அத்தியாயம்: 5, பாடம்: 48, ஹதீஸ் எண்: 1052

حَدَّثَنِي ‏ ‏حَرْمَلَةُ بْنُ يَحْيَى التُّجِيبِيُّ ‏ ‏أَخْبَرَنَا ‏ ‏ابْنُ وَهْبٍ ‏ ‏أَخْبَرَنِي ‏ ‏يُونُسُ ‏ ‏عَنْ ‏ ‏ابْنِ شِهَابٍ ‏ ‏أَنَّ ‏ ‏مَحْمُودَ بْنَ الرَّبِيعِ الْأَنْصَارِيَّ ‏ ‏حَدَّثَهُ ‏

أَنَّ ‏ ‏عِتْبَانَ بْنَ مَالِكٍ ‏ ‏وَهُوَ مِنْ ‏ ‏أَصْحَابِ النَّبِيِّ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏مِمَّنْ شَهِدَ ‏ ‏بَدْرًا ‏ ‏مِنْ ‏ ‏الْأَنْصَارِ ‏ ‏أَنَّهُ أَتَى رَسُولَ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏فَقَالَ يَا رَسُولَ اللَّهِ إِنِّي قَدْ ‏ ‏أَنْكَرْتُ ‏ ‏بَصَرِي وَأَنَا أُصَلِّي لِقَوْمِي وَإِذَا كَانَتْ الْأَمْطَارُ سَالَ الْوَادِي الَّذِي بَيْنِي وَبَيْنَهُمْ وَلَمْ أَسْتَطِعْ أَنْ آتِيَ مَسْجِدَهُمْ فَأُصَلِّيَ لَهُمْ وَدِدْتُ أَنَّكَ يَا رَسُولَ اللَّهِ تَأْتِي فَتُصَلِّي فِي مُصَلًّى فَأَتَّخِذَهُ مُصَلًّى قَالَ فَقَالَ رَسُولُ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏سَأَفْعَلُ إِنْ شَاءَ اللَّهُ قَالَ ‏ ‏عِتْبَانُ ‏ ‏فَغَدَا ‏ ‏رَسُولُ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏وَأَبُو بَكْرٍ الصِّدِّيقُ ‏ ‏حِينَ ارْتَفَعَ النَّهَارُ فَاسْتَأْذَنَ رَسُولُ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏فَأَذِنْتُ لَهُ فَلَمْ يَجْلِسْ حَتَّى دَخَلَ الْبَيْتَ ثُمَّ قَالَ أَيْنَ تُحِبُّ أَنْ أُصَلِّيَ مِنْ بَيْتِكَ قَالَ فَأَشَرْتُ إِلَى نَاحِيَةٍ مِنْ الْبَيْتِ فَقَامَ رَسُولُ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏فَكَبَّرَ فَقُمْنَا وَرَاءَهُ فَصَلَّى رَكْعَتَيْنِ ثُمَّ سَلَّمَ قَالَ وَحَبَسْنَاهُ عَلَى ‏ ‏خَزِيرٍ ‏ ‏صَنَعْنَاهُ لَهُ قَالَ ‏ ‏فَثَابَ ‏ ‏رِجَالٌ مِنْ أَهْلِ الدَّارِ حَوْلَنَا حَتَّى اجْتَمَعَ فِي الْبَيْتِ رِجَالٌ ذَوُو عَدَدٍ فَقَالَ قَائِلٌ مِنْهُمْ أَيْنَ ‏ ‏مَالِكُ بْنُ الدُّخْشُنِ ‏ ‏فَقَالَ بَعْضُهُمْ ذَلِكَ مُنَافِقٌ لَا يُحِبُّ اللَّهَ وَرَسُولَهُ فَقَالَ رَسُولُ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏لَا تَقُلْ لَهُ ذَلِكَ أَلَا تَرَاهُ قَدْ قَالَ لَا إِلَهَ إِلَّا اللَّهُ يُرِيدُ بِذَلِكَ وَجْهَ اللَّهِ قَالَ قَالُوا اللَّهُ وَرَسُولُهُ أَعْلَمُ قَالَ فَإِنَّمَا نَرَى وَجْهَهُ وَنَصِيحَتَهُ لِلْمُنَافِقِينَ قَالَ فَقَالَ رَسُولُ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏فَإِنَّ اللَّهَ قَدْ حَرَّمَ عَلَى النَّارِ مَنْ قَالَ لَا إِلَهَ إِلَّا اللَّهُ يَبْتَغِي بِذَلِكَ وَجْهَ اللَّهِ ‏

قَالَ ‏ ‏ابْنُ شِهَابٍ ‏ ‏ثُمَّ سَأَلْتُ ‏ ‏الْحُصَيْنَ بْنَ مُحَمَّدٍ الْأَنْصَارِيَّ ‏ ‏وَهُوَ أَحَدُ ‏ ‏بَنِي سَالِمٍ ‏ ‏وَهُوَ مِنْ ‏ ‏سَرَاتِهِمْ ‏ ‏عَنْ حَدِيثِ ‏ ‏مَحْمُودِ بْنِ الرَّبِيعِ ‏ ‏فَصَدَّقَهُ بِذَلِكَ ‏ ‏و حَدَّثَنَا ‏ ‏مُحَمَّدُ بْنُ رَافِعٍ ‏ ‏وَعَبْدُ بْنُ حُمَيْدٍ ‏ ‏كِلَاهُمَا ‏ ‏عَنْ ‏ ‏عَبْدِ الرَّزَّاقِ ‏ ‏قَالَ أَخْبَرَنَا ‏ ‏مَعْمَرٌ ‏ ‏عَنْ ‏ ‏الزُّهْرِيِّ ‏ ‏قَالَ حَدَّثَنِي ‏ ‏مَحْمُودُ بْنُ رَبِيعٍ ‏ ‏عَنْ ‏ ‏عِتْبَانَ بْنِ مَالِكٍ ‏ ‏قَالَ أَتَيْتُ رَسُولَ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏وَسَاقَ الْحَدِيثَ بِمَعْنَى حَدِيثِ ‏ ‏يُونُسَ ‏ ‏غَيْرَ أَنَّهُ قَالَ فَقَالَ رَجُلٌ أَيْنَ ‏ ‏مَالِكُ بْنُ الدُّخْشُنِ ‏ ‏أَوْ ‏ ‏الدُّخَيْشِنِ ‏ ‏وَزَادَ فِي الْحَدِيثِ قَالَ ‏ ‏مَحْمُودٌ ‏ ‏فَحَدَّثْتُ بِهَذَا الْحَدِيثِ نَفَرًا فِيهِمْ ‏ ‏أَبُو أَيُّوبَ الْأَنْصَارِيُّ ‏ ‏فَقَالَ مَا أَظُنُّ رَسُولَ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏قَالَ مَا قُلْتَ قَالَ فَحَلَفْتُ إِنْ رَجَعْتُ إِلَى ‏ ‏عِتْبَانَ ‏ ‏أَنْ أَسْأَلَهُ قَالَ فَرَجَعْتُ إِلَيْهِ فَوَجَدْتُهُ شَيْخًا كَبِيرًا قَدْ ذَهَبَ بَصَرُهُ وَهُوَ إِمَامُ قَوْمِهِ فَجَلَسْتُ إِلَى جَنْبِهِ فَسَأَلْتُهُ عَنْ هَذَا الْحَدِيثِ فَحَدَّثَنِيهِ كَمَا حَدَّثَنِيهِ أَوَّلَ مَرَّةٍ ‏ ‏قَالَ ‏ ‏الزُّهْرِيُّ ‏ ‏ثُمَّ نَزَلَتْ بَعْدَ ذَلِكَ فَرَائِضُ وَأُمُورٌ نَرَى أَنَّ الْأَمْرَ انْتَهَى إِلَيْهَا فَمَنْ اسْتَطَاعَ أَنْ لَا يَغْتَرَّ فَلَا يَغْتَرَّ ‏ ‏و حَدَّثَنَا ‏ ‏إِسْحَقُ بْنُ إِبْرَاهِيمَ ‏ ‏أَخْبَرَنَا ‏ ‏الْوَلِيدُ بْنُ مُسْلِمٍ ‏ ‏عَنْ ‏ ‏الْأَوْزَاعِيِّ ‏ ‏قَالَ حَدَّثَنِي ‏ ‏الزُّهْرِيُّ ‏ ‏عَنْ ‏ ‏مَحْمُودِ بْنِ الرَّبِيعِ ‏ ‏قَالَ ‏ ‏إِنِّي ‏ ‏لَأَعْقِلُ ‏ ‏مَجَّةً ‏ ‏مَجَّهَا ‏ ‏رَسُولُ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏مِنْ دَلْوٍ فِي دَارِنَا قَالَ ‏ ‏مَحْمُودٌ ‏ ‏فَحَدَّثَنِي ‏ ‏عِتْبَانُ بْنُ مَالِكٍ ‏ ‏قَالَ قُلْتُ يَا رَسُولَ اللَّهِ إِنَّ بَصَرِي قَدْ سَاءَ وَسَاقَ الْحَدِيثَ إِلَى قَوْلِهِ فَصَلَّى بِنَا رَكْعَتَيْنِ وَحَبَسْنَا رَسُولَ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏عَلَى ‏ ‏جَشِيشَةٍ ‏ ‏صَنَعْنَاهَا لَهُ وَلَمْ يَذْكُرْ مَا بَعْدَهُ مِنْ زِيَادَةِ ‏ ‏يُونُسَ ‏ ‏وَمَعْمَرٍ

நான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் சென்று, “அல்லாஹ்வின் தூதரே! நான் என் (பனூஸாலிம்) சமூகத்தாருக்குத் தொழுகை நடத்துபவனாக இருக்கின்றேன். நான் கண் பார்வையை இழந்துவருகிறேன். மழை வந்தால் எனக்கும் அவர்களுக்குமிடையே உள்ள பள்ளத்தாக்கில் வெள்ளநீர் வழிந்தோடும். இந்நிலையில் அவர்களுடைய பள்ளிவாசலுக்குச் சென்று அவர்களுக்கு என்னால் தொழவைக்க இயலுவதில்லை. ஆகவே,அல்லாஹ்வின் தூதரே! தாங்கள் வந்து (எனது வீட்டில்) ஓரிடத்தில் தொழுகை நடத்த வேண்டுமென்றும், (தாங்கள் நின்று தொழும்) அந்த இடத்தை நான் (என்) தொழுமிடமாக ஆக்கிக்கொள்ள வேண்டுமென்றும் விரும்புகிறேன்” என்று சொன்னேன். அதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “இன்ஷா அல்லாஹ் (இறைவன் நாடினால்) நான் (அவ்வாறே) செய்வேன்” என்று சொன்னார்கள்.

மறுநாள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களும் அபூபக்ரு அஸ்ஸித்தீக் (ரலி) அவர்களும் நண்பகல் நேரத்தில் என்னிடம் வந்தனர். (என் இல்லத்தினுள் நுழைய) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அனுமதி கேட்டார்கள். நான் அனுமதியளித்தேன். உள்ளே வந்த அல்லாஹ்வின் தூதர் (ஸல்) உட்காராமல் என்னிடம், “உங்கள் வீட்டில் எந்த இடத்தில் நான் தொழ வேண்டுமென நீங்கள் விரும்புகிறீர்கள்?” என்று கேட்டார்கள். நான் வீட்டின் ஒரு மூலையைக் காட்டினேன். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) (அந்த இடத்தில்) நின்று தக்பீர் சொன்னார்கள். நாங்கள் அவர்களுக்குப் பின்னே (அணிவகுத்து) நின்றோம். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) இரண்டு ரக்அத்கள் தொழுது, ஸலாம் கொடுத்தார்கள். நாங்கள் அவர்களுக்காகச் சமைத்திருந்த கஸீர் எனும் (கூழ்) உணவி(னை விருந்தளிப்பத)ற்காக அவர்களை இருக்க வைத்தோம்.

அந்தப் பகுதி மக்கள் (செய்தியறிந்து திரண்டு வந்து) எங்களைச் சுற்றிக் குழுமிவிட்டனர். நிறைய மக்கள் (சிறுகச் சிறுக) வந்து (என்) வீட்டில் திரண்டுவிட்டனர். அவர்களில் ஒருவர், “மாலிக் பின் துக்’ஷுன் எங்கே?” என்று கேட்டார். அதற்கு அவர்களில் மற்றொருவர், “அவர் அல்லாஹ்வையும் அல்லாஹ்வுடைய தூதரையும் நேசிக்காத ஒரு நயவஞ்சகர் (அவர் வரவில்லை)” என்று சொன்னார். அல்லாஹ்வின் தூதர் (ஸல்), “அவரைப் பற்றி அவ்வாறு சொல்லாதீர்கள். அல்லாஹ்வின் திருப்தியை நாடியவராக அவர் ‘லா இலாஹ இல்லல்லாஹ்’ என்று சொன்னதை நீங்கள் அறியவில்லையா?” என்று கேட்டார்கள். அதற்கு மக்கள் “அல்லாஹ்வும் அவனுடைய தூதரும் நன்கு அறிந்தவர்கள்” என்று கூறினார்கள். ஆனால், (நயவஞ்சகர் என்று குறிப்பிட்ட) அவர், “அவர் (மாலிக் பின் துக்’ஷுன்) நயவஞ்சகர்களுடன் தொடர்பு வைத்திருப்பதையும் அவர்கள்மீது அபிமானம் கொண்டிருப்பதையுமே நாங்கள் காண்கிறோம்” என்று சொன்னார். அதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்), “அல்லாஹ்வின் திருப்தியை நாடி லா இலாஹ இல்லல்லாஹ் என்று சொன்னவரை நரகத்திலிருந்து அல்லாஹ் தடுத்து (ஹராமாக்கி)விட்டான்” என்று கூறினார்கள்.

அறிவிப்பாளர் : இத்பான் பின் மாலிக் (ரலி)

குறிப்பு :

இந்த ஹதீஸின் அறிவிப்பாளரான இத்பான் பின் மாலிக் (ரலி) பத்ருப் போராளியாவார்.

“பனூஸாலிம் குலத்தைச் சேர்ந்தவரும் அவர்களில் முக்கியப் பிரமுகருமான ஹுஸைன் பின் முஹம்மத் அல்அன்ஸாரீ (ரஹ்) அவர்களிடம் (எனக்கு) மஹ்மூத் பின் அர்ரபீஉ அல்அன்ஸாரீ (ரலி) அறிவித்த இந்த ஹதீஸ் குறித்துக் கேட்டேன். அவர்கள் அதை ‘உண்மைதான்’ என உறுதிப்படுத்தினார்கள்” என்று அறிவிப்பாளர்களில் ஒருவரான இப்னு ஷிஹாப் அஸ்ஸுஹ்ரீ (ரஹ்) கூறுகின்றார்.

மஃமர் (ரஹ்) வழி அறிவிப்பில், “(கூடியிருந்த மக்களில்) ஒருவர், மாலிக் பின் துக்’ஷுன் அல்லது துகைஷின் எங்கே? என்று கேட்டார்” என்று இடம்பெற்றுள்ளது.

மேலும், ” நான் இந்த ஹதீஸைச் சிலரிடம் அறிவித்தபோது அவர்களிடையே அபூஅய்யூப் அல் அன்ஸாரீ (ரலி) அவர்களும் இருந்தார்கள். அவர்கள், ‘நீங்கள் சொன்னதைப் போன்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) கூறியிருப்பார்கள் என்று நான் கருதவில்லை’ என்றார்கள். உடனே நான் ‘இத்பான் பின் மாலிக் (ரலி) அவர்களிடம் திரும்பச் சென்றால் அவர்களிடம் இது குறித்து (மீண்டும்) கேட்பேன்’ என்று உறுதியிட்டேன். அவ்வாறே நான் இத்பான் பின் மாலிக் (ரலி) அவர்களிடம் சென்றேன். இத்பான் (ரலி) பார்வையை இழந்த முதியவராக இருந்தார்கள்; தம் சமூகத்தாருக்கு இமாமாக (தொழுகை நடத்துபவராக) இருந்தார்கள். அவர்களுக்கு அருகில் நான் அமர்ந்து இந்த ஹதீஸ் தொடர்பாகக் கேட்டேன். அப்போது அவர்கள் முதல்முறை அறிவித்ததைப் போன்றே எனக்கு அறிவித்தார்கள்” என்று அறிவிப்பாளர்களுள் ஒருவரான மஹ்மூத் பின் அர்ரபீஉ (ரலி) கூறியதாக மஃமர் (ரஹ்) வழி அறிவிப்பில் அதிகப்படியாக இடம்பெற்றுள்ளது:

“இந்த நிகழ்ச்சிக்குப் பின்னர்தான் வாரிசுரிமைச் சட்டங்கள் அருளப்பெற்றன. அவை அருளப்பெற்றதோடு வாரிசுரிமை விதிகள் நிறைவடைந்தன. எனவே, ஏமாற விரும்பாதவர் ஏமாறிவிடாதிருக்கட்டும்” என்று இப்னு ஷிஹாப் அஸ்ஸுஹ்ரீ (ரஹ்) கூறுகின்றார்.

அல்வலீத் பின் முஸ்லிம் (ரஹ்) வழி அறிவிப்பில், “(நான் சிறுவனாக இருந்தபோது) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) ஒருமுறை எங்கள் வீட்டிலிருந்த (கிணற்றிலிருந்து) வாளியில் தண்ணீர் எடுத்து(த் தமது வாயில் ஊற்றி என் முகத்தில் செல்லமாக) உமிழ்ந்ததை நான் (இப்போதும்) நினைவில் வைத்திருக்கிறேன்” என்று மஹ்மூத் பின் அர்ரபீஉ அல்அன்ஸாரீ (ரலி) நினைவு கூர்கிறார். மேலும் தம்மிடம் இத்பான் பின் மாலிக் (ரலி) அறிவித்த, “அல்லாஹ்வின் தூதரே! என் பார்வை கெட்டுவிட்டது…” என்று தொடங்கி, “அல்லாஹ்வின் தூதர் (ஸல்) எங்களுக்கு இரண்டு ரக்அத்கள் தொழுவித்தார்கள். நாங்கள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுக்காகத் தயாரித்திருந்த கோதுமைக்கூழை முன்னிட்டு அவர்களை இருக்க வைத்தோம்” என்ற கூற்றோடு ஹதீஸ் முடிகிறது. அதற்குப் பின்புள்ள குறிப்புகள் இடம்பெறவில்லை.

Share this Hadith:

Leave a Comment