அத்தியாயம்: 54, பாடம்: 18, ஹதீஸ் எண்: 5149

حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ عُمَرَ بْنِ مُحَمَّدِ بْنِ أَبَانَ بْنِ صَالِحٍ، وَمُحَمَّدُ بْنُ يَزِيدَ الرِّفَاعِيُّ، – وَاللَّفْظُ لاِبْنِ أَبَانَ – قَالاَ حَدَّثَنَا ابْنُ فُضَيْلٍ، عَنْ أَبِي إِسْمَاعِيلَ، عَنْ أَبِي حَازِمٍ، عَنْ أَبِي هُرَيْرَةَ قَالَ :‏

قَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم ‏ “‏ وَالَّذِي نَفْسِي بِيَدِهِ لاَ تَذْهَبُ الدُّنْيَا حَتَّى يَمُرَّ الرَّجُلُ عَلَى الْقَبْرِ فَيَتَمَرَّغُ عَلَيْهِ وَيَقُولُ يَا لَيْتَنِي كُنْتُ مَكَانَ صَاحِبِ هَذَا الْقَبْرِ وَلَيْسَ بِهِ الدِّينُ إِلاَّ الْبَلاَءُ ‏”‏ ‏

“என் உயிர் கையிலுள்ளவன் மீது சத்தியமாக! ஒருவர் (மற்றொருவரின்) மண்ணறையைக் கடந்து செல்லும்போது, அதன்மீது அவர் படுத்துப் புரண்டவாறு ‘அந்தோ! நான் இந்த மண்ணறையில் இருப்பவரது இடத்தில் இருக்கக் கூடாதா?’ என்று கூறாத வரை உலகம் அழியாது. இ(வ்வாறு அவர் கூறுவ)தற்கு, அவர் (வாழ்க்கையில்) சந்திக்கும் சோதனைகள் காரணமாக இருக்குமே தவிர, மார்க்கம் காரணமாக இருக்காது” என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) கூறினார்கள்.

அறிவிப்பாளர் : அபூஹுரைரா (ரலி)

Share this Hadith: