அத்தியாயம்: 5, பாடம்: 43, ஹதீஸ் எண்: 1039

و حَدَّثَنِي ‏ ‏زُهَيْرُ بْنُ حَرْبٍ ‏ ‏وَمُحَمَّدُ بْنُ الْمُثَنَّى ‏ ‏قَالَا حَدَّثَنَا ‏ ‏يَحْيَى ‏ ‏عَنْ ‏ ‏عُبَيْدِ اللَّهِ ‏ ‏قَالَ أَخْبَرَنِي ‏ ‏نَافِعٌ ‏ ‏عَنْ ‏ ‏ابْنِ عُمَرَ ‏

عَنْ النَّبِيِّ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏قَالَ ‏ ‏صَلَاةُ الرَّجُلِ فِي الْجَمَاعَةِ تَزِيدُ عَلَى صَلَاتِهِ وَحْدَهُ سَبْعًا وَعِشْرِينَ ‏

و حَدَّثَنَا ‏ ‏أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏أَبُو أُسَامَةَ ‏ ‏وَابْنُ نُمَيْرٍ ‏ ‏قَالَ ‏ ‏ح ‏ ‏و حَدَّثَنَا ‏ ‏ابْنُ نُمَيْرٍ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏أَبِي ‏ ‏قَالَا حَدَّثَنَا ‏ ‏عُبَيْدُ اللَّهِ ‏ ‏بِهَذَا الْإِسْنَادِ ‏ ‏قَالَ ‏ ‏ابْنُ نُمَيْرٍ ‏ ‏عَنْ أَبِيهِ ‏ ‏بِضْعًا ‏ ‏وَعِشْرِينَ ‏ ‏و قَالَ ‏ ‏أَبُو بَكْرٍ ‏ ‏فِي رِوَايَتِهِ سَبْعًا وَعِشْرِينَ دَرَجَةً ‏ ‏و حَدَّثَنَاه ‏ ‏ابْنُ رَافِعٍ ‏ ‏أَخْبَرَنَا ‏ ‏ابْنُ أَبِي فُدَيْكٍ ‏ ‏أَخْبَرَنَا ‏ ‏الضَّحَّاكُ ‏ ‏عَنْ ‏ ‏نَافِعٍ ‏ ‏عَنْ ‏ ‏ابْنِ عُمَرَ ‏ ‏عَنْ النَّبِيِّ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏قَالَ ‏ ‏بِضْعًا ‏ ‏وَعِشْرِينَ

“கூட்டாகத் தொழும் ஒருவரது தொழுகை, அவர் தனியாகத் தொழுவதைவிட இருபத்தேழு மடங்கு கூடுதல் நன்மையுடையதாகும்” என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) கூறினார்கள்.

அறிவிப்பாளர் : இப்னு உமர் (ரலி)

குறிப்பு :

இப்னு நுமைர் (ரஹ்), தம் தந்தை வழியாக அறிவிப்பதில் நன்மையின் மடங்கு, “இருபதுக்கும் மேற்பட்டது” என்றும், அபூபக்ரு பின் அபீஷைபா (ரஹ்) அறிவிப்பில் “இருபத்தேழு மடங்கு” என்றும் ளஹ்ஹாக் (ரஹ்) வழி அறிவிப்பில், “இருபதுக்கும் மேற்பட்ட மடங்கு கூடுதல் சிறப்புடையதாகும்” என்றும் இடம்பெற்றுள்ளது.

Share this Hadith:

Leave a Comment