அத்தியாயம்: 6, பாடம்: 52, ஹதீஸ் எண்: 1381

و حَدَّثَنَا ‏ ‏ابْنُ الْمُثَنَّى ‏ ‏وَابْنُ بَشَّارٍ ‏ ‏قَالَ ‏ ‏ابْنُ الْمُثَنَّى ‏ ‏حَدَّثَنَا ‏ ‏مُحَمَّدُ بْنُ جَعْفَرٍ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏شُعْبَةُ ‏ ‏عَنْ ‏ ‏أَبِي إِسْحَقَ ‏ ‏عَنْ ‏ ‏الْأَسْوَدِ ‏ ‏وَمَسْرُوقٍ ‏ ‏قَالَا نَشْهَدُ عَلَى ‏ ‏عَائِشَةَ ‏ ‏أَنَّهَا قَالَتْ ‏

‏مَا كَانَ يَوْمُهُ الَّذِي كَانَ يَكُونُ عِنْدِي إِلَّا صَلَّاهُمَا رَسُولُ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏فِي بَيْتِي تَعْنِي الرَّكْعَتَيْنِ بَعْدَ الْعَصْرِ

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) என்னிடம் தங்கியிருக்கும் நாளில் என் வீட்டில் இரு ரக்அத்கள் -அஸ்ருக்குப் பின் தொழாமல் இருந்ததில்லை

அறிவிப்பாளர் : அன்னை ஆயிஷா (ரலி)

குறிப்புகள்:

இந்த ஹதீஸை அன்னை ஆயிஷா (ரலி) கூறியதாக அல்-அஸ்வத் (ரஹ்), மஸ்ரூக் (ரஹ்) ஆகிய இருவரும் சாட்சியளிக்கின்றனர்.

அஸ்ருக்குப் பிறகு இரண்டு ரக் அத்கள் தொழுவதை அல்லாஹ்வின் தூதர் (ஸல்) தமக்கு வழக்கப்படுத்திக்கொண்டது பிற்காலத்திலாகும் (இமாம் நவவீ – ஷரஹ் முஸ்லிம் ‘அல்‘-மின்ஹாஜ்‘).

அத்தியாயம்: 6, பாடம்: 52, ஹதீஸ் எண்: 1380

و حَدَّثَنَا ‏ ‏أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏عَلِيُّ بْنُ مُسْهِرٍ ‏ ‏ح ‏ ‏و حَدَّثَنَا ‏ ‏عَلِيُّ بْنُ حُجْرٍ ‏ ‏وَاللَّفْظُ لَهُ ‏ ‏أَخْبَرَنَا ‏ ‏عَلِيُّ بْنُ مُسْهِرٍ ‏ ‏أَخْبَرَنَا ‏ ‏أَبُو إِسْحَقَ الشَّيْبَانِيُّ ‏ ‏عَنْ ‏ ‏عَبْدِ الرَّحْمَنِ بْنِ الْأَسْوَدِ ‏ ‏عَنْ ‏ ‏أَبِيهِ ‏ ‏عَنْ ‏ ‏عَائِشَةَ ‏ ‏قَالَتْ ‏

‏صَلَاتَانِ مَا تَرَكَهُمَا رَسُولُ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏فِي بَيْتِي قَطُّ سِرًّا وَلَا عَلَانِيَةً رَكْعَتَيْنِ قَبْلَ الْفَجْرِ وَرَكْعَتَيْنِ بَعْدَ الْعَصْرِ

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) எனது வீட்டில் இருக்கும்போது, ஃபஜ்ருத் தொழுகைக்கு முன் இரண்டு ரக்அத்கள்; அஸ்ருத் தொழுகைக்குப் பின் இரண்டு ரக்அத்கள் ஆகிய இரண்டு தொழுகைகளை இரகசியமாகவோ வெளிப்படையாகவோ தொழாமல் விட்டதில்லை.

அறிவிப்பாளர் : அன்னை ஆயிஷா (ரலி)

அத்தியாயம்: 6, பாடம்: 52, ஹதீஸ் எண்: 1379

حَدَّثَنَا ‏ ‏زُهَيْرُ بْنُ حَرْبٍ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏جَرِيرٌ ‏ ‏ح ‏ ‏و حَدَّثَنَا ‏ ‏ابْنُ نُمَيْرٍ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏أَبِي ‏ ‏جَمِيعًا ‏ ‏عَنْ ‏ ‏هِشَامِ بْنِ عُرْوَةَ ‏ ‏عَنْ ‏ ‏أَبِيهِ ‏ ‏عَنْ ‏ ‏عَائِشَةَ ‏ ‏قَالَتْ ‏

‏مَا تَرَكَ رَسُولُ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏رَكْعَتَيْنِ بَعْدَ الْعَصْرِ عِنْدِي قَطُّ

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) என்னிடம் இருந்த நாட்களில் அஸ்ருக்குப் பிறகு இரண்டு ரக்அத்கள் தொழுவதை விட்டதேயில்லை.

அறிவிப்பாளர் : அன்னை ஆயிஷா (ரலி)

அத்தியாயம்: 6, பாடம்: 52, ஹதீஸ் எண்: 1378

حَدَّثَنَا ‏ ‏يَحْيَى بْنُ أَيُّوبَ ‏ ‏وَقُتَيْبَةُ ‏ ‏وَعَلِيُّ بْنُ حُجْرٍ ‏ ‏قَالَ ‏ ‏ابْنُ أَيُّوبَ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏إِسْمَعِيلُ وَهُوَ ابْنُ جَعْفَرٍ ‏ ‏أَخْبَرَنِي ‏ ‏مُحَمَّدٌ وَهُوَ ابْنُ أَبِي حَرْمَلَةَ ‏ ‏قَالَ أَخْبَرَنِي ‏ ‏أَبُو سَلَمَةَ ‏

‏أَنَّهُ سَأَلَ ‏ ‏عَائِشَةَ ‏ ‏عَنْ السَّجْدَتَيْنِ اللَّتَيْنِ كَانَ رَسُولُ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏يُصَلِّيهِمَا بَعْدَ الْعَصْرِ فَقَالَتْ ‏ ‏كَانَ يُصَلِّيهِمَا قَبْلَ الْعَصْرِ ثُمَّ إِنَّهُ شُغِلَ عَنْهُمَا أَوْ نَسِيَهُمَا فَصَلَّاهُمَا بَعْدَ الْعَصْرِ ثُمَّ أَثْبَتَهُمَا وَكَانَ إِذَا صَلَّى صَلَاةً أَثْبَتَهَا ‏

‏قَالَ ‏ ‏يَحْيَى بْنُ أَيُّوبَ ‏ ‏قَالَ ‏ ‏إِسْمَعِيلُ ‏ ‏تَعْنِي دَاوَمَ عَلَيْهَا

நான் ஆயிஷா (ரலி) அவர்களிடம் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அஸ்ருக்குப் பின்னர் தொழுதுவந்த இரண்டு ரக்அத்கள் பற்றிக் கேட்டேன். அதற்கவர்கள், “அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அஸ்ருக்கு முன்னால் இரண்டு ரக்அத்கள் தொழுவார்கள். ஏதேனும் அலுவல் காரணத்தால் தொழ முடியாமற்போகும்போது, அல்லது மறந்துவிடும்போது அவ்விரு ரக்அத்களையும் அஸ்ருக்குப் பின்னால் தொழுவார்கள். பிற்பாடு அவ்விரு ரக்அத்களையும் நிலைப்படுத்திக் கொண்டார்கள். அவர்கள் ஒரு தொழுகையைத் தொழுதால் நிலையாகத் தொழுதுவருவார்கள்” என்று விடையளித்தார்கள்.

அறிவிப்பாளர் : அன்னை ஆயிஷா (ரலி) வழியாக அபூஸலமா (ரஹ்)

குறிப்பு: ‘நிலைப்படுத்துதல்‘ என்பது ‘வழக்கப்படுத்துதல்‘ என்று இஸ்மாயீல் (ரஹ்) கூறியதாக யஹ்யா இப்னு அய்யூப் (ரஹ்) வழி அறிவிப்பில் காணப்படுகிறது.

அத்தியாயம்: 6, பாடம்: 52, ஹதீஸ் எண்: 1377

حَدَّثَنِي ‏ ‏حَرْمَلَةُ بْنُ يَحْيَى التُّجِيبِيُّ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏عَبْدُ اللَّهِ بْنُ وَهْبٍ ‏ ‏أَخْبَرَنِي ‏ ‏عَمْرٌو وَهُوَ ابْنُ الْحَارِثِ ‏ ‏عَنْ ‏ ‏بُكَيْرٍ ‏ ‏عَنْ ‏ ‏كُرَيْبٍ ‏ ‏مَوْلَى ‏ ‏ابْنِ عَبَّاسٍ ‏
‏أَنَّ ‏ ‏عَبْدَ اللَّهِ بْنَ عَبَّاسٍ ‏ ‏وَعَبْدَ الرَّحْمَنِ بْنَ أَزْهَرَ ‏ ‏وَالْمِسْوَرَ بْنَ مَخْرَمَةَ ‏ ‏أَرْسَلُوهُ إِلَى ‏ ‏عَائِشَةَ زَوْجِ النَّبِيِّ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏فَقَالُوا اقْرَأْ عَلَيْهَا السَّلَامَ مِنَّا جَمِيعًا وَسَلْهَا عَنْ الرَّكْعَتَيْنِ بَعْدَ الْعَصْرِ وَقُلْ إِنَّا أُخْبِرْنَا أَنَّكِ تُصَلِّينَهُمَا وَقَدْ بَلَغَنَا أَنَّ رَسُولَ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏نَهَى عَنْهُمَا قَالَ ‏ ‏ابْنُ عَبَّاسٍ ‏ ‏وَكُنْتُ أَضْرِبُ مَعَ ‏ ‏عُمَرَ بْنِ الْخَطَّابِ ‏ ‏النَّاسَ عَلَيْهَا

قَالَ ‏ ‏كُرَيْبٌ ‏ ‏فَدَخَلْتُ عَلَيْهَا وَبَلَّغْتُهَا مَا أَرْسَلُونِي بِهِ فَقَالَتْ سَلْ ‏ ‏أُمَّ سَلَمَةَ

‏فَخَرَجْتُ إِلَيْهِمْ فَأَخْبَرْتُهُمْ بِقَوْلِهَا فَرَدُّونِي إِلَى ‏ ‏أُمِّ سَلَمَةَ ‏ ‏بِمِثْلِ مَا أَرْسَلُونِي بِهِ إِلَى ‏ ‏عَائِشَةَ

‏فَقَالَتْ ‏ ‏أُمُّ سَلَمَةَ ‏ ‏سَمِعْتُ رَسُولَ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏يَنْهَى عَنْهُمَا ثُمَّ رَأَيْتُهُ يُصَلِّيهِمَا أَمَّا حِينَ صَلَّاهُمَا فَإِنَّهُ صَلَّى الْعَصْرَ ثُمَّ دَخَلَ وَعِنْدِي نِسْوَةٌ مِنْ ‏ ‏بَنِي حَرَامٍ ‏ ‏مِنْ ‏ ‏الْأَنْصَارِ ‏ ‏فَصَلَّاهُمَا فَأَرْسَلْتُ إِلَيْهِ الْجَارِيَةَ فَقُلْتُ قُومِي بِجَنْبِهِ فَقُولِي لَهُ تَقُولُ ‏ ‏أُمُّ سَلَمَةَ ‏ ‏يَا رَسُولَ اللَّهِ إِنِّي أَسْمَعُكَ ‏ ‏تَنْهَى عَنْ هَاتَيْنِ الرَّكْعَتَيْنِ وَأَرَاكَ تُصَلِّيهِمَا فَإِنْ أَشَارَ بِيَدِهِ فَاسْتَأْخِرِي عَنْهُ
قَالَ فَفَعَلَتْ الْجَارِيَةُ فَأَشَارَ بِيَدِهِ فَاسْتَأْخَرَتْ عَنْهُ فَلَمَّا انْصَرَفَ قَالَ ‏ ‏يَا ‏ ‏بِنْتَ ‏ ‏أَبِي أُمَيَّةَ ‏ ‏سَأَلْتِ عَنْ الرَّكْعَتَيْنِ بَعْدَ الْعَصْرِ إِنَّهُ أَتَانِي نَاسٌ مِنْ ‏ ‏عَبْدِ الْقَيْسِ ‏ ‏بِالْإِسْلَامِ مِنْ قَوْمِهِمْ فَشَغَلُونِي عَنْ الرَّكْعَتَيْنِ اللَّتَيْنِ بَعْدَ الظُّهْرِ فَهُمَا هَاتَانِ

இப்னு அப்பாஸ் (ரலி) அவர்களால் விடுதலை செய்யப்பட்ட அவர்களின் அடிமையான குறைப் (ரஹ்) கூறியதாவது:

இப்னு அப்பாஸ் (ரலி), அப்துர் ரஹ்மான் பின் அஸ்ஹர் (ரலி), மிஸ்வர் பின் மக்ரமா (ரலி) ஆகியோர் என்னிடம் நபி (ஸல்) அவர்களின் துணைவியார் ஆயிஷா (ரலி) அவர்களிடம் சென்று “எங்கள் அனைவரின் ஸலாமையும் கூறுவீராக! அஸ்ருக்குப் பின் இரண்டு ரக்அத்கள் தொழுவது பற்றி அம்மையாரிடம் கேட்பீராக! அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அதைத் தடை செய்ததாக எங்களுக்குச் செய்தி கிடைத்திருக்க, அத்தொழுகையைத் தாங்கள் தொழுவதாகக் கேள்விப்படுகின்றோமே! என்று கேட்பீராக!” என்று கூறினர். (மேலும்) இப்னு அப்பாஸ் (ரலி) அவர்களும் உமர் பின் அல்கத்தாப் (ரலி) அவர்களும் (அஸ்ருக்குப் பின் தொழுபவர்களை) அடிப்பவர்களாக இருந்ததையும் தெரிவிக்கச் சொன்னார்கள்.

நான் ஆயிஷா (ரலி) அவர்களிடம் சென்று அம்மூவரும் என்னை அனுப்பிவைத்த நோக்கத்தைச் சொன்னதற்கு, ஆயிஷா (ரலி), “நீர் உம்மு ஸலமா (ரலி) அவர்களிடம் கேளும்!” என்று கூறினார்கள்.

நான் அம்மூவரிடம் திரும்பிச் சென்று ஆயிஷா (ரலி), கூறியதைச் சொன்னேன். உம்மு ஸலமா (ரலி) அவர்களிடம் சென்று ஆயிஷா (ரலி) அவர்களிடம் கேட்ட அதே கேள்வியைக் கேட்குமாறு என்னை (மீண்டும்) அம்மூவரும் அனுப்பினார்கள்.

(அவ்வாறே நான் உம்மு ஸலமா (ரலி) அவர்களிடம் வந்து கேட்டபோது,) “அல்லாஹ்வின் தூதர் (ஸல்) (அஸ்ருக்குப் பின்) இவ்விரு ரக்அத்களைத் (தொழுவதைத்) தடை செய்ததை நான் செவியுற்றுள்ளேன். பின்னர் (ஒரு நாள்) அவர்கள் அஸ்ருத் தொழுதுவிட்டு எனது வீட்டுக்கு வந்து, அவ்விரு ரக்அத்களைத் தொழுததையும் பார்த்தேன். அப்போது என்னுடன் அன்சாரிகளில் பனூ ஹராம் குலத்தைச் சேர்ந்த பெண்கள் சிலர் இருந்தனர். அவர்களுள் ஓர் அடிமைப் பெண்ணை, தொழுதுகொண்டிருந்த அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் அனுப்பி “நீ அவர்களுக்கு அருகில் சென்று ‘அல்லாஹ்வின் தூதரே! (அஸ்ருக்குப் பிறகு) இந்த இரண்டு ரக்அத்கள் தொழ வேண்டாம் என நீங்கள் தடுத்ததை நான் செவியுற்றுள்ளேன். ஆனால், இப்போது தாங்களே அதைத் தொழுவதைப் பார்க்கிறேனே’ என நான் கேட்டதாக நீ கூறு. அவர்கள் தமது கையால் சைகை செய்தால் நீ பின்வாங்கி (வந்து)விடு!” எனக் கூறினேன். அப்பெண்ணும் (நான் சொன்னபடி) செய்தார். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) தமது கையால் சைகை செய்தபோது அப்பெண்மணி திரும்பி வந்துவிட்டார். தொழுகையை முடித்ததும் அல்லாஹ்வின் தூதர் (ஸல்), “அபூஉமைய்யாவின் மகளே! அஸ்ருக்குப் பிறகு (தொழுத) இரண்டு ரக்அத்களைப் பற்றிக் கேட்டாய். அப்துல் கைஸ் குலத்தாரில் சிலர் தம் குலத்தார் இஸ்லாத்தை ஏற்றுள்ள செய்தியுடன் என்னிடம் வந்திருந்தனர். அதனால் ளுஹருக்குப் பின்னர் இரண்டு ரக்அத்கள் தொழ முடியவில்லை. அத்தொழுகையே இந்த இரண்டு ரக்அத்களாகும்” என்றார்கள் என உம்மு ஸலமா (ரலி) விடையளித்தார்கள்.

அறிவிப்பாளர் : உம்மு ஸலமா (ரலி) வழியாக குறைப் (ரஹ்)