و حَدَّثَنِي مُحَمَّدُ بْنُ حَاتِمٍ حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ بَكْرٍ أَخْبَرَنَا ابْنُ جُرَيْجٍ حَدَّثَنِي عَبْدَةُ بْنُ أَبِي لُبَابَةَ عَنْ شَقِيقِ بْنِ سَلَمَةَ قَالَ سَمِعْتُ ابْنَ مَسْعُودٍ يَقُولُ :
سَمِعْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُولُ بِئْسَمَا لِلرَّجُلِ أَنْ يَقُولَ نَسِيتُ سُورَةَ كَيْتَ وَكَيْتَ أَوْ نَسِيتُ آيَةَ كَيْتَ وَكَيْتَ بَلْ هُوَ نُسِّيَ
“ஒருவர், ‘இன்ன இன்ன (குர்ஆன்) அத்தியாயங்களை அல்லது இன்ன இன்ன (குர்ஆன்) வசனங்களை நான் மறந்துவிட்டேன்’ என்று கூறுவதுதான் அவரின் வார்த்தைகளிலேயே மிகவும் மோசமான வார்த்தையாகும். (அவ்வாறன்றி) ‘மறக்கடிக்கப்பட்டுவிட்டன’ என்று அவர் கூறட்டும்” என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) சொல்ல நான் செவியேற்றிருக்கின்றேன்.
அறிவிப்பாளர் : அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி)