அத்தியாயம்: 6, பாடம்: 39, ஹதீஸ் எண்: 1336

و حَدَّثَنَا ‏ ‏أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏الْفَضْلُ بْنُ دُكَيْنٍ ‏ ‏عَنْ ‏ ‏مُوسَى بْنِ عُلَيٍّ ‏ ‏قَالَ سَمِعْتُ ‏ ‏أَبِي ‏ ‏يُحَدِّثُ عَنْ ‏ ‏عُقْبَةَ بْنِ عَامِرٍ ‏ ‏قَالَ ‏

‏خَرَجَ رَسُولُ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏وَنَحْنُ فِي ‏ ‏الصُّفَّةِ ‏ ‏فَقَالَ ‏ ‏أَيُّكُمْ يُحِبُّ أَنْ ‏ ‏يَغْدُوَ ‏ ‏كُلَّ يَوْمٍ إِلَى ‏ ‏بُطْحَانَ ‏ ‏أَوْ إِلَى ‏ ‏الْعَقِيقِ ‏ ‏فَيَأْتِيَ مِنْهُ بِنَاقَتَيْنِ ‏ ‏كَوْمَاوَيْنِ ‏ ‏فِي غَيْرِ إِثْمٍ وَلَا قَطْعِ رَحِمٍ فَقُلْنَا يَا رَسُولَ اللَّهِ نُحِبُّ ذَلِكَ قَالَ أَفَلَا ‏ ‏يَغْدُو ‏ ‏أَحَدُكُمْ إِلَى الْمَسْجِدِ فَيَعْلَمُ أَوْ يَقْرَأُ آيَتَيْنِ مِنْ كِتَابِ اللَّهِ عَزَّ وَجَلَّ خَيْرٌ لَهُ مِنْ نَاقَتَيْنِ وَثَلَاثٌ خَيْرٌ لَهُ مِنْ ثَلَاثٍ وَأَرْبَعٌ خَيْرٌ لَهُ مِنْ أَرْبَعٍ وَمِنْ أَعْدَادِهِنَّ مِنْ الْإِبِلِ ‏

நாங்கள் (ஒருநாள்) ‘திண்ணை’யில் அமர்ந்திருந்தபோது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) எங்களிடம் வந்து, “ஒவ்வொரு நாள் காலையிலும் ‘புத்ஹான்’ அல்லது ‘அகீக்’ (சந்தைக்குச்) சென்று பாவம் செய்யாமல், உறவை அறுத்துக் கொள்ளாமல் பருத்த திமில்கள் கொண்ட இரு ஒட்டகங்களுடன் திரும்பி வருவதை உங்களுள் விரும்புபவர் யார்?” என்று கேட்டார்கள். “நாங்கள் (அனைவருமே) அதை விரும்புவோம்” என்று பதிலளித்தோம். அதற்கு அவர்கள், “உங்களுள் ஒருவர் காலையில் பள்ளிவாசலுக்குப் புறப்பட்டுச் சென்று அல்லாஹ்வின் வேதத்திலிருந்து இரு வசனங்களைக் கற்றுக்கொள்வது அல்லது ஓதுவது, இரு ஒட்டகங்களைவிடச் சிறந்ததாகும். மூன்று வசனங்கள் மூன்று ஒட்டகங்களைவிடவும், நான்கு வசனங்கள் நான்கு ஒட்டகங்களைவிடவும் சிறந்ததாகும். இவ்வாறு எத்தனை வசனங்கள் ஓதுகின்றாரோ அந்த அளவு ஒட்டகங்களைவிடச் சிறந்ததாக அமையும்” என்று கூறினார்கள்.

அறிவிப்பாளர் : உக்பா இப்னு ஆமிர் (ரலி)

Share this Hadith:

Leave a Comment