அத்தியாயம்: 6, பாடம்: 25, ஹதீஸ் எண்: 1290

حَدَّثَنَا ‏ ‏مُحَمَّدُ بْنُ أَبِي بَكْرٍ الْمُقَدَّمِيُّ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏يُوسُفُ الْمَاجِشُونُ ‏ ‏حَدَّثَنِي ‏ ‏أَبِي ‏ ‏عَنْ ‏ ‏عَبْدِ الرَّحْمَنِ الْأَعْرَجِ ‏ ‏عَنْ ‏ ‏عُبَيْدِ اللَّهِ بْنِ أَبِي رَافِعٍ ‏ ‏عَنْ ‏ ‏عَلِيِّ بْنِ أَبِي طَالِبٍ ‏

‏عَنْ رَسُولِ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏أَنَّهُ كَانَ إِذَا قَامَ إِلَى الصَّلَاةِ قَالَ ‏ ‏وَجَّهْتُ ‏ ‏وَجْهِيَ ‏ ‏لِلَّذِي فَطَرَ السَّمَاوَاتِ وَالْأَرْضَ حَنِيفًا وَمَا أَنَا مِنْ الْمُشْرِكِينَ إِنَّ صَلَاتِي وَنُسُكِي وَمَحْيَايَ وَمَمَاتِي لِلَّهِ رَبِّ الْعَالَمِينَ لَا شَرِيكَ لَهُ وَبِذَلِكَ أُمِرْتُ وَأَنَا مِنْ الْمُسْلِمِينَ اللَّهُمَّ أَنْتَ الْمَلِكُ لَا إِلَهَ إِلَّا أَنْتَ أَنْتَ رَبِّي وَأَنَا عَبْدُكَ ظَلَمْتُ نَفْسِي وَاعْتَرَفْتُ بِذَنْبِي فَاغْفِرْ لِي ذُنُوبِي جَمِيعًا إِنَّهُ لَا يَغْفِرُ الذُّنُوبَ إِلَّا أَنْتَ وَاهْدِنِي لِأَحْسَنِ الْأَخْلَاقِ لَا يَهْدِي لِأَحْسَنِهَا إِلَّا أَنْتَ وَاصْرِفْ عَنِّي سَيِّئَهَا لَا يَصْرِفُ عَنِّي سَيِّئَهَا إِلَّا أَنْتَ لَبَّيْكَ وَسَعْدَيْكَ وَالْخَيْرُ كُلُّهُ فِي يَدَيْكَ وَالشَّرُّ لَيْسَ إِلَيْكَ أَنَا بِكَ وَإِلَيْكَ تَبَارَكْتَ وَتَعَالَيْتَ أَسْتَغْفِرُكَ وَأَتُوبُ إِلَيْكَ وَإِذَا رَكَعَ قَالَ اللَّهُمَّ لَكَ رَكَعْتُ وَبِكَ آمَنْتُ وَلَكَ أَسْلَمْتُ خَشَعَ لَكَ سَمْعِي وَبَصَرِي وَمُخِّي وَعَظْمِي وَعَصَبِي وَإِذَا رَفَعَ قَالَ اللَّهُمَّ رَبَّنَا لَكَ الْحَمْدُ مِلْءَ السَّمَاوَاتِ وَمِلْءَ الْأَرْضِ وَمِلْءَ مَا بَيْنَهُمَا وَمِلْءَ مَا شِئْتَ مِنْ شَيْءٍ بَعْدُ وَإِذَا سَجَدَ قَالَ اللَّهُمَّ لَكَ سَجَدْتُ وَبِكَ آمَنْتُ وَلَكَ أَسْلَمْتُ سَجَدَ وَجْهِي لِلَّذِي خَلَقَهُ وَصَوَّرَهُ وَشَقَّ سَمْعَهُ وَبَصَرَهُ تَبَارَكَ اللَّهُ أَحْسَنُ الْخَالِقِينَ ثُمَّ يَكُونُ مِنْ آخِرِ مَا يَقُولُ بَيْنَ التَّشَهُّدِ وَالتَّسْلِيمِ اللَّهُمَّ اغْفِرْ لِي مَا قَدَّمْتُ وَمَا أَخَّرْتُ وَمَا أَسْرَرْتُ وَمَا أَعْلَنْتُ وَمَا أَسْرَفْتُ وَمَا أَنْتَ أَعْلَمُ بِهِ مِنِّي أَنْتَ الْمُقَدِّمُ وَأَنْتَ الْمُؤَخِّرُ لَا إِلَهَ إِلَّا أَنْتَ ‏

‏و حَدَّثَنَاه ‏ ‏زُهَيْرُ بْنُ حَرْبٍ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏عَبْدُ الرَّحْمَنِ بْنُ مَهْدِيٍّ ‏ ‏ح ‏ ‏و حَدَّثَنَا ‏ ‏إِسْحَقُ بْنُ إِبْرَاهِيمَ ‏ ‏أَخْبَرَنَا ‏ ‏أَبُو النَّضْرِ ‏ ‏قَالَا حَدَّثَنَا ‏ ‏عَبْدُ الْعَزِيزِ بْنُ عَبْدِ اللَّهِ بْنِ أَبِي سَلَمَةَ ‏ ‏عَنْ ‏ ‏عَمِّهِ ‏ ‏الْمَاجِشُونِ بْنِ أَبِي سَلَمَةَ ‏ ‏عَنْ ‏ ‏الْأَعْرَجِ ‏ ‏بِهَذَا الْإِسْنَادِ ‏ ‏وَقَالَ كَانَ رَسُولُ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏إِذَا اسْتَفْتَحَ الصَّلَاةَ كَبَّرَ ثُمَّ قَالَ وَجَّهْتُ وَجْهِي وَقَالَ وَأَنَا أَوَّلُ الْمُسْلِمِينَ وَقَالَ وَإِذَا رَفَعَ رَأْسَهُ مِنْ الرُّكُوعِ قَالَ سَمِعَ اللَّهُ لِمَنْ حَمِدَهُ رَبَّنَا وَلَكَ الْحَمْدُ وَقَالَ وَصَوَّرَهُ فَأَحْسَنَ صُوَرَهُ وَقَالَ وَإِذَا سَلَّمَ قَالَ اللَّهُمَّ اغْفِرْ لِي مَا قَدَّمْتُ إِلَى آخِرِ الْحَدِيثِ وَلَمْ يَقُلْ بَيْنَ التَّشَهُّدِ وَالتَّسْلِيمِ

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) தொழுகையில் நின்றவுடன் (முதலில்) வஜ்ஜஹ்து வஜ்ஹிய லில்லதீ ஃபதரஸ் ஸமாவாத்தி வல்அர்ள ஹனீஃபன். வ மா அன மினல் முஷ்ரிகீன். இன்ன ஸலாத்தீ வ நுசுக்கீ வ மஹ்யாய வ மமாத்தீ லில்லாஹி ரப்பில் ஆலமீன். லா ஷரீக்க லஹு வ பிதாலிக உமிர்த்து. வ அன மினல் முஸ்லிமீன். அல்லாஹும்ம அன்த்தல் மலிக்கு. லா இலாஹ இல்லா அன்த்த. அன்த்த ரப்பீ வ அன அப்துக்க. ழலம்த்து நஃப்ஸீ. வஅதரஃப்த்து பி தன்பீ. ஃபஃக்ஃபிர்லீ துனூபீ ஜமீஆ. இன்னஹு லா யஃக்ஃபிருத் துனூப இல்லா அன்த்த. வஹ்தினீ லி அஹ்ஸனில் அக்லாக்கி, லா யஹ்தீ லி அஹ்சனிஹா இல்லா அன்த்த. வஸ்ரிஃப் அன்னீ ஸய்யிஅஹா, லா யஸ்ரிஃபு அன்னீ ஸய்யிஅஹா இல்லா அன்த்த. லப்பைக்க வ ஸஅதைக்க. வல்கைரு குல்லுஹு ஃபீ யதைக்க. வஷ்ஷர்ரு லைஸ இலைக்க. அன பிக்க, வ இலைக்க. தபாரக்த்த வ தஆலைத்த. அஸ்தஃக்ஃபிருக்க வ அதூபு இலைக்” என்று கூறுவார்கள்.

(பொருள்: நான் வானங்களையும் பூமியையும் முன்மாதிரியின்றிப் படைத்தவன் பக்கம் நேராக என் முகத்தைத் திருப்பிக்கொண்டேன். நான் இணைவைப்போரில் ஒருவனாக இருக்கமாட்டேன். என் தொழுகையும் என் தியாகமும் என் வாழ்வும் என் மரணமும் அனைத்துலகின் அதிபதியான அல்லாஹ்வுக்கே உரியன. அவனுக்கு இணையே இல்லை. இவ்வாறே எனக்குக் கட்டளையிடப்பட்டுள்ளது. நான் கட்டுப்பட்டு நடப்பவர்(முஸ்லிம்)களில் ஒருவன் ஆவேன். இறைவா! நீயே அரசன். உன்னைத் தவிர வேறு இறைவன் இல்லை. நீயே என் இறைவன். நான் உன் அடிமை. எனக்கு நானே அநீதி இழைத்துக்கொண்டேன். நான் என் பாவங்களை (மறைக்காமல்) ஒப்புக்கொள்கிறேன். எனவே, என் பாவங்கள் அனைத்தையும் மன்னிப்பாயாக! பாவங்களை மன்னிப்பவர் உன்னைத் தவிர வேறெவரும் இலர். நற்குணங்களுக்கு எனக்கு வழிகாட்டுவாயாக. நற்குணங்களுக்கு வழிகாட்டுபவர் உன்னைத் தவிர வேறெவரும் இலர். துர்குணங்களை என்னிலிருந்து அகற்றுவாயாக! துர்குணங்களை அகற்றுபவர் உன்னைத் தவிர வேறெவரும் இலர். இதோ வந்தேன். கட்டளையிடு (காத்திருக்கிறேன்). நன்மைகள் அனைத்தும் உன் கரங்களிலேயே உள்ளன. தீமைகள் உன்னைச் சார்ந்தவை அல்ல. உன்னால்தான் நான் நல்வாழ்வு அடைந்தேன். உன்னிடமே நான் மீள்வேன்.. நீ பேறுகளையுடையவன். உன்னதமானவன். நான் உன்னிடமே பாவமன்னிப்புக் கோருகிறேன்; பாவங்களிலிருந்து மீண்டு உன்னிடம் திரும்புகிறேன்).

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) ருகூஉச் செய்யும்போது, “அல்லாஹும்ம, லக்க ரகஅத்து, வ பிக்க ஆமன்து, வ லக்க அஸ்லம்து. கஷஅ லக்க ஸம்ஈ வ பஸரீ வ முஃக்கீ வ அழ்மீ வ அஸபீ” என்று கூறுவார்கள். (இறைவா, உனக்காகக் குனிந்தேன். உன்மீதே நம்பிக்கை கொண்டேன். உனக்கே கட்டுப் பட்டேன். உனக்கே என் செவியும் பார்வையும் மூளையும் எலும்பும் நரம்பும் பணிந்தன.)

அவர்கள் (ருகூவிலிருந்து) நிமிர்ந்ததும், “அல்லாஹும்ம ரப்பனா லக்கல் ஹம்து மில்அஸ் ஸமாவாத்தி வ மில்அல் அர்ளி வ மில்அ மா பைனஹுமா வ மில்அ மா ஷிஃத்த மின் ஷையிம் பஅது” (இறைவா! வானங்கள் நிரம்ப, பூமி நிரம்ப, அவற்றுக்கிடையே இருப்பவை நிரம்ப, இதன் பின்னர் நீ நாடியவை நிரம்பிய புகழ் அனைத்தும் உனக்கே உரியது) என்று கூறுவார்கள்.

அவர்கள் சிரவணக்கம் (ஸஜ்தா) செய்யும் போது, “அல்லாஹும்ம லக்க ஸஜத்து. வ பிக்க ஆமன்த்து. வ லக்க அஸ்லம்து. ஸஜத வஜ்ஹீ லில்லதீ கலக்கஹு வ ஸவ்வரஹு, வ ஷக்க ஸம்அஹு வ பஸரஹு. தபாரக்கல்லாஹு அஹ்ஸனுல் காலிக்கீன்” (பொருள்: இறைவா! உனக்கே சிரம்பணிந்தேன். உன்மீதே நம்பிக்கை கொண்டேன். உனக்கே கட்டுப்பட்டேன். என் முகத்தைப் படைத்து வடிவமைத்து அதில் செவிபுலனையும் பார்வையையும் திறந்துவைத்தவனுக்கு முன் என் முகம் பணிந்தது. படைப்பாளர்களில் மிக மேலானவனான அல்லாஹ் பேறுமிக்கவன்) என்று கூறுவார்கள்.

பிறகு இறுதியாக அத்தஹிய்யாத்துக்கும் சலாமுக்குமிடையே அல்லாஹும்மஃக்ஃபிர் லீ மா கத்தம்த்து வ மா அக்கர்த்து வ மா அஸ்ரர்து வ மா அஃலன்து வ மா அஸ்ரஃப்த்து வ மா அன்த அஃலமு பிஹி மின்னீ. அன்த்தல் முகத்திமு வ அன்த்தல் முஅக்கிரு லா இலாஹ இல்லா அன்த்த”‘ (பொருள்: அல்லாஹ்வே! நான் முந்திச் செய்த பிந்திச் செய்கிற, இரகசிமாகச் செய்த, வெளிப்படையாகச் செய்த, வரம்பு மீறிச் செய்த, என்னைவிட நீ அறிந்துள்ள இன்னபிற பாவங்கள் அனைத்தையும் மன்னித்தருள்வாயாக! நீயே முன்னேற்றம் தருபவன். பின்னடைவைத் தருபவன். உன்னைத் தவிர வேறு இறைவன் இல்லை) என்று கூறுவார்கள்.

அறிவிப்பாளர் : அலீ இப்னு அபீதாலிப் (ரலி)

குறிப்பு :

இஸ்ஹாக் பின் இப்ராஹீம் (ரஹ்) வழி அறிவிப்பில், “அல்லாஹ்வின் தூதர் (ஸல்) தொழுகையைத் துவக்கும்போது தக்பீர் (தஹ்ரீம்) கூறுவார்கள். பிறகு வஜ்ஜஹ்த்து வஜ்ஹிய … ஓதுவார்கள். அதில் (வ அன மினல் முஸ்லிமீன் என்பதற்கு பதிலாக) வ அன அவ்வலுல் முஸ்லிமீன் (நான் முஸ்லிம்களில் முதல்வன் ஆவேன்) என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) கூறுவார்கள் என்றும் ருகூவிலிருந்து தலையை உயர்த்தும்போது ஸமிஅல்லாஹு லிமன் ஹமிதஹ் (தன்னைப் புகழ்வோரின் புகழுரையை அல்லாஹ் ஏற்கிறான்) என்றும் ரப்பனா வ லக்கல் ஹம்து (எங்கள் இறைவா! உனக்கே புகழ் அனைத்தும் உரியது) என்று கூறுவார்கள் என்றும் ஸஜ்தாவில் ஸஜத வஜ்ஹீ லில்லதீ… ஸவ்வரஹு ஃப அஹ்ஸன ஸுவரஹு (முகத்தை அழகிய முறையில் வடிவமைத்த…) என்று கூறுவார்கள் என்றும் ஸலாம் கொடுக்கும்போது, அல்லாஹும்மஃக்ஃபிர்லீ மா கத்தம்த்து… என்று கூறுவார்கள் என்றும் (மேற்கண்ட) ஹதீஸில் உள்ளவை போன்று இறுதிவரை ஓதுவார்கள்” என்றும் இடம்பெற்றுள்ளது. “… அத்தஹிய்யாத்துக்கும் ஸலாமுக்குமிடையே …” எனும் குறிப்பு இடம்பெற வில்லை.

அத்தியாயம்: 6, பாடம்: 25, ஹதீஸ் எண்: 1289

‏حَدَّثَنَا ‏ ‏مُحَمَّدُ بْنُ الْمُثَنَّى ‏ ‏وَمُحَمَّدُ بْنُ حَاتِمٍ ‏ ‏وَعَبْدُ بْنُ حُمَيْدٍ ‏ ‏وَأَبُو مَعْنٍ الرَّقَاشِيُّ ‏ ‏قَالُوا حَدَّثَنَا ‏ ‏عُمَرُ بْنُ يُونُسَ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏عِكْرِمَةُ بْنُ عَمَّارٍ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏يَحْيَى بْنُ أَبِي كَثِيرٍ ‏ ‏حَدَّثَنِي ‏ ‏أَبُو سَلَمَةَ بْنُ عَبْدِ الرَّحْمَنِ بْنِ عَوْفٍ ‏ ‏قَالَ ‏

‏سَأَلْتُ ‏ ‏عَائِشَةَ ‏ ‏أُمَّ الْمُؤْمِنِينَ بِأَيِّ شَيْءٍ كَانَ نَبِيُّ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏يَفْتَتِحُ صَلَاتَهُ إِذَا قَامَ مِنْ اللَّيْلِ قَالَتْ كَانَ إِذَا قَامَ مِنْ اللَّيْلِ افْتَتَحَ صَلَاتَهُ ‏ ‏اللَّهُمَّ رَبَّ ‏ ‏جَبْرَائِيلَ ‏ ‏وَمِيكَائِيلَ ‏ ‏وَإِسْرَافِيلَ ‏ ‏فَاطِرَ السَّمَاوَاتِ وَالْأَرْضِ عَالِمَ الْغَيْبِ وَالشَّهَادَةِ أَنْتَ تَحْكُمُ بَيْنَ عِبَادِكَ فِيمَا كَانُوا فِيهِ يَخْتَلِفُونَ اهْدِنِي لِمَا اخْتُلِفَ فِيهِ مِنْ الْحَقِّ بِإِذْنِكَ إِنَّكَ تَهْدِي مَنْ تَشَاءُ إِلَى صِرَاطٍ مُسْتَقِيمٍ

நான் இறைநம்பிக்கையாளர்களின் அன்னை ஆயிஷா (ரலி) அவர்களிடம், “நபி (ஸல்) இரவுத் தொழுகையைத் துவக்கியதும் முதலில் என்ன கூறுவார்கள்?” என்று கேட்டேன். அதற்கு அவர்கள், “நபி (ஸல்) இரவுத் தொழுகையைத் துவக்கியதும் ‘அல்லாஹும்ம ரப்ப ஜிப்ராயீல வ மீக்காயீல வ இஸ்ராஃபீல, ஃபாத்திரஸ் ஸமாவாத்தி வல்அர்ளி, ஆலிமல் ஃகைபி வஷ்ஷஹாதத்தி, அன்த்த தஹ்குமு பய்ன இபாதிக ஃபீமா கானூ ஃபீஹி யக்தலிஃபூன். இஹ்தினீ லிமக்துலிஃப ஃபீஹி மினல் ஹக்கி பி இத்னிக்க, இன்னக்க தஹ்தீ மன் தஷாஉ இலா ஸிராதிம் முஸ்தகீம்’ என்று கூறுவார்கள்” என்று பதிலளித்தார்கள்.

(பொருள்: இறைவா! (வானவர்களாகிய) ஜிப்ராயீல், மீக்காயீல், இஸ்ராஃபீல் ஆகியோரின் அதிபதியே! வானங்கள், பூமி ஆகியவற்றை முன்மாதிரியின்றிப் படைத்தவனே! மறைவானவற்றையும் வெளிப்படையானவற்றையும் அறிந்தவனே! நீ உன் அடியார்களிடையே அவர்கள் கொண்டிருந்த கருத்துவேறுபாடுகள் குறித்து (மறுமையில்) தீர்ப்பு வழங்குவாய். (பிற மக்களால்) மாற்றுக் கருத்து கொள்ளப்பட்டாலும் சத்திய(மார்க்க)த்திலேயே உன் தயவால் என்னை நிலைத்திருக்கச் செய்வாயாக! நீ நாடியவர்களை நேரான வழியில் நீயே செலுத்துகிறாய்.)

அறிவிப்பு : அன்னை ஆயிஷா (ரலி) வழியாக அபூஸலமா பின் அப்திர் ரஹ்மான் பின் அவ்ஃப் (ரஹ்)

அத்தியாயம்: 6, பாடம்: 25, ஹதீஸ் எண்: 1288

حَدَّثَنَا ‏ ‏قُتَيْبَةُ بْنُ سَعِيدٍ ‏ ‏عَنْ ‏ ‏مَالِكِ بْنِ أَنَسٍ ‏ ‏عَنْ ‏ ‏أَبِي الزُّبَيْرِ ‏ ‏عَنْ ‏ ‏طَاوُسٍ ‏ ‏عَنْ ‏ ‏ابْنِ عَبَّاسٍ ‏

‏أَنَّ رَسُولَ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏كَانَ يَقُولُ إِذَا قَامَ إِلَى الصَّلَاةِ مِنْ جَوْفِ اللَّيْلِ ‏ ‏اللَّهُمَّ لَكَ الْحَمْدُ أَنْتَ نُورُ السَّمَوَاتِ وَالْأَرْضِ وَلَكَ الْحَمْدُ أَنْتَ ‏ ‏قَيَّامُ ‏ ‏السَّمَوَاتِ وَالْأَرْضِ وَلَكَ الْحَمْدُ أَنْتَ رَبُّ السَّمَوَاتِ وَالْأَرْضِ وَمَنْ فِيهِنَّ أَنْتَ الْحَقُّ وَوَعْدُكَ الْحَقُّ وَقَوْلُكَ الْحَقُّ وَلِقَاؤُكَ حَقٌّ وَالْجَنَّةُ حَقٌّ وَالنَّارُ حَقٌّ وَالسَّاعَةُ حَقٌّ اللَّهُمَّ لَكَ أَسْلَمْتُ وَبِكَ آمَنْتُ وَعَلَيْكَ تَوَكَّلْتُ وَإِلَيْكَ ‏ ‏أَنَبْتُ ‏ ‏وَبِكَ خَاصَمْتُ وَإِلَيْكَ حَاكَمْتُ فَاغْفِرْ لِي مَا قَدَّمْتُ وَأَخَّرْتُ وَأَسْرَرْتُ وَأَعْلَنْتُ أَنْتَ إِلَهِي لَا إِلَهَ إِلَّا أَنْتَ ‏

‏حَدَّثَنَا ‏ ‏عَمْرٌو النَّاقِدُ ‏ ‏وَابْنُ نُمَيْرٍ ‏ ‏وَابْنُ أَبِي عُمَرَ ‏ ‏قَالُوا حَدَّثَنَا ‏ ‏سُفْيَانُ ‏ ‏ح ‏ ‏و حَدَّثَنَا ‏ ‏مُحَمَّدُ بْنُ رَافِعٍ ‏ ‏قَالَ حَدَّثَنَا ‏ ‏عَبْدُ الرَّزَّاقِ ‏ ‏أَخْبَرَنَا ‏ ‏ابْنُ جُرَيْجٍ ‏ ‏كِلَاهُمَا ‏ ‏عَنْ ‏ ‏سُلَيْمَانَ الْأَحْوَلِ ‏ ‏عَنْ ‏ ‏طَاوُسٍ ‏ ‏عَنْ ‏ ‏ابْنِ عَبَّاسٍ ‏ ‏عَنْ النَّبِيِّ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏أَمَّا حَدِيثُ ‏ ‏ابْنِ جُرَيْجٍ ‏ ‏فَاتَّفَقَ لَفْظُهُ مَعَ حَدِيثِ ‏ ‏مَالِكٍ ‏ ‏لَمْ يَخْتَلِفَا إِلَّا فِي حَرْفَيْنِ ‏ ‏قَالَ ‏ ‏ابْنُ جُرَيْجٍ ‏ ‏مَكَانَ قَيَّامُ قَيِّمُ وَقَالَ وَمَا أَسْرَرْتُ ‏ ‏وَأَمَّا حَدِيثُ ‏ ‏ابْنِ عُيَيْنَةَ ‏ ‏فَفِيهِ بَعْضُ زِيَادَةٍ وَيُخَالِفُ ‏ ‏مَالِكًا ‏ ‏وَابْنَ جُرَيْجٍ ‏ ‏فِي أَحْرُفٍ ‏ ‏و حَدَّثَنَا ‏ ‏شَيْبَانُ بْنُ فَرُّوخَ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏مَهْدِيٌّ وَهُوَ ابْنُ مَيْمُونٍ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏عِمْرَانُ الْقَصِيرُ ‏ ‏عَنْ ‏ ‏قَيْسِ بْنِ سَعْدٍ ‏ ‏عَنْ ‏ ‏طَاوُسٍ ‏ ‏عَنْ ‏ ‏ابْنِ عَبَّاسٍ ‏ ‏عَنْ النَّبِيِّ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏بِهَذَا الْحَدِيثِ وَاللَّفْظُ قَرِيبٌ مِنْ أَلْفَاظِهِمْ

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) நடு இரவில் தொழுவதற்காக எழுந்து,

“அல்லாஹும்ம லக்கல் ஹம்து, அன்த்த நூருஸ் ஸமாவாத்தி வல்அர்ள். வ லக்கல் ஹம்து, அன்த்த கய்யாமுஸ் ஸமாவாத்தி வல்அர்ள். வ லக்கல் ஹம்து, அன்த்த ரப்புஸ் ஸமாவாத்தி வல்அர்ளி வமன் ஃபீஹின்ன. அன்த்தல் ஹக்கு. வ வஅதுக்கல் ஹக். வ கவ்லுக்கல் ஹக்கு. வ லிகாஉக ஹக். வல்ஜன்னத்து ஹக். வந்நாரு ஹக். வஸ்ஸாஅத்து ஹக். அல்லாஹும்ம லக அஸ்லம்து, வ பிக ஆமன்து, வ அலைக்க தவக்கல்து, வ இலைக்க அனப்து, வ பிக்க காஸம்து, வ இலைக்க ஹாக்கம்து, ஃபஃக்ஃபிர்லீ மா கத்தம்த்து வ அக்கர்த்து வ அஸ்ரர்த்து வ அஃலன்த்து. அன்த இலாஹீ. லா இலாஹ இல்லா அன்த்த” என்று பிரார்த்திப்பார்கள்.

(பொருள்: இறைவா! உனக்கே புகழ் அனைத்தும். வானங்களின் பூமியின் ஒளி நீயே. உனக்கே புகழ் அனைத்தும். வானங்கள், பூமி ஆகியவற்றை நிர்வகிப்பவன் நீயே. உனக்கே புகழ் அனைத்தும். வானங்கள், பூமி மற்றும் அவற்றிலுள்ளவற்றின் இறைவன் நீயே. நீ உண்மை. உன் வாக்குறுதி உண்மை. உனது கூற்று உண்மையே. உன் தரிசனம் உண்மை. சொர்க்கம் உண்மை. நரகம் உண்மை. மறுமை நாள் உண்மை. அல்லாஹ்வே! உனக்குக் கட்டுப்பட்டேன். உன்மீதே நம்பிக்கை கொண்டுள்ளேன். உன்னையே சார்ந்துள்ளேன். உன்னிடமே மீள்வேன். உன்னிடமே வழக்காடுவேன். உன்னிடமே நீதி கேட்பேன். எனவே, நான் முந்திச் செய்த, பிந்திச் செய்கிற, இரகசியமாகச் செய்த, பகிரங்கமாகச் செய்த பாவங்களை மன்னிப்பாயாக. நீயே என் இறைவன். உன்னைத் தவிர வேறு இறைவன் இல்லை).

அறிவிப்பாளர் : இபுனு அப்பாஸ் (ரலி)

குறிப்பு :

இப்னு ஜுரைஜ் (ரஹ்) வழி் அறிவிப்பில், (கய்யாம் என்பதற்கு பதிலாக) “கய்யிம்” எனும் சொல்லும் “நான் இரகசியமாகச் செய்த” என்பதைக் குறிக்க (வ அஸ்ரர்த்து என்பதற்கு பதிலாக) “வ மா அஸ்ரர்த்து” எனும் சொற்றொடரும் இடம்பெற்றுள்ளன. இப்னு ஜுரைஜ் (ரஹ்) அவர்களது அறிவிப்பிலும் மாலிக் பின் அனஸ் (ரஹ்) அவர்களது அறிவிப்பிலும் இரண்டு சொற்றொடர்களில் மட்டும் சிறு மாற்றங்கள் இடம்பெறுகின்றன.

இப்னு உயைனா (ரஹ்) வழி அறிவிப்பில் சில கூடுதலான தகவல்கள் உள்ளன. மாலிக் (ரஹ்), இப்னு ஜுரைஜ் (ரஹ்) ஆகிய இருவர் அறிவிக்கும் பல சொற்றொடர்களோடு இப்னு உயைனா (ரஹ்) அவர்களின் அறிவிப்பு வேறுபடுகிறது.

அத்தியாயம்: 6, பாடம்: 25, ஹதீஸ் எண்: 1287

و حَدَّثَنَا ‏ ‏أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏أَبُو أُسَامَةَ ‏ ‏عَنْ ‏ ‏هِشَامٍ ‏ ‏عَنْ ‏ ‏مُحَمَّدٍ ‏ ‏عَنْ ‏ ‏أَبِي هُرَيْرَةَ ‏

‏عَنْ النَّبِيِّ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏قَالَ ‏ ‏إِذَا قَامَ أَحَدُكُمْ مِنْ اللَّيْلِ فَلْيَفْتَتِحْ صَلَاتَهُ بِرَكْعَتَيْنِ خَفِيفَتَيْنِ

“உங்களில் ஒருவர் இரவில் தொழுவதற்காக நின்றால் அவர் முதலில் சுருக்கமாக இரண்டு ரக்அத்கள் தொழட்டும்” என்று நபி (ஸல்) கூறினார்கள்.

அறிவிப்பாளர் : அபூஹுரைரா (ரலி)

அத்தியாயம்: 6, பாடம்: 25, ஹதீஸ் எண்: 1286

‏حَدَّثَنَا ‏ ‏يَحْيَى بْنُ يَحْيَى ‏ ‏وَأَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ ‏ ‏جَمِيعًا ‏ ‏عَنْ ‏ ‏هُشَيْمٍ ‏ ‏قَالَ ‏ ‏أَبُو بَكْرٍ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏هُشَيْمٌ ‏ ‏أَخْبَرَنَا ‏ ‏أَبُو حُرَّةَ ‏ ‏عَنْ ‏ ‏الْحَسَنِ ‏ ‏عَنْ ‏ ‏سَعْدِ بْنِ هِشَامٍ ‏ ‏عَنْ ‏ ‏عَائِشَةَ ‏ ‏قَالَتْ ‏

‏كَانَ رَسُولُ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏إِذَا قَامَ مِنْ اللَّيْلِ لِيُصَلِّيَ افْتَتَحَ صَلَاتَهُ بِرَكْعَتَيْنِ خَفِيفَتَيْنِ

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) இரவில் தொழுவதற்காக நின்றால் முதலில் இரண்டு ரக்அத்கள் சுருக்கமாகத் தொழுவார்கள்.

அறிவிப்பாளர் : அன்னை ஆயிஷா (ரலி)

அத்தியாயம்: 6, பாடம்: 25, ஹதீஸ் எண்: 1285

و حَدَّثَنِي ‏ ‏حَجَّاجُ بْنُ الشَّاعِرِ ‏ ‏حَدَّثَنِي ‏ ‏مُحَمَّدُ بْنُ جَعْفَرٍ الْمَدَائِنِيُّ أَبُو جَعْفَرٍ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏وَرْقَاءُ ‏ ‏عَنْ ‏ ‏مُحَمَّدِ بْنِ الْمُنْكَدِرِ ‏ ‏عَنْ ‏ ‏جَابِرِ بْنِ عَبْدِ اللَّهِ ‏ ‏قَالَ ‏

‏كُنْتُ مَعَ رَسُولِ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏فِي سَفَرٍ فَانْتَهَيْنَا إِلَى ‏ ‏مَشْرَعَةٍ ‏ ‏فَقَالَ أَلَا ‏ ‏تُشْرِعُ ‏ ‏يَا ‏ ‏جَابِرُ ‏ ‏قُلْتُ بَلَى قَالَ فَنَزَلَ رَسُولُ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏وَأَشْرَعْتُ ‏ ‏قَالَ ثُمَّ ذَهَبَ لِحَاجَتِهِ وَوَضَعْتُ لَهُ وَضُوءًا قَالَ فَجَاءَ فَتَوَضَّأَ ثُمَّ قَامَ ‏ ‏فَصَلَّى فِي ثَوْبٍ وَاحِدٍ خَالَفَ بَيْنَ طَرَفَيْهِ فَقُمْتُ خَلْفَهُ فَأَخَذَ بِأُذُنِي فَجَعَلَنِي عَنْ يَمِينِهِ

நான் அல்லாவின் தூதர் (ஸல்) அவர்களுடன் ஒரு பயணத்தில் இருந்தேன். நாங்கள் ஒரு நீர்நிலையின் படித்துறையைச் சென்றடைந்தோம். அப்போது அவர்கள், “ஜாபிரே, (ஒட்டகத்திற்கு நீர் புகட்டி உனது தேவையையும் பூர்த்தி செய்துகொள்வதற்கு) நீ படித்துறையில் இறங்குகிறாயா?” என்று கேட்டார்கள். நான் “ஆம்” என்றேன். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) (ஒட்டகத்திலிருந்து) இறங்கினார்கள். நான் படித்துறையில் இறங்கினேன். பின்னர் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) தமது இயற்கைக் கடனை நிறைவேற்றச் சென்றார்கள். நான் அவர்களுக்காக நீர் எடுத்து வைத்தேன். அவர்கள் (திரும்பி)வந்து, உளூச் செய்தார்கள். பிறகு எழுந்து, ஒரே ஆடையை அணிந்து, அதை (வலம் இடமாகத் தோள்கள் மீது) மாற்றிப் போட்டுக்கொண்டு தொழுதார்கள். நான் அவர்களுக்கு (நேர்) பின்னால் (தொழுவதற்காக) நின்றேன். உடனே அவர்கள் எனது காதைப் பிடித்து (இழுத்து) என்னைத் தமக்கு வலப் பக்கத்தில் நிறுத்தினார்கள்.

அறிவிப்பாளர் : ஜாபிர் பின் அப்தில்லாஹ் (ரலி)

அத்தியாயம்: 6, பாடம்: 25, ஹதீஸ் எண்: 1284

و حَدَّثَنَا ‏ ‏قُتَيْبَةُ بْنُ سَعِيدٍ ‏ ‏عَنْ ‏ ‏مَالِكِ بْنِ أَنَسٍ ‏ ‏عَنْ ‏ ‏عَبْدِ اللَّهِ بْنِ أَبِي بَكْرٍ ‏ ‏عَنْ ‏ ‏أَبِيهِ ‏ ‏أَنَّ ‏ ‏عَبْدَ اللَّهِ بْنَ قَيْسِ بْنِ مَخْرَمَةَ ‏ ‏أَخْبَرَهُ عَنْ ‏ ‏زَيْدِ بْنِ خَالِدٍ الْجُهَنِيِّ ‏ ‏أَنَّهُ قَالَ ‏

‏لَأَرْمُقَنَّ ‏ ‏صَلَاةَ رَسُولِ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏اللَّيْلَةَ ‏ ‏فَصَلَّى رَكْعَتَيْنِ خَفِيفَتَيْنِ ثُمَّ صَلَّى رَكْعَتَيْنِ طَوِيلَتَيْنِ طَوِيلَتَيْنِ طَوِيلَتَيْنِ ثُمَّ صَلَّى رَكْعَتَيْنِ وَهُمَا دُونَ اللَّتَيْنِ قَبْلَهُمَا ثُمَّ صَلَّى رَكْعَتَيْنِ وَهُمَا دُونَ اللَّتَيْنِ قَبْلَهُمَا ثُمَّ صَلَّى رَكْعَتَيْنِ وَهُمَا دُونَ اللَّتَيْنِ قَبْلَهُمَا ثُمَّ صَلَّى رَكْعَتَيْنِ وَهُمَا دُونَ اللَّتَيْنِ قَبْلَهُمَا ثُمَّ أَوْتَرَ فَذَلِكَ ثَلَاثَ عَشْرَةَ رَكْعَةً

நான் ஒரு நாள் இரவு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் தொழுகையை (கண்விழித்து)க் கவனிக்கப்போகிறேன் என (எனக்குள்) சொல்லிக் கொண்டேன். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) (முதலில்) சுருக்கமாக இரண்டு ரக்அத்கள் தொழுதார்கள். பிறகு மிக மிக மிக நீளமாக இரண்டு ரக்அத்கள் தொழுதார்கள். பிறகு இரண்டு ரக்அத்கள் தொழுதார்கள். அவ்விரு ரக்அத்களும் அதற்கு முந்திய இரு ரக்அத்களையும்விடச் சுருக்கமாக இருந்தன. பிறகு இரண்டு ரக்அத்கள் தொழுதார்கள். அவ்விரு ரக்அத்களும் அதற்கு முந்திய இரு ரக்அத்களையும்விடச் சுருக்கமாகவே இருந்தன. பிறகு இரண்டு ரகஅத்கள் தொழுதார்கள். அவ்விரு ரக்அத்களும் அதற்கு முந்திய இரு ரக்அத்களையும்விடச் சுருக்கமாகவே இருந்தன. பிறகு இரண்டு ரக்அத்கள் தொழுதார்கள். அவ்விரு ரக்அத்களும் அதற்கு முந்திய இரு ரக்அத்களைவிடச் சுருக்கமாகவே இருந்தன. பிறகு (ஒரு ரக்அத்) வித்ருத் தொழுதார்கள். இவை (மொத்தம்) பதிமூன்று ரக்அத்களாகும்.

அறிவிப்பாளர் : ஸைத் பின் காலித் அல்ஜுஹனீ (ரலி)

அத்தியாயம்: 6, பாடம்: 25, ஹதீஸ் எண்: 1283

حَدَّثَنَا ‏ ‏أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏غُنْدَرٌ ‏ ‏عَنْ ‏ ‏شُعْبَةَ ‏ ‏ح ‏ ‏و حَدَّثَنَا ‏ ‏ابْنُ الْمُثَنَّى ‏ ‏وَابْنُ بَشَّارٍ ‏ ‏قَالَا حَدَّثَنَا ‏ ‏مُحَمَّدُ بْنُ جَعْفَرٍ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏شُعْبَةُ ‏ ‏عَنْ ‏ ‏أَبِي جَمْرَةَ ‏ ‏قَالَ سَمِعْتُ ‏ ‏ابْنَ عَبَّاسٍ ‏ ‏يَقُولُا ‏

‏كَانَ رَسُولُ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏يُصَلِّي مِنْ اللَّيْلِ ثَلَاثَ عَشْرَةَ رَكْعَةً

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) இரவில் பதிமூன்று ரக்அத்கள் தொழும் வழக்கமுடையவர்களாக இருந்தார்கள்.

அறிவிப்பாளர் : இபுனு அப்பாஸ் (ரலி)

அத்தியாயம்: 6, பாடம்: 25, ஹதீஸ் எண்: 1282

و حَدَّثَنِي ‏ ‏هَارُونُ بْنُ عَبْدِ اللَّهِ ‏ ‏وَمُحَمَّدُ بْنُ رَافِعٍ ‏ ‏قَالَا حَدَّثَنَا ‏ ‏وَهْبُ بْنُ جَرِيرٍ ‏ ‏أَخْبَرَنِي ‏ ‏أَبِي ‏ ‏قَالَ سَمِعْتُ ‏ ‏قَيْسَ بْنَ سَعْدٍ ‏ ‏يُحَدِّثُ عَنْ ‏ ‏عَطَاءٍ ‏ ‏عَنْ ‏ ‏ابْنِ عَبَّاسٍ ‏ ‏قَالَ ‏

‏بَعَثَنِي ‏ ‏الْعَبَّاسُ ‏ ‏إِلَى النَّبِيِّ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏وَهُوَ فِي بَيْتِ خَالَتِي ‏ ‏مَيْمُونَةَ ‏ ‏فَبِتُّ مَعَهُ تِلْكَ اللَّيْلَةَ فَقَامَ ‏ ‏يُصَلِّي مِنْ اللَّيْلِ فَقُمْتُ عَنْ يَسَارِهِ فَتَنَاوَلَنِي مِنْ خَلْفِ ظَهْرِهِ فَجَعَلَنِي عَلَى يَمِينِهِ ‏

‏و حَدَّثَنِي ‏ ‏ابْنُ نُمَيْرٍ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏أَبِي ‏ ‏حَدَّثَنَا ‏ ‏عَبْدُ الْمَلِكِ ‏ ‏عَنْ ‏ ‏عَطَاءٍ ‏ ‏عَنْ ‏ ‏ابْنِ عَبَّاسٍ ‏ ‏قَالَ ‏ ‏بِتُّ عِنْدَ خَالَتِي ‏ ‏مَيْمُونَةَ ‏ ‏نَحْوَ حَدِيثِ ‏ ‏ابْنِ جُرَيْجٍ ‏ ‏وَقَيْسِ بْنِ سَعْدٍ

என்னை (என் தந்தை) அப்பாஸ் (ரலி) அவர்கள் நபி (ஸல்) அவர்களிடம் அனுப்பிவைத்தார்கள். அப்போது நபியவர்கள் என் சிறிய தாயார் மைமூனா (ரலி) அவர்களது இல்லத்தில் இருந்தார்கள். நான் அந்த இரவில் அவர்களுடன் தங்கியிருந்தேன். நபி (ஸல்) இரவில் தொழ நின்றார்கள். நானும் எழுந்து அவர்களுக்கு இடப் பக்கத்தில் நின்றேன். உடனே அவர்கள் தமது முதுகுக்குப் பின்னே என்னைப் பிடித்து வலப் பக்கத்திற்குக் கொண்டுசென்றார்கள்.

அறிவிப்பாளர் : இபுனு அப்பாஸ் (ரலி)

குறிப்பு :

அப்துல் மலிக் (ரஹ்) வழி அறிவிப்பில், “நான் என் சிறிய தாயார் மைமூனா (ரலி) அவர்களது இல்லத்தில் இரவில் தங்கியிருந்தேன்” என (இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியதாக) இடம்பெற்றுள்ளது.

அத்தியாயம்: 6, பாடம்: 25, ஹதீஸ் எண்: 1281

و حَدَّثَنِي ‏ ‏مُحَمَّدُ بْنُ حَاتِمٍ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏مُحَمَّدُ بْنُ بَكْرٍ ‏ ‏أَخْبَرَنَا ‏ ‏ابْنُ جُرَيْجٍ ‏ ‏أَخْبَرَنِي ‏ ‏عَطَاءٌ ‏ ‏عَنْ ‏ ‏ابْنِ عَبَّاسٍ ‏ ‏قَالَ ‏

‏بِتُّ ذَاتَ لَيْلَةٍ عِنْدَ خَالَتِي ‏ ‏مَيْمُونَةَ ‏ ‏فَقَامَ النَّبِيُّ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏يُصَلِّي مُتَطَوِّعًا مِنْ اللَّيْلِ فَقَامَ النَّبِيُّ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏إِلَى الْقِرْبَةِ فَتَوَضَّأَ فَقَامَ فَصَلَّى فَقُمْتُ لَمَّا رَأَيْتُهُ صَنَعَ ذَلِكَ فَتَوَضَّأْتُ مِنْ الْقِرْبَةِ ثُمَّ قُمْتُ إِلَى شِقِّهِ الْأَيْسَرِ فَأَخَذَ بِيَدِي مِنْ وَرَاءِ ظَهْرِهِ يَعْدِلُنِي كَذَلِكَ مِنْ وَرَاءِ ظَهْرِهِ إِلَى الشِّقِّ الْأَيْمَنِ قُلْتُ أَفِي التَّطَوُّعِ كَانَ ذَلِكَ قَالَ نَعَمْ

“நான் ஓர் இரவில் என் சிறிய தாயார் மைமூனா (ரலி) அவர்களிடம் (அவர்களது இல்லத்தில்) தங்கினேன். அந்த இரவில் நபி (ஸல்) கூடுதல் தொழுகையைத் தொழுவதற்காக எழுந்தார்கள். நபியவர்கள் தண்ணீர் பையை நோக்கிச் சென்று உளூச் செய்துவிட்டு (வந்து) தொழுதார்கள். இவ்வாறு அவர்கள் செய்வதைக் கண்டதும் நானும் எழுந்து அந்தப் பையிலிருந்து (தண்ணீரைச் சரித்து) உளூச் செய்துவிட்டு, அவர்களின் இடப் பக்கத்தில் நின்றேன். உடனே அவர்கள் தமது முதுகுக்குப் பின்னால் கையை நீட்டி எனது கையைப் பிடித்து, அப்படியே தமது முதுகுக்குப் பின்னால் கொண்டுசென்று (தமக்கு) வலப் பக்கத்தில் என்னை நிறுத்தினார்கள்” என்று இப்னு அப்பாஸ் (ரலி) கூறினார்கள். நான், “கூடுதலான (நஃபில்) தொழுகையிலா இவ்வாறு நடந்தது?” எனக் கேட்டேன். அதற்கு இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் “ஆம்” என்று பதிலளித்தார்கள்.

அறிவிப்பாளர் : இபுனு அப்பாஸ் (ரலி) வழியாக அதாஉ பின் அபீரபாஹ் (ரஹ்).