حَدَّثَنَا عُبَيْدُ اللَّهِ بْنُ مُعَاذٍ الْعَنْبَرِيُّ، حَدَّثَنَا أَبِي، حَدَّثَنَا شُعْبَةُ، عَنْ فُرَاتٍ الْقَزَّازِ، عَنْ أَبِي الطُّفَيْلِ، عَنْ أَبِي سَرِيحَةَ حُذَيْفَةَ بْنِ أَسِيدٍ قَالَ :
كَانَ النَّبِيُّ صلى الله عليه وسلم فِي غُرْفَةٍ وَنَحْنُ أَسْفَلَ مِنْهُ فَاطَّلَعَ إِلَيْنَا فَقَالَ ” مَا تَذْكُرُونَ ” . قُلْنَا السَّاعَةَ . قَالَ ” إِنَّ السَّاعَةَ لاَ تَكُونُ حَتَّى تَكُونَ عَشْرُ آيَاتٍ خَسْفٌ بِالْمَشْرِقِ وَخَسْفٌ بِالْمَغْرِبِ وَخَسْفٌ فِي جَزِيرَةِ الْعَرَبِ وَالدُّخَانُ وَالدَّجَّالُ وَدَابَّةُ الأَرْضِ وَيَأْجُوجُ وَمَأْجُوجُ وَطُلُوعُ الشَّمْسِ مِنْ مَغْرِبِهَا وَنَارٌ تَخْرُجُ مِنْ قُعْرَةِ عَدَنٍ تَرْحَلُ النَّاسَ ”
قَالَ شُعْبَةُ وَحَدَّثَنِي عَبْدُ الْعَزِيزِ بْنُ رُفَيْعٍ عَنْ أَبِي الطُّفَيْلِ عَنْ أَبِي سَرِيحَةَ . مِثْلَ ذَلِكَ لاَ يَذْكُرُ النَّبِيَّ صلى الله عليه وسلم وَقَالَ أَحَدُهُمَا فِي الْعَاشِرَةِ نُزُولُ عِيسَى ابْنِ مَرْيَمَ صلى الله عليه وسلم . وَقَالَ الآخَرُ وَرِيحٌ تُلْقِي النَّاسَ فِي الْبَحْرِ .
وَحَدَّثَنَاهُ مُحَمَّدُ بْنُ بَشَّارٍ، حَدَّثَنَا مُحَمَّدٌ، – يَعْنِي ابْنَ جَعْفَرٍ – حَدَّثَنَا شُعْبَةُ، عَنْ فُرَاتٍ، قَالَ سَمِعْتُ أَبَا الطُّفَيْلِ، يُحَدِّثُ عَنْ أَبِي سَرِيحَةَ، قَالَ كَانَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم فِي غُرْفَةٍ وَنَحْنُ تَحْتَهَا نَتَحَدَّثُ . وَسَاقَ الْحَدِيثَ بِمِثْلِهِ . قَالَ شُعْبَةُ وَأَحْسِبُهُ قَالَ تَنْزِلُ مَعَهُمْ إِذَا نَزَلُوا وَتَقِيلُ مَعَهُمْ حَيْثُ قَالُوا . قَالَ شُعْبَةُ وَحَدَّثَنِي رَجُلٌ هَذَا الْحَدِيثَ عَنْ أَبِي الطُّفَيْلِ عَنْ أَبِي سَرِيحَةَ وَلَمْ يَرْفَعْهُ قَالَ أَحَدُ هَذَيْنِ الرَّجُلَيْنِ نُزُولُ عِيسَى ابْنِ مَرْيَمَ وَقَالَ الآخَرُ رِيحٌ تُلْقِيهِمْ فِي الْبَحْرِ .
وَحَدَّثَنَاهُ مُحَمَّدُ بْنُ الْمُثَنَّى، حَدَّثَنَا أَبُو النُّعْمَانِ الْحَكَمُ بْنُ عَبْدِ اللَّهِ الْعِجْلِيُّ، حَدَّثَنَا شُعْبَةُ، عَنْ فُرَاتٍ، قَالَ سَمِعْتُ أَبَا الطُّفَيْلِ، يُحَدِّثُ عَنْ أَبِي سَرِيحَةَ، قَالَ كُنَّا نَتَحَدَّثُ فَأَشْرَفَ عَلَيْنَا رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم . بِنَحْوِ حَدِيثِ مُعَاذٍ وَابْنِ جَعْفَرٍ . وَقَالَ ابْنُ الْمُثَنَّى حَدَّثَنَا أَبُو النُّعْمَانِ الْحَكَمُ بْنُ عَبْدِ اللَّهِ، حَدَّثَنَا شُعْبَةُ، عَنْ عَبْدِ الْعَزِيزِ بْنِ رُفَيْعٍ عَنْ أَبِي الطُّفَيْلِ، عَنْ أَبِي سَرِيحَةَ، بِنَحْوِهِ قَالَ وَالْعَاشِرَةُ نُزُولُ عِيسَى ابْنِ مَرْيَمَ . قَالَ شُعْبَةُ وَلَمْ يَرْفَعْهُ عَبْدُ الْعَزِيزِ .
நபி (ஸல்) ஓர் அறையில் இருந்தார்கள். நாங்கள் கீழே இருந்தோம். அப்போது அவர்கள் எங்களை எட்டிப்பார்த்து, “என்ன பேசிக்கொண்டிருக்கின்றீர்கள்?” என்று கேட்டார்கள். நாங்கள், “யுகமுடிவைப் பற்றி (பேசிக்கொண்டிருக்கின்றோம்)” என்று சொன்னோம்.
அப்போது நபி (ஸல்) “பத்து அடையாளங்கள் நிகழாத வரை யுகமுடிவு நாள் வராது. 1. கிழக்கில் ஒரு நிலநடுக்கம் 2. மேற்கில் ஒரு நிலநடுக்கம் 3. அரபு தீபகற்பத்தில் ஒரு நிலநடுக்கம் 4. புகை 5. தஜ்ஜால் 6. பூமிக்குள்ளிருந்து வெளிப்படும் (அதிசயப்) பிராணி 7. யஃஜூஜ், மஃஜூஜ் 8. சூரியன் மேற்கிலிருந்து உதிப்பது 9. (யமன் நாட்டிலுள்ள) ஏடன் பகுதியின் கடைக்கோடியிலிருந்து ஒரு நெருப்புக் கிளம்பி மக்களை வாகனங்களில் ஏறிப் பயணம் புறப்படச் செய்வது.
அறிவிப்பாளர் : அபூஸரீஹா ஹுதைஃபா பின் அஸீத் (ரலி)
குறிப்புகள் :
ஹுதைஃபா பின் அஸீத் (ரலி) அவர்களிடமிருந்து அபுத்துஃபைல் (ரஹ்) அவர்களும் அபுத்துஃபைலிடமிருந்து அப்துல் அஸீஸ் பின் ருஃபைஉ (ரஹ்) அவர்களும் அறிவிக்கும் மற்றோர் அறிவிப்பாளர்தொடர் வழியாகவும் இந்த ஹதீஸ் எனக்குக் கிடைத்தது. அதில் மேற்கண்ட தகவல்கள் அபூஸரீஹா ஹுதைஃபா (ரலி) அவர்களின் கூற்றாகவே வந்துள்ளது. நபி (ஸல்) சொன்னதாக இல்லை. ஹுதைஃபா (ரலி) அவர்களிடமிருந்து அறிவிக்கும் இந்த ஹதீஸை மேற்கண்ட இரு அறிவிப்பாளர்களுள் ஒருவர், “பத்தாவது மர்யமின் மகன் ஈஸா (அலை) (வானிலிருந்து) இறங்குதல்” என்றும், மற்றொருவர் “ஒரு காற்று கிளம்பி மக்களைக் கடலில் தூக்கி வீசுதல்” என்றும் கூறினார்.
முஹம்மது பின் ஜஅஃபர் (ரஹ்) வழி அறிவிப்பு, “அல்லாஹ்வின் தூதர் (ஸல்) ஓர் அறையில் இருந்தார்கள். அதற்குக் கீழே நாங்கள் பேசிக்கொண்டிருந்தோம் …” என்று ஆரம்பமாகிறது. அதில் அறிவிப்பாளர்களுள் ஒருவரான ஷுஅபா (ரஹ்), “அவர்கள் வாகனங்களிலிருந்து இறங்கித் தங்கும்போதும் அவர்கள் மதிய ஓய்வு மேற்கொள்ளும்போதும் அந்த நெருப்பு அவர்களுடனேயே இருக்கும்” என்று ஃபுராத் அல்கஸ்ஸார் (ரஹ்) கூறியதாகவே நான் கருதுகிறேன் எனத் தெரிவித்ததாக இடம்பெற்றுள்ளது.
மேலும் ஷுஅபா (ரஹ்), “இந்த ஹதீஸை அபூஸரீஹா (ரலி) அவர்களிடமிருந்து அபுத்துபைல் (ரஹ்) அவர்களும் அவர்களிடமிருந்து மற்றொருவரும் எனக்கு அறிவித்தனர்” என்று கூறினார். நபி (ஸல்) கூறியதாகக் குறிப்பு இல்லை.
மேலும் அபூஸரீஹாவிடமிருந்து அறிவிக்கும் இவ்விருவரில் ஒருவர், “மர்யமின் மகன் ஈஸா (அலை) (வானிலிருந்து) இறங்குவார்கள்’ என்பதையும், மற்றொருவர் “ஒரு காற்று கிளம்பி மக்களைத் தூக்கிக் கடலில் வீசும்” என்பதையும் குறிப்பிட்டனர் என்று காணப்படுகிறது.
முஹம்மது அல்முஸன்னா (ரஹ்) வழி அறிவிப்பு, “நாங்கள் பேசிக்கொண்டிருந்தோம். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) எங்களை எட்டிப்பார்த்தார்கள் …” என்று ஆரம்பமாகிறது.
அபுந்நுஅமான் அல்ஹகீம் (ரஹ்) வழி அறிவிப்பில், “பத்தாவது அடையாளம், மர்யமின் மகன் ஈஸா (அலை) (வானிலிருந்து) இறங்குவதாகும்” என்று இடம்பெற்றுள்ளது. அதில் அப்துல் அஸீஸ் பின் ருஃபை (ரஹ்), இந்த ஹதீஸின் அறிவிப்பாளர் தொடரை அபூஸரீஹா (ரலி) கூறியதாகவே முடிக்கின்றார். நபி (ஸல்) கூறியதாக முடிக்கவில்லை.