و حَدَّثَنِي زُهَيْرُ بْنُ حَرْبٍ حَدَّثَنَا يَعْقُوبُ بْنُ إِبْرَاهِيمَ حَدَّثَنِي أَبِي عَنْ ابْنِ شِهَابٍ عَنْ عَامِرِ بْنِ وَاثِلَةَ أَنَّ نَافِعَ بْنَ عَبْدِ الْحَارِثِ لَقِيَ عُمَرَ بِعُسْفَانَ وَكَانَ عُمَرُ يَسْتَعْمِلُهُ عَلَى مَكَّةَ فَقَالَ :
مَنْ اسْتَعْمَلْتَ عَلَى أَهْلِ الْوَادِي فَقَالَ ابْنَ أَبْزَى قَالَ وَمَنْ ابْنُ أَبْزَى قَالَ مَوْلًى مِنْ مَوَالِينَا قَالَ فَاسْتَخْلَفْتَ عَلَيْهِمْ مَوْلًى قَالَ إِنَّهُ قَارِئٌ لِكِتَابِ اللَّهِ عَزَّ وَجَلَّ وَإِنَّهُ عَالِمٌ بِالْفَرَائِضِ قَالَ عُمَرُ أَمَا إِنَّ نَبِيَّكُمْ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَدْ قَالَ إِنَّ اللَّهَ يَرْفَعُ بِهَذَا الْكِتَابِ أَقْوَامًا وَيَضَعُ بِهِ آخَرِينَ
و حَدَّثَنِي عَبْدُ اللَّهِ بْنُ عَبْدِ الرَّحْمَنِ الدَّارِمِيُّ وَأَبُو بَكْرِ بْنُ إِسْحَقَ قَالَا أَخْبَرَنَا أَبُو الْيَمَانِ أَخْبَرَنَا شُعَيْبٌ عَنْ الزُّهْرِيِّ قَالَ حَدَّثَنِي عَامِرُ بْنُ وَاثِلَةَ اللَّيْثِيُّ أَنَّ نَافِعَ بْنَ عَبْدِ الْحَارِثِ الْخُزَاعِيَّ لَقِيَ عُمَرَ بْنَ الْخَطَّابِ بِعُسْفَانَ بِمِثْلِ حَدِيثِ إِبْرَاهِيمَ بْنِ سَعْدٍ عَنْ الزُّهْرِيِّ
கலீஃபா உமர் (ரலி), நாஃபிஉ பின் அப்தில் ஹாரிஸ் (ரலி) அவர்களை மக்காவின் ஆளுநராக நியமித்திருந்த காலகட்டத்தில் நாஃபிஉ (ரலி), உமர் (ரலி) அவர்களை உஸ்ஃபான் எனுமிடத்தில் சந்தித்தார்கள். அப்போது உமர் (ரலி), “நீங்கள் இந்தப் பள்ளத்தாக்கு (மக்கா)வாசிகளுக்கு (தற்போது) எவரை ஆளுநராக நியமித்திருக்கின்றீர்?” என்று நாஃபிஉ (ரலி) அவர்களிடம் கேட்டார்கள். அதற்கு நாஃபிஉ (ரலி), “(அப்துர் ரஹ்மான்) இப்னு அப்ஸா (ரலி) அவர்களை” என்று பதிலளித்தார்கள். உமர் (ரலி), “இப்னு அப்ஸா என்பவர் யார்?” எனக் கேட்டார்கள். அதற்கு நாஃபிஉ (ரலி), “எங்களால் விடுதலை செய்யப்பட்ட எங்கள் (முன்னாள்) அடிமைகளில் ஒருவர்” என பதிலளித்தார்கள். அதற்கு உமர் (ரலி), “அவர்களுக்கு ஆட்சித் தலைவராக ஒரு முன்னாள் அடிமையையா நியமித்தீர்?” என்று வினவினார்கள். அதற்கு நாஃபிஉ (ரலி), “அவர் (இப்னு அப்ஸா) வல்லமையும் மாண்பும் நிறைந்த அல்லாஹ்வின் வேதத்தை அறிந்தவர்; பாகப் பிரிவினைச் சட்டங்களின் தேர்ந்த அறிஞர்” என்று கூறினார்கள். (இதைக் கேட்ட) உமர் (ரலி), “அறிந்துகொள்க: ‘அல்லாஹ் இந்த வேதத்தின் மூலம் சிலரை உயர்த்துகின்றான்; வேறு சிலரைத் தாழ்த்துகின்றான்’ என்று உங்கள் நபி (ஸல்) கூறியுள்ளார்கள். (இப்னு அப்ஸா வேத அறிவினால் மேன்மை பெற்றார்)” என்று அங்கீகரித்தார்கள்.
அறிவிப்பாளர் : நாஃபிஉ பின் அப்தில் ஹாரிஸ் (ரலி) வழியாக ஆமிர் பின் வாஸிலா (ரஹ்)
குறிப்பு :
அபுல் யமான் (ரஹ்) வழி அறிவிப்பு, “நாஃபிஉ பின் அல்ஹாரிஸ் அல்குஸாயீ (ரலி) உமர் பின் அல்கத்தாப் (ரலி) அவர்களை உஸ்ஃபான் என்னுமிடத்தில் சந்தித்தார்கள் …” எனத் தொடங்குகிறது. மற்றவை மேற்கண்ட ஹதீஸில் உள்ளவாறே இடம்பெற்றுள்ளன.