حَدَّثَنَا قُتَيْبَةُ بْنُ سَعِيدٍ وَأَبُو كَامِلٍ الْجَحْدَرِيُّ وَاللَّفْظُ لِقُتَيْبَةَ قَالَا حَدَّثَنَا أَبُو عَوَانَةَ عَنْ أَبِي يَعْفُورٍ عَنْ مُصْعَبِ بْنِ سَعْدٍ قَالَ :
صَلَّيْتُ إِلَى جَنْبِ أَبِي قَالَ وَجَعَلْتُ يَدَيَّ بَيْنَ رُكْبَتَيَّ فَقَالَ لِي أَبِي اضْرِبْ بِكَفَّيْكَ عَلَى رُكْبَتَيْكَ قَالَ ثُمَّ فَعَلْتُ ذَلِكَ مَرَّةً أُخْرَى فَضَرَبَ يَدَيَّ وَقَالَ إِنَّا نُهِينَا عَنْ هَذَا وَأُمِرْنَا أَنْ نَضْرِبَ بِالْأَكُفِّ عَلَى الرُّكَبِ
حَدَّثَنَا خَلَفُ بْنُ هِشَامٍ حَدَّثَنَا أَبُو الْأَحْوَصِ قَالَ ح و حَدَّثَنَا ابْنُ أَبِي عُمَرَ حَدَّثَنَا سُفْيَانُ كِلَاهُمَا عَنْ أَبِي يَعْفُورٍ بِهَذَا الْإِسْنَادِ إِلَى قَوْلِهِ فَنُهِينَا عَنْهُ وَلَمْ يَذْكُرَا مَا بَعْدَهُ
நான் என் தந்தையின் விலாப் புறத்தில் (நின்று) தொழுதேன். அப்போது நான் (ருகூஉவில்) என்னிரு கைகளையும் (கோத்து) என் இரு முழங்கால்களுக்கு நடுவே வைத்துக் கொள்ளலானேன். உடனே என் தந்தை, “உன் உள்ளங்கைகளை முழங்கால்கள் மீதுவை” என்று சொன்னார்கள். நான் மீண்டும் (முன்னர் செய்த) அவ்வாறே செய்தேன். அவர்கள் என் கைகள் மீது அடித்துவிட்டு, “இவ்வாறு செய்ய வேண்டாம் என எங்களுக்குத் தடை விதிக்கப்பட்டுவிட்டது. உள்ளங்கைகளை முழங்கால்கள்மீது வைக்கும்படி எங்களுக்கு உத்தரவிடப்பட்டது” என்று கூறினார்கள்.
அறிவிப்பாளர் : ஸஅத் பின் அபீவக்காஸ் (ரலி) வழியாக அவரின் மகன் முஸ்அப் (ரஹ்)
குறிப்புகள் :
1. ஸுஃப்யான் (ரஹ்) வழி அறிவிப்பில், “… இவ்வாறு செய்ய வேண்டாம் என எங்களுக்குத் தடை விதிக்கப்பட்டுவிட்டது” என்பதுவரை மட்டுமே இடம்பெற்றுள்ளது.
2. தொடக்கக்காலத்தில், தொழுகையின் இடையிடையே ஒருவருக்கொருவர் கட்டாயங் கருதி பேசிக் கொண்டதாக அறிய முடிகிறது.