அத்தியாயம்: 54, பாடம்: 18, ஹதீஸ் எண்: 5151

وَحَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ عُمَرَ بْنِ أَبَانَ، وَوَاصِلُ بْنُ عَبْدِ الأَعْلَى، قَالاَ حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ فُضَيْلٍ عَنْ أَبِي إِسْمَاعِيلَ الأَسْلَمِيِّ، عَنْ أَبِي حَازِمٍ، عَنْ أَبِي هُرَيْرَةَ قَالَ :‏

قَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم ‏”‏ وَالَّذِي نَفْسِي بِيَدِهِ لاَ تَذْهَبُ الدُّنْيَا حَتَّى يَأْتِيَ عَلَى النَّاسِ يَوْمٌ لاَ يَدْرِي الْقَاتِلُ فِيمَ قَتَلَ وَلاَ الْمَقْتُولُ فِيمَ قُتِلَ ‏”‏ ‏.‏ فَقِيلَ كَيْفَ يَكُونُ ذَلِكَ قَالَ ‏”‏ الْهَرْجُ ‏.‏ الْقَاتِلُ وَالْمَقْتُولُ فِي النَّارِ ‏”‏ ‏


وَفِي رِوَايَةِ ابْنِ أَبَانَ قَالَ هُوَ يَزِيدُ بْنُ كَيْسَانَ عَنْ أَبِي إِسْمَاعِيلَ ‏.‏ لَمْ يَذْكُرِ الأَسْلَمِيَّ ‏.‏

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) “என் உயிர் கையிலுள்ள அ(ந்த இறை)வன் மீது சத்தியமாக! மக்களுக்கு ஒரு நாள் வராத வரை உலகம் அழியாது. அந்நாளில், கொலை செய்தவனுக்குத் தான் எதற்காகக் கொன்றோம் என்பது தெரியாது. கொல்லப்பட்டவனுக்கும் தான் எதற்காகக் கொல்லப்பட்டோம் என்பது தெரியாது” என்று கூறினார்கள்.

அப்போது “அது எப்படி நடக்கும்?” என்று கேட்கப்பட்டது. அதற்கு அல்லாஹ் வின் தூதர் (ஸல்) “கொலை சர்வ சாதாரணமாகிவிடும். கொன்றவனும் கொல்லப்பட்டவனும் நரகத்திற்குச் செல்வார்கள்” என்று கூறினார்கள்.

அறிவிப்பாளர் : அபூஹுரைரா (ரலி)


குறிப்பு :

இப்னு அபான் (ரஹ்) வழி அறிவிப்பில், “யஸீத் பின் கைஸான் (ரஹ்) வழியாக அறிவிப்பவர், அபூ இஸ்மாயீல் என்பவர் ஆவார்” என்று ‘அல் அஸ்லமீ’ எனும் அவரது குடும்பப் பெயரைத் தவிர்த்துவிட்டுக் குறிப்பிடுகின்றார்.

Share this Hadith: