அத்தியாயம்: 54, பாடம்: 20, ஹதீஸ் எண்: 5198

حَدَّثَنَا عَلِيُّ بْنُ حُجْرٍ، حَدَّثَنَا شُعَيْبُ بْنُ صَفْوَانَ، عَنْ عَبْدِ الْمَلِكِ بْنِ عُمَيْرٍ، عَنْ رِبْعِيِّ بْنِ حِرَاشٍ :‏ ‏

عَنْ عُقْبَةَ بْنِ عَمْرٍو أَبِي مَسْعُودٍ الأَنْصَارِيِّ قَالَ انْطَلَقْتُ مَعَهُ إِلَى حُذَيْفَةَ بْنِ الْيَمَانِ فَقَالَ لَهُ عُقْبَةُ حَدِّثْنِي مَا سَمِعْتَ مِنْ رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم فِي الدَّجَّالِ ‏.‏ قَالَ ‏ “‏ إِنَّ الدَّجَّالَ يَخْرُجُ وَإِنَّ مَعَهُ مَاءً وَنَارًا فَأَمَّا الَّذِي يَرَاهُ النَّاسُ مَاءً فَنَارٌ تُحْرِقُ وَأَمَّا الَّذِي يَرَاهُ النَّاسُ نَارًا فَمَاءٌ بَارِدٌ عَذْبٌ فَمَنْ أَدْرَكَ ذَلِكَ مِنْكُمْ فَلْيَقَعْ فِي الَّذِي يَرَاهُ نَارًا فَإِنَّهُ مَاءٌ عَذْبٌ طَيِّبٌ ‏”‏ ‏

فَقَالَ عُقْبَةُ وَأَنَا قَدْ سَمِعْتُهُ تَصْدِيقًا، لِحُذَيْفَةَ

நான் அபூமஸ்ஊத் உக்பா பின் அம்ரு (ரலி) அவர்களுடன் ஹுதைஃபா பின்  அல் யமான் (ரலி) அவர்களிடம் சென்றேன். உக்பா (ரலி), ஹுதைஃபா (ரலி) அவர்களிடம், “தஜ்ஜால் தொடர்பாக அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடமிருந்து நீங்கள் செவியுற்ற ஹதீஸை எனக்கு அறிவியுங்கள்” என்று கேட்டார்கள்.

அதற்கு அவர்கள், “தஜ்ஜால் (யுக முடிவு நாளுக்குமுன்) வெளிப்பட்டு வருவான். அவனுடன் நீரும் நெருப்பும் இருக்கும். மக்களுக்கு நீராகக் காட்சி தருவது (உண்மையில்) பொசுக்கும் நெருப்பாகும். மக்களுக்கு நெருப்பாகக் காட்சி தருவது (உண்மையில்) குளிரான சுவை நீராகும். உங்களில் யார் அந்த இடத்தை அடைகின்றவர் நெருப்பாகக் காட்சியளிப்பதில் விழட்டும்! ஏனெனில், அது நல்ல சுவை நீராக இருக்கும்” என்று கூறினார்கள்.

அப்போது உக்பா பின் அம்ரு (ரலி), ஹுதைஃபா (ரலி) அவர்களின் அறிவிப்பை உண்மைப்படுத்தும் விதமாக, “அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடமிருந்து நானும் (இவ்வாறே) செவியுற்றேன்” என்றார்கள்.

அறிவிப்பாளர் : ஹுதைஃபா (ரலி) வழியாக ரிப்யீ பின் ஹிராஷ் (ரஹ்)

Share this Hadith: