அத்தியாயம்: 6, பாடம்: 18, ஹதீஸ் எண்: 1237

و حَدَّثَنَا ‏ ‏زُهَيْرُ بْنُ حَرْبٍ ‏ ‏وَابْنُ نُمَيْرٍ ‏ ‏قَالَا حَدَّثَنَا ‏ ‏إِسْمَعِيلُ وَهُوَ ابْنُ عُلَيَّةَ ‏ ‏عَنْ ‏ ‏أَيُّوبَ ‏ ‏عَنْ ‏ ‏الْقَاسِمِ الشَّيْبَانِيِّ ‏‏أَنَّ ‏ ‏زَيْدَ بْنَ أَرْقَمَ ‏ ‏رَأَى قَوْمًا يُصَلُّونَ مِنْ الضُّحَى فَقَالَ:‏

أَمَا لَقَدْ عَلِمُوا أَنَّ الصَّلَاةَ فِي غَيْرِ هَذِهِ السَّاعَةِ أَفْضَلُ إِنَّ رَسُولَ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏قَالَ ‏ ‏صَلَاةُ الْأَوَّابِينَ حِينَ ‏ ‏تَرْمَضُ ‏ ‏الْفِصَالُ

ஸைத் பின் அர்கம் (ரலி) ளுஹாத் தொழுதுகொண்டிருந்த ஒரு கூட்டத்தாரைக் கண்டார்கள். அப்போது, “இந்தத் தொழுகையை இந்நேரத்தில் அல்லாமல் வேறு நேரத்தில் தொழுவதே சிறந்தது என இவர்கள் அறிய வேண்டாமா? அல்லாஹ்வின் தூதர் (ஸல்), ‘சுடுமணலில் ஒட்டகக் குட்டியின் கால் குளம்புகள் இளகிவிடும் நேரமே அவ்வாபீன் தொழுகையின் நேரமாகும்’ எனக் கூறியிருக்கின்றார்கள்” என்றார்கள்.

அறிவிப்பாளர் : ஸைத் பின் அர்கம் (ரலி) வழியாக அல் காஸிம் அஷ்ஷைபானீ (ரஹ்)

Share this Hadith:

Leave a Comment