அத்தியாயம்: 5, பாடம்: 49, ஹதீஸ் எண்: 1055

حَدَّثَنِي ‏ ‏زُهَيْرُ بْنُ حَرْبٍ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏هَاشِمُ بْنُ الْقَاسِمِ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏سُلَيْمَانُ ‏ ‏عَنْ ‏ ‏ثَابِتٍ ‏ ‏عَنْ ‏ ‏أَنَسٍ ‏ ‏قَالَ ‏

دَخَلَ النَّبِيُّ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏عَلَيْنَا وَمَا هُوَ إِلَّا أَنَا وَأُمِّي ‏ ‏وَأُمُّ حَرَامٍ ‏ ‏خَالَتِي فَقَالَ قُومُوا فَلِأُصَلِّيَ بِكُمْ ‏ ‏فِي غَيْرِ وَقْتِ صَلَاةٍ ‏ ‏فَصَلَّى بِنَا فَقَالَ رَجُلٌ ‏ ‏لِثَابِتٍ ‏ ‏أَيْنَ جَعَلَ ‏ ‏أَنَسًا ‏ ‏مِنْهُ قَالَ جَعَلَهُ عَلَى يَمِينِهِ ثُمَّ دَعَا لَنَا أَهْلَ الْبَيْتِ بِكُلِّ خَيْرٍ مِنْ خَيْرِ الدُّنْيَا وَالْآخِرَةِ فَقَالَتْ أُمِّي يَا رَسُولَ اللَّهِ خُوَيْدِمُكَ ادْعُ اللَّهَ لَهُ قَالَ فَدَعَا لِي ‏ ‏بِكُلِّ خَيْرٍ وَكَانَ فِي آخِرِ مَا دَعَا لِي ‏ ‏بِهِ أَنْ قَالَ ‏ ‏اللَّهُمَّ أَكْثِرْ مَالَهُ وَوَلَدَهُ وَبَارِكْ لَهُ فِيهِ

நபி (ஸல்) (ஒரு நாள்) எங்களிடம் (வீட்டுக்கு) வந்தார்கள். அப்போது (வீட்டில்) நான், என் தாயார், என் சிறிய தாயார் உம்முஹராம் (ரலி) ஆகியோர் மட்டுமே இருந்தோம். நபி (ஸல்), “எழுங்கள்! உங்களுக்காக நான் (நஃபில்) தொழுவிக்கப் போகிறேன்” என்று கூறிவிட்டு எங்களுக்குத் (தலைமை தாங்கித்) தொழுவித்தார்கள். அது கடமையான தொழுகையின் நேரமல்ல.

பின்னர், நபி (ஸல்) எங்கள் குடும்பத்தாருக்காக இம்மை-மறுமைக்கான எல்லா நன்மைகளையும் வேண்டிப் பிரார்த்தித்தார்கள். அப்போது என் தாயார், “அல்லாஹ்வின் தூதரே! உங்களுடைய சேவகச் சிறுவருக்காக நீங்கள் பிரார்த்தியுங்கள்!” என்றார். நபி (ஸல்), எனக்காக எல்லா விதமான நன்மையும் வேண்டிப் பிரார்த்தித்தார்கள். அவர்கள் எனக்காகச் செய்த பிரார்த்தனையின் இறுதியில், “இறைவா! அனஸுக்குச் செல்வத்தையும் குழந்தைகளையும் அதிகமாக்குவாயாக! அதில் அவருக்கு வளம் சேர்ப்பாயாக!” என்று பிரார்த்தித்தார்கள்.

அறிவிப்பாளர் : அனஸ் பின் மாலிக் (ரலி)

குறிப்பு :

இதன் அறிவிப்பாளரான ஸாபித் (ரஹ்) அவர்களிடம் ஒருவர், “நபி (ஸல்), அனஸ் (ரலி) அவர்களைத் தமக்கு (அருகில்) எந்தப் பக்கத்தில் நிறுத்தினார்கள்?” என்று கேட்டார். அதற்கு ஸாபித் (ரஹ்), “நபி (ஸல்), அனஸ் (ரலி) அவர்களைத் தமக்கு வலப் பக்கத்தில் நிறுத்தினார்கள்” என்று பதிலளித்தார்கள்.

Share this Hadith:

Leave a Comment