அத்தியாயம்: 52, பாடம்: 19, ஹதீஸ் எண்: 5023

وَحَدَّثَنَا إِسْحَاقُ بْنُ إِبْرَاهِيمَ، أَخْبَرَنَا جَرِيرٌ، عَنْ مَنْصُورٍ، ح وَحَدَّثَنَا ابْنُ أَبِي عُمَرَ، – وَاللَّفْظُ لَهُ – حَدَّثَنَا فُضَيْلُ بْنُ عِيَاضٍ، عَنْ مَنْصُورٍ، عَنْ شَقِيقٍ أَبِي وَائِلٍ قَالَ :‏

كَانَ عَبْدُ اللَّهِ يُذَكِّرُنَا كُلَّ يَوْمِ خَمِيسٍ فَقَالَ لَهُ رَجُلٌ يَا أَبَا عَبْدِ الرَّحْمَنِ إِنَّا نُحِبُّ حَدِيثَكَ وَنَشْتَهِيهِ وَلَوَدِدْنَا أَنَّكَ حَدَّثْتَنَا كُلَّ يَوْمٍ ‏.‏ فَقَالَ مَا يَمْنَعُنِي أَنْ أُحَدِّثَكُمْ إِلاَّ كَرَاهِيَةُ أَنْ أُمِلَّكُمْ ‏.‏ إِنَّ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم كَانَ يَتَخَوَّلُنَا بِالْمَوْعِظَةِ فِي الأَيَّامِ كَرَاهِيَةَ السَّآمَةِ عَلَيْنَا

அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி), ஒவ்வொரு வியாழக்கிழமையும் எங்களுக்கு (ஹதீஸ் அறிவித்து) அறிவுரை வழங்குவது வழக்கம். இந்நிலையில் அவர்களிடம் ஒருவர், “அபூஅப்திர் ரஹ்மானே! உங்களின் ஹதீஸ் அறிவிப்பை நாங்கள் நேசிக்கின்றோம்; ஆசிக்கின்றோம். நீங்கள் ஒவ்வொரு நாளும் எங்களுக்கு ஹதீஸ் அறிவிப்பதை நாங்கள் பெரிதும் விரும்புகின்றோம்” என்று கூறினார்.

அதற்கு அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி), “நான் உங்களுக்குச் சடைவை ஏற்படுத்திவிடுவேனோ எனும் ஐயம்தான் உங்களுக்கு (நாள்தோறும்) ஹதீஸ் அறிவிக்கவிடாமல் என்னைத் தடுத்துவிட்டது. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) நாங்கள் சடைவு அடைவதை விரும்பாமல் (சந்தர்ப்ப சூழ்நிலைகளைக் கவனித்து) இடைவெளிவிட்டு எங்களுக்கு அறிவுரை வழங்கிவந்தார்கள்” என்று சொன்னார்கள்.

அறிவிப்பாளர் : அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி) வழியாக அபூவாயில் ஷகீக் பின் ஸலமா (ரஹ்)

Share this Hadith: