அத்தியாயம்: 5, பாடம்: 09, ஹதீஸ் எண்: 843

حَدَّثَنَا ‏ ‏مُحَمَّدُ بْنُ سَلَمَةَ الْمُرَادِيُّ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏عَبْدُ اللَّهِ بْنُ وَهْبٍ ‏ ‏عَنْ ‏ ‏مُعَاوِيَةَ بْنِ صَالِحٍ ‏ ‏يَقُولُ حَدَّثَنِي ‏ ‏رَبِيعَةُ بْنُ يَزِيدَ ‏ ‏عَنْ ‏ ‏أَبِي إِدْرِيسَ الْخَوْلَانِيِّ ‏ ‏عَنْ ‏ ‏أَبِي الدَّرْدَاءِ ‏ ‏قَالَ :‏‏

‏قَامَ رَسُولُ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏فَسَمِعْنَاهُ يَقُولُ ‏ ‏أَعُوذُ بِاللَّهِ مِنْكَ ثُمَّ قَالَ أَلْعَنُكَ بِلَعْنَة اللَّهِ ثَلَاثًا وَبَسَطَ يَدَهُ كَأَنَّهُ يَتَنَاوَلُ شَيْئًا فَلَمَّا فَرَغَ مِنْ الصَّلَاةِ قُلْنَا يَا رَسُولَ اللَّهِ قَدْ سَمِعْنَاكَ تَقُولُ فِي الصَّلَاةِ شَيْئًا لَمْ نَسْمَعْكَ تَقُولُهُ قَبْلَ ذَلِكَ وَرَأَيْنَاكَ بَسَطْتَ يَدَكَ قَالَ إِنَّ عَدُوَّ اللَّهِ إِبْلِيسَ جَاءَ بِشِهَابٍ مِنْ نَارٍ لِيَجْعَلَهُ فِي وَجْهِي فَقُلْتُ أَعُوذُ بِاللَّهِ مِنْكَ ثَلَاثَ مَرَّاتٍ ثُمَّ قُلْتُ أَلْعَنُكَ بِلَعْنَةِ اللَّهِ التَّامَّةِ فَلَمْ يَسْتَأْخِرْ ثَلَاثَ مَرَّاتٍ ثُمَّ أَرَدْتُ أَخْذَهُ وَاللَّهِ لَوْلَا دَعْوَةُ أَخِينَا ‏ ‏سُلَيْمَانَ ‏ ‏لَأَصْبَحَ مُوثَقًا يَلْعَبُ بِهِ وِلْدَانُ أَهْلِ ‏ ‏الْمَدِينَةِ

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) (ஒரு நாள்) தொழும்போது, “நான் உன்னிடமிருந்து அல்லாஹ்விடம் பாதுகாப்புக் கோருகின்றேன்” என்றும் “அல்லாஹ்வின் சாபத்தால் உன்னை நான் சபிக்கின்றேன்” என்றும் மூன்றுமுறை கூறியதை நாங்கள் செவியுற்றோம். மேலும், அவர்கள் தமது கரத்தை விரித்து எதையோ பிடிப்பதைப் போன்று சைகை செய்தார்கள். தொழுது முடித்ததும் நாங்கள், “அல்லாஹ்வின் தூதரே! நீங்கள் தொழும்போது, நாங்கள் இதுவரைச் செவியுறாத ஒன்றைக் கூறினீர்கள். மேலும், நீங்கள் உங்கள் கரத்தை விரித்ததையும் நாங்கள் கண்டோம்” என்று கேட்டோம். அதற்கு அவர்கள், “அல்லாஹ்வின் எதிரி இப்லீஸ் ஒரு தீப்பந்தத்தை ஏந்திக் கொண்டு அதை என் முகத்தில் வைக்க (என்னிடம்) வந்தான். உடனே நான் உன்னிடமிருந்து அல்லாஹ்விடம் பாதுகாப்புக் கோருகின்றேன் என்று மூன்று முறையும் அல்லாஹ்வின் முழு சாபத்தால் உன்னை நான் சபிக்கின்றேன் என மூன்று முறையும் கூறினேன். ஆனால், அவன் பின்வாங்கிச் செல்லவில்லை. பிறகு நான் அவனைப் பிடிக்க நினைத்தேன். அல்லாஹ்வின் மீதாணையாக! எம் சகோதரர் ஸுலைமான் (அலை) அவர்களின் வேண்டுதல் மட்டும் இல்லையாயின், காலையில் மதீனத்துச் சிறுவர்கள் அவனைச் சீண்டி விளையாடும் வகையில் (இந்தப் பள்ளிவாசலில்) அவன் கட்டிவைக்கப்பட்டிருப்பான்” என்று சொன்னார்கள்.

அறிவிப்பாளர் : அபுத்தர்தா (ரலி)

Share this Hadith:

Leave a Comment