அத்தியாயம்: 51, பாடம்: 1, ஹதீஸ் எண்: 4961

حَدَّثَنَا عُبَيْدُ اللَّهِ بْنُ مُعَاذٍ الْعَنْبَرِيُّ، حَدَّثَنَا أَبِي، حَدَّثَنَا قُرَّةُ بْنُ خَالِدٍ، عَنْ أَبِي الزُّبَيْرِ، عَنْ جَابِرِ بْنِ عَبْدِ اللَّهِ قَالَ :‏

قَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم ‏”‏ مَنْ يَصْعَدُ الثَّنِيَّةَ ثَنِيَّةَ الْمُرَارِ فَإِنَّهُ يُحَطُّ عَنْهُ مَا حُطَّ عَنْ بَنِي إِسْرَائِيلَ ‏”‏ ‏.‏ قَالَ فَكَانَ أَوَّلَ مَنْ صَعِدَهَا خَيْلُنَا خَيْلُ بَنِي الْخَزْرَجِ ثُمَّ تَتَامَّ النَّاسُ فَقَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم ‏”‏ وَكُلُّكُمْ مَغْفُورٌ لَهُ إِلاَّ صَاحِبَ الْجَمَلِ الأَحْمَرِ ‏”‏ ‏.‏ فَأَتَيْنَاهُ فَقُلْنَا لَهُ تَعَالَ يَسْتَغْفِرْ لَكَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم فَقَالَ وَاللَّهِ لأَنْ أَجِدَ ضَالَّتِي أَحَبُّ إِلَىَّ مِنْ أَنْ يَسْتَغْفِرَ لِي صَاحِبُكُمْ ‏.‏ قَالَ وَكَانَ رَجُلٌ يَنْشُدُ ضَالَّةً لَهُ ‏


وَحَدَّثَنَاهُ يَحْيَى بْنُ حَبِيبٍ الْحَارِثِيُّ، حَدَّثَنَا خَالِدُ بْنُ الْحَارِثِ، حَدَّثَنَا قُرَّةُ، حَدَّثَنَا أَبُو الزُّبَيْرِ، عَنْ جَابِرِ بْنِ عَبْدِ اللَّهِ، قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم ‏ “‏ مَنْ يَصْعَدُ ثَنِيَّةَ الْمُرَارِ أَوِ الْمَرَارِ ‏”‏ ‏.‏ بِمِثْلِ حَدِيثِ مُعَاذٍ غَيْرَ أَنَّهُ قَالَ وَإِذَا هُوَ أَعْرَابِيٌّ جَاءَ يَنْشُدُ ضَالَّةً لَهُ ‏‏

அல்லாஹ்வின் தூதர் (ஸல்), “யார் (குறைஷியரின் குதிரைப் படையை நோட்டமிடுவதற்காக ஹுதைபிய்யா அருகிலுள்ள) ‘ஸனிய்யத்துல் முரார்’ கணவாயில் (முதலில்) ஏறுகின்றாரோ அவருக்கு பனூ இஸ்ராயீல் சமுதாயத்துக்கு மன்னிப்பு வழங்கப்பட்டதைப் போன்று மன்னிப்பு வழங்கப்படும்” என்று கூறினார்கள்.

‘கஸ்ரஜ்’ குலத்தைச் சேர்ந்த எங்களது குதிரைப் படையினரே அதன் மீது முதலில் ஏறினர். பிறகு மற்றவர்கள் ஏறினர். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்), “சிவப்பு ஒட்டகத்தில் வரும் ஒருவரைத் தவிர மற்ற அனைவரும் பாவமன்னிப்பு அளிக்கப்பட்டுவிட்டனர்” என்று கூறினார்கள்.

உடனே நாங்கள் அவரிடம் சென்று, “நீ வந்து, அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் உனக்காகப் பாவமன்னிப்புக் கோரச் சொல்” என்று கூறினோம்.

அதற்கு அவர், “அல்லாஹ்வின் மீது சத்தியமாக! உங்கள் தோழரிடம் எனக்குப் பாவமன்னிப்புக் கோருவதைவிட காணாமற்போன எனது ஒட்டகம் (திரும்பக்) கிடைப்பதே எனக்கு மிகவும் விருப்பமானதாகும்” என்று சொன்னார். அப்போது அவர் காணாமற்போன தனது ஒட்டகத்தைத் தேடிக்கொண்டிருந்தார்.

அறிவிப்பாளர் : ஜாபிர் பின் அப்தில்லாஹ் (ரலி)


குறிப்பு :

காலித் பின் அல் ஹாரிஸ் (ரஹ்) வழி அறிவிப்பு, “யார் ஸனிய்யத்துல் முரார் / ஸனிய்யத்துல் மரார் கணவாயில் முதலில் ஏறுகின்றாரோ…” என்று ஆரம்பமாகி மேற்கண்ட ஹதீஸில் உள்ளதைப் போன்றே இடம்பெற் றுள்ளது.

இந்த அறிவிப்பில், “அப்போது கிராமவாசியொருவர் தமது காணாமற்போன ஒட்டகத்தைத் தேடிக்கொண்டு வந்தார்” என்றும் இடம் பெற்றுள்ளது.

Share this Hadith: