حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ بَرَّادٍ الْأَشْعَرِيُّ وَأَبُو كُرَيْبٍ قَالَا حَدَّثَنَا أَبُو أُسَامَةَ عَنْ بُرَيْدٍ عَنْ أَبِي بُرْدَةَ عَنْ أَبِي مُوسَى قَالَ:
قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ إِنَّ أَعْظَمَ النَّاسِ أَجْرًا فِي الصَّلَاةِ أَبْعَدُهُمْ إِلَيْهَا مَمْشًى فَأَبْعَدُهُمْ وَالَّذِي يَنْتَظِرُ الصَّلَاةَ حَتَّى يُصَلِّيَهَا مَعَ الْإِمَامِ أَعْظَمُ أَجْرًا مِنْ الَّذِي يُصَلِّيهَا ثُمَّ يَنَامُ
وَفِي رِوَايَةِ أَبِي كُرَيْبٍ حَتَّى يُصَلِّيَهَا مَعَ الْإِمَامِ فِي جَمَاعَةٍ
“மக்களில் தொழுகைக்கான அதிக நன்மைகளை அடைந்து கொள்பவர், வெகு தொலைவிலிருந்து நடந்துவருபவர் ஆவார். அடுத்து, அதற்குக் குறைவான தொலைவிலிருந்து வருபவர் ஆவார். (தனியாகத்) தொழுதுவிட்டு உறங்கிவிடுபவரைவிட இமாமுடன் தொழக் காத்திருப்பவர், அதிக நன்மை அடைபவராவார்” என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) கூறினார்கள்.
அறிவிப்பாளர் : அபூமூஸா அல்அஷ்அரீ (ரலி)
குறிப்பு :
அபூகுரைப் (ரஹ்) வழி அறிவிப்பில் அதிக நன்மையடைவரைப் பற்றி, “இமாமுடன் ஜமாஅத்தாகத் தொழக் காத்திருப்பவர்” எனக் குறிப்பிடப் பட்டுள்ளது.