அத்தியாயம்: 6, பாடம்: 24, ஹதீஸ் எண்: 1272

حَدَّثَنَا ‏ ‏مُحَمَّدُ بْنُ مِهْرَانَ الرَّازِيُّ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏الْوَلِيدُ بْنُ مُسْلِمٍ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏الْأَوْزَاعِيُّ ‏ ‏حَدَّثَنِي ‏ ‏عَبْدَةُ ‏ ‏عَنْ ‏ ‏زِرٍّ ‏ ‏قَالَ سَمِعْتُ ‏ ‏أُبَيَّ بْنَ كَعْبٍ ‏ ‏يَقُولُ ‏ ‏وَقِيلَ لَهُ ‏ ‏إِنَّ ‏ ‏عَبْدَ اللَّهِ بْنَ مَسْعُودٍ ‏ ‏يَقُولُ ‏ ‏:‏

مَنْ قَامَ السَّنَةَ أَصَابَ لَيْلَةَ الْقَدْرِ فَقَالَ ‏ ‏أُبَيٌّ ‏ ‏وَاللَّهِ الَّذِي لَا إِلَهَ إِلَّا هُوَ إِنَّهَا لَفِي رَمَضَانَ يَحْلِفُ ‏ ‏مَا ‏ ‏يَسْتَثْنِي ‏ ‏وَ وَاللَّهِ إِنِّي لَأَعْلَمُ أَيُّ لَيْلَةٍ هِيَ . ‏هِيَ اللَّيْلَةُ الَّتِي أَمَرَنَا بِهَا رَسُولُ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏بِقِيَامِهَا ‏ ‏هِيَ لَيْلَةُ صَبِيحَةِ سَبْعٍ وَعِشْرِينَ ‏ ‏وَأَمَارَتُهَا ‏ ‏أَنْ تَطْلُعَ الشَّمْسُ فِي صَبِيحَةِ يَوْمِهَا بَيْضَاءَ لَا شُعَاعَ لَهَا

உபை பின் கஅப் (ரலி) அவர்களிடம் “ஆண்டு முழுவதும் இரவில் நின்று வணங்குபவர் லைலத்துல் கத்ரு இரவை அடைந்துகொள்வார்” என்று அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி) கூறிவருவதாகச் சொல்லப்பட்டது. அதற்கு உபை (ரலி), “எவனைத் தவிர வேறு இறைவன் இல்லையோ அவன்மீது சத்தியமாக! அது (லைலத்துல் கத்ரு) ரமளானில்தான் உள்ளது. அல்லாஹ்வின் மீதாணையாக! அது எந்த இரவு என்பதை நான் அறிவேன்; அந்த இரவில் நின்று வணங்குமாறு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) எங்களுக்குக் கட்டளையிட்டார்கள். அது ரமளானில் இருபத்தி ஏழாம் இரவாகும். அ(து லைலத்துல் கத்ரு என்ப)தற்கு அடையாளம், அந்த இரவை அடுத்துவரும் காலைப் பொழுதில் சூரியன் வெண்ணிறத்தில் ஒளியிழந்து (மங்கலாக) உதிக்கும்” என்று கூறினார்கள்.

அறிவிப்பாளர் : உபை பின் கஅப் (ரலி) வழியாக ஸிர்ரு பின் ஹுபைஷ் (ரஹ்)


குறிப்பு :

உபை பின் கஅப் (ரலி) “அது எந்த இரவு என்று நான் அறிவேன்” என்று சத்தியமிட்டுக் கூறியபோது, ‘அல்லாஹ் நாடினால்’ என்று சேர்த்துக் கூறவில்லை.

Share this Hadith:

Leave a Comment