حَدَّثَنَا شَيْبَانُ بْنُ فَرُّوخَ حَدَّثَنَا عَبْدُ الْوَارِثِ حَدَّثَنَا يَزِيدُ يَعْنِي الرِّشْكَ حَدَّثَتْنِي مُعَاذَةُ أَنَّهَا سَأَلَتْ عَائِشَةَ رَضِيَ اللَّهُ عَنْهَا :
كَمْ كَانَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يُصَلِّي صَلَاةَ الضُّحَى قَالَتْ أَرْبَعَ رَكَعَاتٍ وَيَزِيدُ مَا شَاءَ
حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ الْمُثَنَّى وَابْنُ بَشَّارٍ قَالَا حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ جَعْفَرٍ حَدَّثَنَا شُعْبَةُ عَنْ يَزِيدَ بِهَذَا الْإِسْنَادِ مِثْلَهُ وَقَالَ يَزِيدُ مَا شَاءَ اللَّهُ
நான் ஆயிஷா (ரலி) அவர்களிடம், அல்லாஹ்வின் தூதர் (ஸல்) முற்பகல் நேரத்தில் எத்தனை ரக்அத்கள் தொழுவார்கள்?’ என்று கேட்டேன். அதற்கு, “நான்கு ரக்அத்கள் (தொழுவார்கள்); நாடிய அளவு கூடுதலாகவும் தொழுவார்கள்’ என ஆயிஷா (ரலி) அவர்கள் பதிலளித்தார்கள்.
அறிவிப்பாளர் : அன்னை ஆயிஷா (ரலி) வழியாக முஆதா (ரஹ்)
குறிப்பு :
யஸீத் அர்ரிஷ்க் (ரஹ்) வழி அறிவிப்பில் “… அல்லாஹ் நாடிய அளவு (கூடுதலாகவும் தொழுவார்கள்)’ என்று இடம்பெற்றுள்ளது.