و حَدَّثَنَا عُبَيْدُ اللَّهِ بْنُ مُعَاذٍ حَدَّثَنَا أَبِي حَدَّثَنَا شُعْبَةُ عَنْ خُبَيْبِ بْنِ عَبْدِ الرَّحْمَنِ سَمِعَ حَفْصَ بْنَ عَاصِمٍ عَنْ ابْنِ عُمَرَ قَالَ :
صَلَّى النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ بِمِنًى صَلَاةَ الْمُسَافِرِ وَأَبُو بَكْرٍ وَعُمَرُ وَعُثْمَانُ ثَمَانِيَ سِنِينَ أَوْ قَالَ سِتَّ سِنِينَ
قَالَ حَفْصٌ وَكَانَ ابْنُ عُمَرَ يُصَلِّي بِمِنًى رَكْعَتَيْنِ ثُمَّ يَأْتِي فِرَاشَهُ فَقُلْتُ أَيْ عَمِّ لَوْ صَلَّيْتَ بَعْدَهَا رَكْعَتَيْنِ قَالَ لَوْ فَعَلْتُ لَأَتْمَمْتُ الصَّلَاةَ و حَدَّثَنَاه يَحْيَى بْنُ حَبِيبٍ حَدَّثَنَا خَالِدٌ يَعْنِي ابْنَ الْحَارِثِ ح و حَدَّثَنَا ابْنُ الْمُثَنَّى قَالَ حَدَّثَنِي عَبْدُ الصَّمَدِ قَالَا حَدَّثَنَا شُعْبَةُ بِهَذَا الْإِسْنَادِ وَلَمْ يَقُولَا فِي الْحَدِيثِ بِمِنًى وَلَكِنْ قَالَا صَلَّى فِي السَّفَرِ
நபி (ஸல்), மினாவில் தொழுதபோது பயணத்திலிருப்பவர் தொழுவதைப் போன்று (கடமையான நான்கு ரக்அத்களைச் சுருக்கி இரண்டு ரக்அத்களாகத்) தொழுதார்கள். (அவ்வாறே) அபூபக்ரு (ரலி), உமர் (ரலி) ஆகியோரும் (தொழுதார்கள்). (அவ்வாறே) உஸ்மான் (ரலி), (தமது ஆட்சியின்) எட்டு அல்லது ஆறு ஆண்டுகள் (பயணத்தில் சுருக்கியே தொழுதார்கள்).
அறிவிப்பாளர் : இப்னு உமர் (ரலி)
குறிப்பு :
இப்னு உமர் (ரலி), மினாவில் இரண்டு ரக்அத்கள் தொழுதுவிட்டுப் பிறகு தமது படுக்கைக்கு வருவார்கள். அப்போது அவர்களிடம் நான், “என் தந்தையின் சகோதரரே! நீங்கள் (கடமையான) இந்தத் தொழுகைக்குப் பின் (கூடுதலான) இரண்டு ரக்அத்கள் தொழுதால் என்ன!” என்று கேட்டேன். அதற்கு, “நான் (கூடுதலான தொழுகையைத்) தொழுவதாயிருந்தால் கடமையான தொழுகையை (நான்கு ரக்அத்களாகவே) நிறைவாகத் தொழுதிருப்பேனே” என்று சொன்னார்கள் என்று ஹஃப்ஸு பின் ஆஸிம் (ரஹ்) தமது வழி அறிவிப்பில் குறிப்பிடுகின்றார்.
இபுனுல் முஸன்னா (ரஹ்), அப்துஸ்ஸமது (ரஹ்) ஆகிய இருவர்வழி அறிவிப்பில் சுருக்கித் தொழுவது என்பது ‘மினாவில்’ என்றில்லாமல் ‘பயணத்தில்’ என்றே இடம்பெறுகின்றது.