அத்தியாயம்: 5, பாடம்: 41, ஹதீஸ் எண்: 1025

حَدَّثَنَا ‏ ‏عُبَيْدُ اللَّهِ بْنُ مُعَاذٍ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏أَبِي ‏ ‏حَدَّثَنَا ‏ ‏شُعْبَةُ ‏ ‏عَنْ ‏ ‏سَيَّارِ بْنِ سَلَامَةَ ‏ ‏قَالَ سَمِعْتُ ‏ ‏أَبَا بَرْزَةَ ‏ ‏يَقُولُ ‏:‏

كَانَ رَسُولُ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏لَا يُبَالِي ‏ ‏بَعْضَ تَأْخِيرِ صَلَاةِ الْعِشَاءِ إِلَى نِصْفِ اللَّيْلِ وَكَانَ لَا يُحِبُّ النَّوْمَ قَبْلَهَا وَلَا الْحَدِيثَ بَعْدَهَا ‏


قَالَ ‏ ‏شُعْبَةُ ‏ ‏ثُمَّ لَقِيتُهُ مَرَّةً أُخْرَى فَقَالَ أَوْ ثُلُثِ اللَّيْلِ

அல்லாஹ்வின் தூதர் (ஸல்), இஷாத் தொழுகைக்கு இரவின் பாதிவரை தாமதிப்பதைப் பொருட்படுத்தியதில்லை. இஷாத் தொழுகைக்கு முன் உறங்குவதையும் இஷாத் தொழுகைக்குப் பின் (உறங்காமல்) பேசிக் கொண்டிருப்பதையும் விரும்பியதில்லை.

அறிவிப்பாளர் : அபூபர்ஸா (ரலி) வழியாக ஸய்யார் (ரஹ்)


குறிப்பு :

“நான் மற்றொரு முறை ஸய்யார் பின் ஸலாமா (ரஹ்) அவர்களைச் சந்தித்தபோது, ‘இஷாத் தொழுகையை இரவில் பாதி அல்லது மூன்றில் ஒரு பகுதிவரை (தாமதப்படுத்துவதை நபியவர்கள் பொருட்படுத்தியதில்லை)’ என்று தாம் செவியுற்றதைக் கூறினார்” என இதன் அறிவிப்பாளர்களுள் ஒருவரான ஷுஅபா (ரஹ்) குறிப்பிடுகின்றார்.

Share this Hadith:

Leave a Comment