حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ بَشَّارٍ حَدَّثَنَا مُحَمَّدٌ وَهُوَ ابْنُ جَعْفَرٍ حَدَّثَنَا شُعْبَةُ عَنْ سَلَمَةَ عَنْ كُرَيْبٍ عَنْ ابْنِ عَبَّاسٍ قَالَ :
بِتُّ فِي بَيْتِ خَالَتِي مَيْمُونَةَ فَبَقَيْتُ كَيْفَ يُصَلِّي رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ فَقَامَ فَبَالَ ثُمَّ غَسَلَ وَجْهَهُ وَكَفَّيْهِ ثُمَّ نَامَ ثُمَّ قَامَ إِلَى الْقِرْبَةِ فَأَطْلَقَ شِنَاقَهَا ثُمَّ صَبَّ فِي الْجَفْنَةِ أَوْ الْقَصْعَةِ فَأَكَبَّهُ بِيَدِهِ عَلَيْهَا ثُمَّ تَوَضَّأَ وُضُوءًا حَسَنًا بَيْنَ الْوُضُوءَيْنِ ثُمَّ قَامَ يُصَلِّي فَجِئْتُ فَقُمْتُ إِلَى جَنْبِهِ فَقُمْتُ عَنْ يَسَارِهِ قَالَ فَأَخَذَنِي فَأَقَامَنِي عَنْ يَمِينِهِ فَتَكَامَلَتْ صَلَاةُ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ثَلَاثَ عَشْرَةَ رَكْعَةً ثُمَّ نَامَ حَتَّى نَفَخَ وَكُنَّا نَعْرِفُهُ إِذَا نَامَ بِنَفْخِهِ ثُمَّ خَرَجَ إِلَى الصَّلَاةِ فَصَلَّى فَجَعَلَ يَقُولُ فِي صَلَاتِهِ أَوْ فِي سُجُودِهِ اللَّهُمَّ اجْعَلْ فِي قَلْبِي نُورًا وَفِي سَمْعِي نُورًا وَفِي بَصَرِي نُورًا وَعَنْ يَمِينِي نُورًا وَعَنْ شِمَالِي نُورًا وَأَمَامِي نُورًا وَخَلْفِي نُورًا وَفَوْقِي نُورًا وَتَحْتِي نُورًا وَاجْعَلْ لِي نُورًا أَوْ قَالَ وَاجْعَلْنِي نُورًا
و حَدَّثَنِي إِسْحَقُ بْنُ مَنْصُورٍ حَدَّثَنَا النَّضْرُ بْنُ شُمَيْلٍ أَخْبَرَنَا شُعْبَةُ حَدَّثَنَا سَلَمَةُ بْنُ كُهَيْلٍ عَنْ بُكَيْرٍ عَنْ كُرَيْبٍ عَنْ ابْنِ عَبَّاسٍ قَالَ سَلَمَةُ فَلَقِيتُ كُرَيْبًا فَقَالَ قَالَ ابْنُ عَبَّاسٍ كُنْتُ عِنْدَ خَالَتِي مَيْمُونَةَ فَجَاءَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ثُمَّ ذَكَرَ بِمِثْلِ حَدِيثِ غُنْدَرٍ وَقَالَ وَاجْعَلْنِي نُورًا وَلَمْ يَشُكَّ و حَدَّثَنَا أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ وَهَنَّادُ بْنُ السَّرِيِّ قَالَا حَدَّثَنَا أَبُو الْأَحْوَصِ عَنْ سَعِيدِ بْنِ مَسْرُوقٍ عَنْ سَلَمَةَ بْنِ كُهَيْلٍ عَنْ أَبِي رِشْدِينٍ مَوْلَى ابْنِ عَبَّاسٍ عَنْ ابْنِ عَبَّاسٍ قَالَ بِتُّ عِنْدَ خَالَتِي مَيْمُونَةَ وَاقْتَصَّ الْحَدِيثَ وَلَمْ يَذْكُرْ غَسْلَ الْوَجْهِ وَالْكَفَّيْنِ غَيْرَ أَنَّهُ قَالَ ثُمَّ أَتَى الْقِرْبَةَ فَحَلَّ شِنَاقَهَا فَتَوَضَّأَ وُضُوءًا بَيْنَ الْوُضُوءَيْنِ ثُمَّ أَتَى فِرَاشَهُ فَنَامَ ثُمَّ قَامَ قَوْمَةً أُخْرَى فَأَتَى الْقِرْبَةَ فَحَلَّ شِنَاقَهَا ثُمَّ تَوَضَّأَ وُضُوءًا هُوَ الْوُضُوءُ وَقَالَ أَعْظِمْ لِي نُورًا وَلَمْ يَذْكُرْ وَاجْعَلْنِي نُورًا و حَدَّثَنِي أَبُو الطَّاهِرِ حَدَّثَنَا ابْنُ وَهْبٍ عَنْ عَبْدِ الرَّحْمَنِ بْنِ سَلْمَانَ الْحَجْرِيِّ عَنْ عُقَيْلِ بْنِ خَالِدٍ أَنَّ سَلَمَةَ بْنَ كُهَيْلٍ حَدَّثَهُ أَنَّ كُرَيْبًا حَدَّثَهُ أَنَّ ابْنَ عَبَّاسٍ بَاتَ لَيْلَةً عِنْدَ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ فَقَامَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ إِلَى الْقِرْبَةِ فَسَكَبَ مِنْهَا فَتَوَضَّأَ وَلَمْ يُكْثِرْ مِنْ الْمَاءِ وَلَمْ يُقَصِّرْ فِي الْوُضُوءِ وَسَاقَ الْحَدِيثَ وَفِيهِ قَالَ وَدَعَا رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ لَيْلَتَئِذٍ تِسْعَ عَشْرَةَ كَلِمَةً قَالَ سَلَمَةُ حَدَّثَنِيهَا كُرَيْبٌ فَحَفِظْتُ مِنْهَا ثِنْتَيْ عَشْرَةَ وَنَسِيتُ مَا بَقِيَ قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ اللَّهُمَّ اجْعَلْ لِي فِي قَلْبِي نُورًا وَفِي لِسَانِي نُورًا وَفِي سَمْعِي نُورًا وَفِي بَصَرِي نُورًا وَمِنْ فَوْقِي نُورًا وَمِنْ تَحْتِي نُورًا وَعَنْ يَمِينِي نُورًا وَعَنْ شِمَالِي نُورًا وَمِنْ بَيْنِ يَدَيَّ نُورًا وَمِنْ خَلْفِي نُورًا وَاجْعَلْ فِي نَفْسِي نُورًا وَأَعْظِمْ لِي نُورًا و حَدَّثَنِي أَبُو بَكْرِ بْنُ إِسْحَقَ أَخْبَرَنَا ابْنُ أَبِي مَرْيَمَ أَخْبَرَنَا مُحَمَّدُ بْنُ جَعْفَرٍ أَخْبَرَنِي شَرِيكُ بْنُ أَبِي نَمِرٍ عَنْ كُرَيْبٍ عَنْ ابْنِ عَبَّاسٍ أَنَّهُ قَالَ رَقَدْتُ فِي بَيْتِ مَيْمُونَةَ لَيْلَةَ كَانَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ عِنْدَهَا لِأَنْظُرَ كَيْفَ صَلَاةُ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ بِاللَّيْلِ قَالَ فَتَحَدَّثَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ مَعَ أَهْلِهِ سَاعَةً ثُمَّ رَقَدَ وَسَاقَ الْحَدِيثَ وَفِيهِ ثُمَّ قَامَ فَتَوَضَّأَ وَاسْتَنَّ
நான் ஓர் இரவில் என் சிறிய தாயார் மைமூனா (ரலி) இல்லத்தில் தங்கியிருந்தேன். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) இரவில் எப்படித் தொழுகின்றார்கள் என்பதைக் கவனிக்கக் காத்திருந்தேன். அவர்கள் எழுந்து சென்று சிறுநீர் கழித்து விட்டுப் பிறகு (திரும்பிவந்து) தமது முகத்தையும் கைகளையும் கழுவிவிட்டு உறங்கினார்கள். பின்னர் எழுந்து தண்ணீர் பையை நோக்கிச் சென்று அதன் சுருக்கை அவிழ்த்தார்கள். பிறகு தட்டில் அல்லது பெரிய பாத்திரத்தில் அதை ஊற்றி அதில் தமது கையை நுழைத்து நடுத்தரமாக அழகிய முறையில் உளூச் செய்தார்கள். பிறகு நின்று தொழுதார்கள். நான் சென்று அவர்களுக்கு (இடப்) பக்கத்தில் நின்றேன். உடனே அவர்கள் என்னைப் பிடித்து தமக்கு வலப் பக்கத்தில் நிறுத்தினார்கள். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) பதிமூன்று ரக்அத்கள் தொழுது முடித்தார்கள். பிறகு குறட்டைவிட்டு உறங்கினார்கள். (பொதுவாக) அவர்களது குறட்டைச் சப்தத்தை வைத்து அவர்கள் உறங்குகிறார்கள் என்பதை நாங்கள் அறிந்துகொள்வோம். பின்னர் (ஸுப்ஹுத்) தொழுகைக்குப் புறப்பட்டுச் சென்று தொழுதார்கள். அவர்கள் தமது தொழுகையில் அல்லது ஸஜ்தாவில்,
“அல்லாஹும்மஜ்அல் ஃபீ கல்பீ நூரன். வ ஃபீ ஸம்ஈ நூரன். வ ஃபீ பஸரீ நூரன். வ அன் யமீனீ நூரன். வ அன் ஷிமாலீ நூரன். வ அமாமீ நூரன். வ கல்ஃபீ நூரன். வ ஃபவ்கீ நூரன். வ தஹ்த்தீ நூரன். வஜ்அல்லீ நூரா/ வஜ்அல்னீ நூரா” என்று பிரார்த்தித்தார்கள்.
(பொருள்: இறைவா! என் இதயத்தில் ஒளியை ஏற்படுத்துவாயாக! என் செவிப்புலனிலும் ஒளியை ஏற்படுத்துவாயாக! என் பார்வையிலும் ஒளியை ஏற்படுத்துவாயாக! என் வலப் பக்கத்திலும் ஒளியை ஏற்படுத்துவாயாக! என் இடப் பக்கத்திலும் ஒளியை ஏற்படுத்துவாயாக.!எனக்கு முன்னும் ஒளியை ஏற்படுத்துவாயாக! எனக்குப் பின்னாலும் ஒளியை ஏற்படுத்துவாயாக!. எனக்கு மேலேயும் ஒளியை ஏற்படுத்துவாயாக! எனக்குக் கீழேயும் ஒளியை ஏற்படுத்துவாயாக! எனக்கு (எல்லாத் திசைகளிலும்) ஒளியை ஏற்படுத்துவாயாக (அல்லது) என்னை ஒளிமயமாக்குவாயாக).
அறிவிப்பாளர் : இப்னு அப்பாஸ் (ரலி)
குறிப்புகள் :
புகைர் (ரஹ்) வழி அறிவிப்பில், “நான் குறைப் (ரஹ்) அவர்களைச் சந்தித்தபோது, இப்னு அப்பாஸ் (ரலி) ‘நான் என் சிறிய தாயார் மைமூனா (ரலி) அவர்களிடம் இருந்தேன். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) வந்தார்கள்…’ என்று கூறிவிட்டு மேற்கண்ட ஹதீஸில் உள்ளவாறு குறிப்பிட்டார்கள்” என்றார்கள். மேலும், “என்னை ஒளிமயமாக ஆக்குவாயாக என்று (அல்லாஹ்வின் தூதர் (ஸல்) கூறியதாகவு)ம் ஐயமின்றி அறிவித்தார்கள்” என்று (இதன் அறிவிப்பாளர்களுள் ஒருவரான) ஸலமா (ரஹ்) கூறினார்கள்.
ஸயீத் இப்னு மஸ்ரூக் (ரஹ்) வழி அறிவிப்பில், “நான் என் சிறிய தாயார் மைமூனா (ரலி) அவர்களிடம் தங்கியிருந்தேன்” என்று இப்னு அப்பாஸ் (ரலி) கூறியதாக ஹதீஸ் தொடங்குகிறது. மேலும், அல்லாஹ்வின் தூதர் (ஸல்) முகத்தையும் கைகளையும் கழுவியதாக அதில் குறிப்பு இல்லை. மாறாக, “… பிறகு அவர்கள் தண்ணீர் பையருகே சென்று அதன் சுருக்கை அவிழ்த்துவிட்டார்கள். பிறகு நடுத்தரமாக உளூச் செய்தார்கள். பிறகு தமது படுக்கைக்கு வந்து உறங்கினார்கள். பிறகு மீண்டும் எழுந்து அந்தத் தண்ணீர் பைக்குச் சென்று அதன் சுருக்கை அவிழ்த்துவிட்டு, நிறைவான உளூ என்பதற்கு உதாரணமாக, செம்மையாக உளூச் செய்தார்கள்.” என்றும், ‘என்னை ஒளிமயமாக்குவாயாக’ எனும் சொற்கள் இடம்பெறாமல், ‘என் ஒளியை வலிமையாக்குவாயாக’ என்று கூறியதாக இடம்பெற்றுள்ளது.
உகைல் இப்னு காலித் (ரஹ்) வழி அறிவிப்பில், “நான் ஓர் இரவில் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் தங்கியிருந்தேன். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) தண்ணீர் பையை நோக்கிச் சென்று அதிலிருந்து தண்ணீர் ஊற்றி உளூச் செய்தார்கள்; அதிகமாகத் நீரைப் பயன்படுத்தவுமில்லை; உளூவில் குறைவைக்கவுமில்லை” என்று இப்னு அப்பாஸ் (ரலி) கூறியதாக இடம்பெற்றுள்ளது. மேலும், “அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அன்றைய இரவில் பத்தொன்பது விஷயங்களை இறைவனிடம் வேண்டினார்கள்” எனும் குறிப்பும் இடம்பெற்றுள்ளது.
இதன் அறிவிப்பாளர்களுள் ஒருவரான ஸலமா பின் குஹைல் (ரஹ்) கூறினார்:
எனக்கு அந்தப் பத்தொன்பது விஷயங்களையும் குறைப் (ரஹ்) அறிவித்தார்கள்.
அவற்றில் பன்னிரண்டு விஷயங்களை நான் மனனமிட்டுள்ளேன்; எஞ்சியவற்றை நான் மறந்துவிட்டேன். (அந்தப் பன்னிரண்டு விஷயங்கள் வருமாறு:)
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “அல்லாஹும்மஜ்அல் லீ ஃபீ கல்பீ நூரன். வஃபீ லிஸானீ நூரன். வஃபீ ஸம்யீ நூரன். வஃபீ பஸரீ நூரன். வ மின் ஃபவ்க்கீ நூரன். வ மின் தஹ்த்தீ நூரன். வ அன் யமீனீ நூரன். வ அன் ஷிமாலீ நூரன். வ மிம் பைனி யதைய்ய நூரன். வ மின் கல்ஃபீ நூரன். வஜ்அல் ஃபீ நஃப்ஸீ நூரன். வ அஃழிம் லீ நூரா” என்று வேண்டினார்கள்.
(பொருள்: இறைவா! என் இதயத்தில் எனக்கு ஒளியை ஏற்படுத்துவாயாக! என் நாவிலும் ஒளியை ஏற்படுத்துவாயாக! என் செவிப்புலனிலும் ஒளியை ஏற்படுத்துவாயாக! என் பார்வையிலும் ஒளியை ஏற்படுத்துவாயாக! எனக்கு மேலேயும் ஒளியை ஏற்படுத்துவாயாக. எனக்குக் கீழேயும் ஒளியை ஏற்படுத்துவாயாக! எனக்கு வலப் பக்கத்திலும் ஒளியை ஏற்படுத்துவாயாக! எனக்கு இடப் பக்கத்திலும் ஒளியை ஏற்படுத்துவாயாக! எனக்கு முன்னாலும் ஒளியை ஏற்படுத்துவாயாக! எனக்குப் பின்னும் ஒளியை ஏற்படுத்துவாயாக. என் மனத்திலும் ஒளியை ஏற்படுத்துவாயாக! எனக்கு ஒளியை வலிமையாக்குவாயாக!).
ஷரீக் பின் அபீநமிர் வழி அறிவிப்பில், “நான் ஓர் இரவில் மைமூனா (ரலி) இல்லத்தில் உறங்கினேன். அந்த இரவில் நபி (ஸல்) மைமூனா (ரலி) அவர்களிடம் தங்கியிருந்தார்கள். நபி (ஸல்) அவர்களது இரவுத் தொழுகை எவ்வாறு உள்ளது என்பதை நோட்டமிடுவதற்காகவே (நான் அவர்களது இல்லத்தில் உறங்கினேன்). அப்போது நபி (ஸல்) தம் வீட்டாருடன் சிறிது நேரம் பேசிக்கொண்டிருந்தார்கள். பிறகு உறங்கினார்கள்” என்றும் “பின்னர் எழுந்து உளூச் செய்தார்கள்; பல் துலக்கினார்கள்” எனும் குறிப்பும் இடம்பெற்றுள்ளது.