அத்தியாயம்: 56, பாடம்: 01, ஹதீஸ் எண்: 5318

حَدَّثَنِي هَارُونُ بْنُ عَبْدِ اللَّهِ، حَدَّثَنَا أَبُو النَّضْرِ، هَاشِمُ بْنُ الْقَاسِمِ اللَّيْثِيُّ حَدَّثَنَا أَبُو مُعَاوِيَةَ، – يَعْنِي شَيْبَانَ – عَنْ مَنْصُورِ بْنِ الْمُعْتَمِرِ، عَنْ سَعِيدِ بْنِ جُبَيْرٍ، عَنِ ابْنِ عَبَّاسٍ قَالَ :‏

نَزَلَتْ هَذِهِ الآيَةُ بِمَكَّةَ ‏{‏ وَالَّذِينَ لاَ يَدْعُونَ مَعَ اللَّهِ إِلَهًا آخَرَ‏}‏ إِلَى قَوْلِهِ ‏{‏ مُهَانًا‏}‏ فَقَالَ الْمُشْرِكُونَ وَمَا يُغْنِي عَنَّا الإِسْلاَمُ وَقَدْ عَدَلْنَا بِاللَّهِ وَقَدْ قَتَلْنَا النَّفْسَ الَّتِي حَرَّمَ اللَّهُ وَأَتَيْنَا الْفَوَاحِشَ فَأَنْزَلَ اللَّهُ عَزَّ وَجَلَّ ‏{‏ إِلاَّ مَنْ تَابَ وَآمَنَ وَعَمِلَ عَمَلاً صَالِحًا‏}‏ إِلَى آخِرِ الآيَةِ ‏.‏ قَالَ فَأَمَّا مَنْ دَخَلَ فِي الإِسْلاَمِ وَعَقَلَهُ ثُمَّ قَتَلَ فَلاَ تَوْبَةَ لَهُ ‏

“அவர்கள் அல்லாஹ்வுடன் வேறு தெய்வங்களிடம் பிரார்த்திக்கமாட்டார்கள் …” என்று தொடங்கி, “அதில் இழிவுபடுத்தப்பட்டவனாக நிரந்தரமாகத் தங்குவான்” என்பது வரையிலான (25:68,69) வசனங்கள் மக்காவில் அருளப்பெற்றன.

அப்போது இணைவைப்பாளர்கள், “இஸ்லாத்தை ஏற்றுக்கொள்வதால் எங்களுக்கு என்ன பயன்? நாங்கள் அல்லாஹ்வை விடுத்து(வேறு கடவுள்களை நோக்கி)த் திரும்பிவிட்டோம். அல்லாஹ் தடை விதித்த உயிர்களை (சட்ட ரீதியான) தக்க காரணமின்றி கொலை செய்திருக்கின்றோம். மானக்கேடான செயல்களையும் செய்தோம். (ஆகவே, இனி நாங்கள் இஸ்லாத்தைத் தழுவுவதால் எந்தப் பயனுமில்லை. எமக்குப் பாவமன்னிப்புக் கிட்டாது)” என்று கூறினர்.

ஆகவேதான் அல்லாஹ், “மனம் திருந்தி, இறைநம்பிக்கை கொண்டு நல்லறங்கள் செய்தவரைத் தவிர” என்று தொடங்கும் (25:70) வசனத்தை முழுமையாக அருளினான். ஆனால், யார் இஸ்லாத்தைத் தழுவி, அ(தன் சட்டதிட்டத்)தை அறிந்துகொண்ட பின்பும் கொலை செய்கிறாரோ அவருக்குப் பாவமன்னிப்புக் கிடையாது.

அறிவிப்பாளர் : இப்னு அப்பாஸ் (ரலி)

Share this Hadith: