அத்தியாயம்: 52, பாடம்: 01, ஹதீஸ் எண்: 4971

حَدَّثَنَا سَعِيدُ بْنُ مَنْصُورٍ، حَدَّثَنَا يَعْقُوبُ، – يَعْنِي ابْنَ عَبْدِ الرَّحْمَنِ – حَدَّثَنِي أَبُو حَازِمٍ عَنْ عُبَيْدِ اللَّهِ بْنِ مِقْسَمٍ، أَنَّهُ نَظَرَ إِلَى عَبْدِ اللَّهِ بْنِ عُمَرَ كَيْفَ يَحْكِي رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم قَالَ ‏ :‏ ‏

“‏ يَأْخُذُ اللَّهُ عَزَّ وَجَلَّ سَمَوَاتِهِ وَأَرَضِيهِ بِيَدَيْهِ فَيَقُولُ أَنَا اللَّهُ – وَيَقْبِضُ أَصَابِعَهُ وَيَبْسُطُهَا – أَنَا الْمَلِكُ ‏”‏ حَتَّى نَظَرْتُ إِلَى الْمِنْبَرِ يَتَحَرَّكُ مِنْ أَسْفَلِ شَىْءٍ مِنْهُ حَتَّى إِنِّي لأَقُولُ أَسَاقِطٌ هُوَ بِرَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم


حَدَّثَنَا سَعِيدُ بْنُ مَنْصُورٍ، حَدَّثَنَا عَبْدُ الْعَزِيزِ بْنُ أَبِي حَازِمٍ، حَدَّثَنِي أَبِي، عَنْ عُبَيْدِ اللَّهِ بْنِ مِقْسَمٍ عَنْ عَبْدِ اللَّهِ بْنِ عُمَرَ، قَالَ رَأَيْتُ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم عَلَى الْمِنْبَرِ وَهُوَ يَقُولُ ‏ “‏ يَأْخُذُ الْجَبَّارُ عَزَّ وَجَلَّ سَمَوَاتِهِ وَأَرَضِيهِ بِيَدَيْهِ ‏”‏ ‏.‏ ثُمَّ ذَكَرَ نَحْوَ حَدِيثِ يَعْقُوبَ ‏.‏

அல்லாஹ்வின் தூதர் (ஸல்), “வல்லமையும் மாண்பும் மிக்க அல்லாஹ் தன் வானங்களையும் தன் பூமிகளையும் தன்னுடைய இரு கரங்களிலும் எடுத்துக்கொண்டு, ‘நானே அல்லாஹ். நானே அரசன்’ என்று கூறுவான்” என்றார்கள். இதைக் கூறியபோது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) தம் விரல்களை மடக்கிவிட்டு, பிறகு அவற்றை விரித்தார்கள்.

இதைக் கூறுகையில் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) நின்றுகொண்டிருந்த மிம்பர் கீழே அசைந்துகொண்டிருந்ததை நான் கண்டேன். எங்கே அது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களோடு கீழே சாய்ந்துவிடுமோ! என்று எனக்குள் நான் அஞ்சினேன்.

அறிவிப்பாளர் : அப்துல்லாஹ் பின் உமர் (ரலி)


குறிப்பு :

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அதை எப்படிக் கூறினார்கள் என்பதை அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) விவரிப்பதை உற்றுக் கவனித்த உபைதுல்லாஹ் பின் மிக்ஸம் (ரஹ்) அவர்கள்தாம் இதை அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்களிடமிருந்து அறிவிக்கின்றார்.

அப்துல் அஸீஸ் பின் அபீஹாஸிம் (ரஹ்) வழி அறிவிப்பு, “அல்லாஹ்வின் தூதர் (ஸல்) சொற்பொழிவு மேடை மீது நின்றுகொண்டு, வல்லமையும் மாண்பும் மிக்கவனும் அடக்கியாள்பவனுமான அல்லாஹ், தன் வானங்களையும் தன் பூமிகளையும் தன்னுடைய இரு கரங்களில் எடுத்துக்கொள்வான் …” என்று கூறினார்கள் என ஆரம்பமாகிறது. மற்ற தகவல்கள் மேற்கண்ட ஹதீஸில் உள்ளதைப் போன்றே இடம்பெறுகின்றன.

Share this Hadith: