ بْنَ عَبْدِ اللَّهِ ‏ ‏وَهُوَ ‏ ‏يَقُولُا ‏

كُنَّا جُلُوسًا عِنْدَ رَسُولِ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏إِذْ نَظَرَ إِلَى الْقَمَرِ لَيْلَةَ الْبَدْرِ فَقَالَ ‏ ‏أَمَا إِنَّكُمْ سَتَرَوْنَ رَبَّكُمْ كَمَا تَرَوْنَ هَذَا الْقَمَرَ لَا ‏ ‏تُضَامُّونَ ‏ ‏فِي رُؤْيَتِهِ فَإِنْ اسْتَطَعْتُمْ أَنْ لَا تُغْلَبُوا عَلَى صَلَاةٍ قَبْلَ طُلُوعِ الشَّمْسِ وَقَبْلَ غُرُوبِهَا ‏ ‏يَعْنِي الْعَصْرَ وَالْفَجْرَ ‏ ‏ثُمَّ قَرَأَ ‏ ‏جَرِيرٌ ‏ ‏وَسَبِّحْ بِحَمْدِ رَبِّكَ قَبْلَ طُلُوعِ الشَّمْسِ وَقَبْلَ غُرُوبِهَا ‏

و حَدَّثَنَا ‏ ‏أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏عَبْدُ اللَّهِ بْنُ نُمَيْرٍ ‏ ‏وَأَبُو أُسَامَةَ ‏ ‏وَوَكِيعٌ ‏ ‏بِهَذَا الْإِسْنَادِ وَقَالَ ‏ ‏أَمَا إِنَّكُمْ سَتُعْرَضُونَ عَلَى رَبِّكُمْ فَتَرَوْنَهُ كَمَا تَرَوْنَ هَذَا الْقَمَرَ وَقَالَ ثُمَّ قَرَأَ وَلَمْ يَقُلْ ‏ ‏جَرِيرٌ

நாங்கள் (முழு நிலவுள்ள ஓர் இரவில்) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடன் அமர்ந்திருந்தோம். அப்போது அவர்கள் முழுநிலவைக் கூர்ந்து பார்த்தவாறு, “நீங்கள் எவ்வித இடருமின்றி இந்த முழுநிலவைக் காண்பதைப் போன்றே உங்கள் இறைவனையும் (மறுமையில்) காண்பீர்கள். எனவே, சூரியன் உதிக்கும் முன்னருள்ள தொழுகையிலும் சூரியன் மறையும் முன்னருள்ள தொழுகையிலும் -அதாவது அஸ்ரிலும் ஃபஜ்ரிலும்- (உறக்கம் அசதி போன்ற எதுவும்) உங்களை மிகைப்பதற்கு இடம்கொடுக்காமல் இருக்க உங்களால் இயலுமானால் (இறைவனை நீங்கள் தரிசிக்கலாம்)” என்று கூறினார்கள்.

அறிவிப்பாளர் : ஜரீர் பின் அப்தில்லாஹ் (ரலி)

குறிப்பு :

இந்த ஹதீஸை அறிவித்த பிறகு ஜரீர் பின் அப்தில்லாஹ் (ரலி), “சூரியன் உதயமாகும் முன்னரும் மறையும் முன்னரும் உங்கள் இறைவனைப் போற்றித் துதியுங்கள்” எனும் (20:130ஆவது) இறைவசனத்தை ஓதிக்காட்டினார்கள் என்று இதன் அறிவிப்பாளரான கைஸ் பின் அபீஹாஸிம் (ரஹ்) கூறினார்கள்.

அபூபக்ரிப்னு அபீஷைபா (ரஹ்), அப்துல்லாஹ் பின் நுமைர் (ரஹ்), அபூஉஸாமா (ரஹ்) ஆகியோரின் அறிவிப்புகளில், “நீங்கள் (மறுமையில்) உங்கள் இறைவன்முன் நிறுத்தப்படுவீர்கள். அப்போது நீங்கள் அவனை இந்த முழுநிலவைக் காண்பதைப் போன்று காண்பீர்கள்”என்று கூறிவிட்டு, (20:130ஆவது) வசனத்தை நபி (ஸல்) ஓதிக் காட்டினார்கள் என இடம்பெற்றுள்ளதேயன்றி,. ஜரீர் (ரலி) ஓதிக்காட்டியதாக இடம்பெறவில்லை.

Share this Hadith:

Leave a Comment