حَدَّثَنَا زُهَيْرُ بْنُ حَرْبٍ وَمُحَمَّدُ بْنُ بَشَّارٍ جَمِيعًا عَنْ ابْنِ مَهْدِيٍّ قَالَ زُهَيْرٌ حَدَّثَنَا عَبْدُ الرَّحْمَنِ بْنُ مَهْدِيٍّ حَدَّثَنَا شُعْبَةُ عَنْ يَزِيدَ بْنِ خُمَيْرٍ عَنْ حَبِيبِ بْنِ عُبَيْدٍ عَنْ جُبَيْرِ بْنِ نُفَيْرٍ قَالَ خَرَجْتُ مَعَ شُرَحْبِيلَ بْنِ السِّمْطِ إِلَى قَرْيَةٍ عَلَى رَأْسِ سَبْعَةَ عَشَرَ أَوْ ثَمَانِيَةَ عَشَرَ مِيلًا فَصَلَّى رَكْعَتَيْنِ فَقُلْتُ لَهُ فَقَالَ :
رَأَيْتُ عُمَرَ صَلَّى بِذِي الْحُلَيْفَةِ رَكْعَتَيْنِ فَقُلْتُ لَهُ فَقَالَ إِنَّمَا أَفْعَلُ كَمَا رَأَيْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَفْعَلُ
و حَدَّثَنِيهِ مُحَمَّدُ بْنُ الْمُثَنَّى حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ جَعْفَرٍ حَدَّثَنَا شُعْبَةُ بِهَذَا الْإِسْنَادِ وَقَالَ عَنْ ابْنِ السِّمْطِ وَلَمْ يُسَمِّ شُرَحْبِيلَ وَقَالَ إِنَّهُ أَتَى أَرْضًا يُقَالُ لَهَا دُومِينَ مِنْ حِمْصَ عَلَى رَأْسِ ثَمَانِيَةَ عَشَرَ مِيلًا
நான் ஷுரஹ்பீல் பின் அஸ்ஸிம்து (ரஹ்) அவர்களுடன் பதினேழு அல்லது பதினெட்டு மைல் தொலைவிலிருந்த ஓர் ஊருக்குப் புறப்பட்டுச் சென்றேன். அவர்கள் (பயணத்தில்) இரண்டு ரக்அத்களே தொழுதார்கள். அப்போது அவர்களிடம் நான் (அது பற்றிக்) கேட்டேன். அதற்கு அவர்கள் கூறினார்கள்:
உமர் (ரலி) துல்ஹுலைஃபாவில் இரண்டு ரக்அத்கள் தொழுவதைப் பார்த்துவிட்டு, உமர் (ரலி) அவர்களிடம் நான் அதைப் பற்றிக் கேட்டபோது அவர்கள், “அல்லாஹ்வின் தூதர் (ஸல்) செய்ததைப் போன்றே நானும் செய்கிறேன்” என்றார்கள்.
அறிவிப்பாளர் : உமர் (ரலி) வழியாக ஷுரஹ்பீல் (ரஹ்) வழியாக ஜுபைர் பின் நுஃபைர் (ரஹ்)
குறிப்பு :
இந்த ஹதீஸ் முஹம்மது பின் ஜஅஃபர் (ரஹ்) வழி அறிவிப்பில், ஷுரஹ்பீல் (ரஹ்), அவர்தம் இயற்பெயர் இல்லாமல் ‘இப்னுஸ் ஸிம்து’ என அவரின் தந்தையின் பெயருடன் இணைந்த விளிப் பெயரால் குறிப்பிடப்படுகின்றார். மேலும் “அவர் பதினெட்டு மைல் தொலைவிலுள்ள ஹிம்ஸு பகுதியைச் சேர்ந்த ‘தூமீன்’ எனும் ஊருக்குச் சென்றார்” என்று கூடுதல் தகவலுடன் இடம்பெற்றுள்ளது.