அத்தியாயம்: 54, பாடம்: 15, ஹதீஸ் எண்: 5138

حَدَّثَنِي عَمْرٌو النَّاقِدُ، حَدَّثَنَا الأَسْوَدُ بْنُ عَامِرٍ، حَدَّثَنَا زُهَيْرٌ، عَنْ سُهَيْلِ بْنِ أَبِي صَالِحٍ عَنْ أَبِيهِ، عَنْ أَبِي هُرَيْرَةَ قَالَ :‏

قَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم ‏ “‏ تَبْلُغُ الْمَسَاكِنُ إِهَابَ أَوْ يَهَابَ ‏”‏ ‏


قَالَ زُهَيْرٌ قُلْتُ لِسُهَيْلٍ فَكَمْ ذَلِكَ مِنَ الْمَدِينَةِ قَالَ كَذَا وَكَذَا مِيلاً

“யுகமுடிவுக்கு முன் மதீனாவிலுள்ள குடியிருப்பு(ப் பகுதி)கள் ‘இஹாப்’ அல்லது ‘யஹாப்’ எனுமிடத்திற்குச் சென்றுவிடும்” என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) கூறினார்கள்.

அறிவிப்பாளர் : அபூஹுரைரா (ரலி)


குறிப்பு :

இதன் அறிவிப்பாளர்களுள் ஒருவரான ஸுஹைர் பின் முஆவியா (ரஹ்) கூறுகின்றார்:

நான் (இந்த ஹதீஸை எனக்கு அறிவித்த) ஸுஹைல் பின் அபீஸாலிஹ் (ரஹ்) அவர்களிடம், “இந்த (இஹாப்/யஹாப் எனும்) இடம் மதீனாவிலிருந்து எவ்வளவு தொலைவில் உள்ளது?” என்று கேட்டேன். அவர்கள், “இவ்வளவு … இவ்வளவு … மைல் தூரத்தில் உள்ளது” என்று பதிலளித்தார்கள்.

Share this Hadith: