அத்தியாயம்: 6, பாடம்: 30, ஹதீஸ் எண்: 1306

و حَدَّثَنَا ‏ ‏أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏ابْنُ عُلَيَّةَ ‏ ‏ح ‏ ‏و حَدَّثَنِي ‏ ‏زُهَيْرُ بْنُ حَرْبٍ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏إِسْمَعِيلُ ‏ ‏عَنْ ‏ ‏عَبْدِ الْعَزِيزِ بْنِ صُهَيْبٍ ‏ ‏عَنْ ‏ ‏أَنَسٍ ‏ ‏قَالَ ‏

‏دَخَلَ رَسُولُ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏الْمَسْجِدَ وَحَبْلٌ مَمْدُودٌ بَيْنَ سَارِيَتَيْنِ فَقَالَ ‏ ‏مَا هَذَا قَالُوا ‏ ‏لِزَيْنَبَ ‏ ‏تُصَلِّي فَإِذَا كَسِلَتْ ‏ ‏أَوْ فَتَرَتْ ‏ ‏أَمْسَكَتْ بِهِ فَقَالَ حُلُّوهُ لِيُصَلِّ أَحَدُكُمْ نَشَاطَهُ فَإِذَا كَسِلَ ‏ ‏أَوْ فَتَرَ ‏ ‏قَعَدَ ‏

‏وَفِي حَدِيثِ ‏ ‏زُهَيْرٍ ‏ ‏فَلْيَقْعُدْ ‏ ‏و حَدَّثَنَاه ‏ ‏شَيْبَانُ بْنُ فَرُّوخَ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏عَبْدُ الْوَارِثِ ‏ ‏عَنْ ‏ ‏عَبْدِ الْعَزِيزِ ‏ ‏عَنْ ‏ ‏أَنَسٍ ‏ ‏عَنْ النَّبِيِّ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏مِثْلَهُ

அல்லாஹ்வின் தூதர் (ஸல்), (மஸ்ஜிதுந் நபவீ) பள்ளிவாசலுக்குள் வந்தபோது இரு தூண்களுக்கிடையில் நீண்ட கயிறு ஒன்று காணப்பட்டது. அல்லாஹ்வின் தூதர் (ஸல்), “இது என்ன?” என்று கேட்டார்கள். அதற்கு மக்கள், “இது, ஸைனப் (ரலி) அவர்களுக்கு உரியதாகும்; அவர் தொழும்போது சோர்வடைந்தால் அல்லது நிற்க இயலாவிட்டால் இந்தக் கயிற்றைப் பிடித்துக்கொள்வார்” என்று கூறினர். அல்லாஹ்வின் தூதர் (ஸல்), “இதை அவிழ்த்துவிடுங்கள். உங்களில் ஒருவர் உற்சாகமாக இருக்கும்போது தொழட்டும்; சோர்வடைந்தால் உட்கார்ந்துகொள்ளட்டும்” என்று கூறினார்கள்.

அறிவிப்பாளர் : அனஸ் (ரலி)

Share this Hadith:

Leave a Comment