அத்தியாயம்: 6, பாடம்: 16, ஹதீஸ் எண்: 1223

و حَدَّثَنَا ‏ ‏أَحْمَدُ بْنُ يُونُسَ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏زُهَيْرٌ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏أَبُو إِسْحَقَ ‏ ‏ح ‏ ‏و حَدَّثَنَا ‏ ‏يَحْيَى بْنُ يَحْيَى ‏ ‏أَخْبَرَنَا ‏ ‏أَبُو خَيْثَمَةَ ‏ ‏عَنْ ‏ ‏أَبِي إِسْحَقَ ‏ ‏قَالَ سَأَلْتُ ‏ ‏الْأَسْوَدَ بْنَ يَزِيدَ ‏ ‏عَمَّا ‏ ‏حَدَّثَتْهُ ‏ ‏عَائِشَةُ ‏

‏عَنْ صَلَاةِ رَسُولِ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏قَالَتْ كَانَ ‏ ‏يَنَامُ أَوَّلَ اللَّيْلِ وَيُحْيِ آخِرَهُ ثُمَّ إِنْ كَانَتْ لَهُ حَاجَةٌ إِلَى أَهْلِهِ قَضَى حَاجَتَهُ ثُمَّ يَنَامُ فَإِذَا كَانَ عِنْدَ النِّدَاءِ الْأَوَّلِ قَالَتْ وَثَبَ وَلَا وَاللَّهِ مَا قَالَتْ قَامَ فَأَفَاضَ عَلَيْهِ الْمَاءَ وَلَا وَاللَّهِ مَا قَالَتْ اغْتَسَلَ وَأَنَا أَعْلَمُ مَا تُرِيدُ وَإِنْ لَمْ يَكُنْ جُنُبًا تَوَضَّأَ وُضُوءَ الرَّجُلِ لِلصَّلَاةِ ثُمَّ صَلَّى الرَّكْعَتَيْنِ

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) இரவின் ஆரம்பப் பகுதியில் உறங்கிவிட்டு, அதன் இறுதிப் பகுதியில் விழித்திருப்பார்கள். பிறகு தம் மனைவியரிடத்தில் தமக்குத் தேவையிருப்பின் (அவர்களிடம் சென்று) தமது தேவையை நிறைவேற்றுவார்கள்; பிறகு உறங்குவார்கள். முதல் பாங்கின் சப்தம் கேட்டதும் துள்ளி எழுந்து தம்மீது தண்ணீர் ஊற்றுவார்கள். பெருந்துடக்கு ஏற்பட்டிருக்காவிட்டால் தொழுகைக்காகச் செய்வதைப் போன்று உளூச் செய்வார்கள். பிறகு இரண்டு ரக்அத்கள் தொழுவார்கள்.

அறிவிப்பாளர் : அன்னை ஆயிஷா (ரலி) வழியாக அஸ்வத் பின் யஸீத் (ரஹ்)

குறிப்பு :

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் (இரவுத்) தொழுகை பற்றி ஆயிஷா (ரலி) அவர்கள் தம்மிடம் கூறியதாக அறிவிப்பாளர் அஸ்வத் பின் யஸீத் (ரஹ்) அறிவிக்கும் மேற்காணும் ஹதீஸில், “அல்லாஹ்வின் மீதாணை! ‘முதல் பாங்கின் அழைப்புக் கேட்டதும் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) துள்ளி எழுவார்கள்’ என்றே ஆயிஷா (ரலி) கூறினார்களேயன்றி வெறுமனே ‘எழுவார்கள்’ என்று கூறவில்லை. அதேபோல், அல்லாஹ்வின் மீதாணையாக! ‘குளிப்பார்கள்’ என்று கூறாமல் ‘தம் மீது தண்ணீரை ஊற்றுவார்கள்’ என்றே ஆயிஷா (ரலி) கூறினார்கள்” என்று அஸ்வத் (ரஹ்) விளக்குவதாக இடம்பெற்றுள்ளது.

Share this Hadith:

Leave a Comment