அத்தியாயம்: 6, பாடம்: 37, ஹதீஸ் எண்: 1330

‏حَدَّثَنَا ‏ ‏هَدَّابُ بْنُ خَالِدٍ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏هَمَّامٌ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏قَتَادَةُ ‏ ‏عَنْ ‏ ‏أَنَسِ بْنِ مَالِكٍ ‏

‏أَنَّ رَسُولَ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏قَالَ ‏ ‏لِأُبَيٍّ ‏ ‏إِنَّ اللَّهَ أَمَرَنِي أَنْ أَقْرَأَ عَلَيْكَ قَالَ ‏ ‏آللَّهُ سَمَّانِي لَكَ قَالَ اللَّهُ سَمَّاكَ لِي قَالَ فَجَعَلَ ‏ ‏أُبَيٌّ ‏ ‏يَبْكِي

அல்லாஹ்வின் தூதர் (ஸல்), உபை பின் கஅப் (ரலி) அவர்களிடம் “உங்களுக்கு (குர்ஆன் அத்தியாயத்தை) ஓதிக் காட்டுமாறு அல்லாஹ் என்னைப் பணித்துள்ளான்” என்று சொன்னார்கள். உபை (ரலி), “என் பெயரை அல்லாஹ் தங்களிடம் குறிப்பிட்டானா?” என (உணர்ச்சிப் பெருக்குடன்) கேட்டார்கள். “(ஆம்) அல்லாஹ், உங்கள் பெயரை என்னிடம் குறிப்பிட்டான்” என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) பதிலளித்தார்கள். இதைக் கேட்டு உபை பின் கஅப் (ரலி) அழலானார்கள்.

அறிவிப்பாளர் : அனஸ் பின் மாலிக் (ரலி)

Share this Hadith:

Leave a Comment