حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ عَبْدِ اللَّهِ بْنِ نُمَيْرٍ حَدَّثَنَا أَبِي حَدَّثَنَا عَبْدُ الْمَلِكِ بْنُ أَبِي سُلَيْمَانَ عَنْ عَطَاءٍ عَنْ جَابِرِ بْنِ عَبْدِ اللَّهِ قَالَ :
شَهِدْتُ مَعَ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ صَلَاةَ الْخَوْفِ فَصَفَّنَا صَفَّيْنِ صَفٌّ خَلْفَ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ وَالْعَدُوُّ بَيْنَنَا وَبَيْنَ الْقِبْلَةِ فَكَبَّرَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ وَكَبَّرْنَا جَمِيعًا ثُمَّ رَكَعَ وَرَكَعْنَا جَمِيعًا ثُمَّ رَفَعَ رَأْسَهُ مِنْ الرُّكُوعِ وَرَفَعْنَا جَمِيعًا ثُمَّ انْحَدَرَ بِالسُّجُودِ وَالصَّفُّ الَّذِي يَلِيهِ وَقَامَ الصَّفُّ الْمُؤَخَّرُ فِي نَحْرِ الْعَدُوِّ فَلَمَّا قَضَى النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ السُّجُودَ وَقَامَ الصَّفُّ الَّذِي يَلِيهِ انْحَدَرَ الصَّفُّ الْمُؤَخَّرُ بِالسُّجُودِ وَقَامُوا
ثُمَّ تَقَدَّمَ الصَّفُّ الْمُؤَخَّرُ وَتَأَخَّرَ الصَّفُّ الْمُقَدَّمُ ثُمَّ رَكَعَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ وَرَكَعْنَا جَمِيعًا ثُمَّ رَفَعَ رَأْسَهُ مِنْ الرُّكُوعِ وَرَفَعْنَا جَمِيعًا
ثُمَّ انْحَدَرَ بِالسُّجُودِ وَالصَّفُّ الَّذِي يَلِيهِ الَّذِي كَانَ مُؤَخَّرًا فِي الرَّكْعَةِ الْأُولَى وَقَامَ الصَّفُّ الْمُؤَخَّرُ فِي نُحُورِ الْعَدُوِّ فَلَمَّا قَضَى النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ السُّجُودَ وَالصَّفُّ الَّذِي يَلِيهِ انْحَدَرَ الصَّفُّ الْمُؤَخَّرُ بِالسُّجُودِ فَسَجَدُوا ثُمَّ سَلَّمَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ وَسَلَّمْنَا جَمِيعًا قَالَ جَابِرٌ كَمَا يَصْنَعُ حَرَسُكُمْ هَؤُلَاءِ بِأُمَرَائِهِمْ
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடன் அச்சச் சூழல் தொழுகையில் நான் பங்கேற்றுள்ளேன். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) எங்களைத் தமக்குப் பின்னால் இரு வரிசைகளாக நிறுத்தினார்கள். அப்போது எதிரிகள் எங்களுக்கும் (தொழும் திசையான) கிப்லாவுக்குமிடையில் இருந்தார்கள். நபி (ஸல்) (துவக்க) தக்பீர் கூறினார்கள். நாங்கள் அனைவரும் தக்பீர் கூறினோம். பின்னர் ருகூஉச் செய்தார்கள். நாங்கள் அனைவரும் ருகூஉச் செய்தோம். பின்னர் ருகூஉவிலிருந்து தலையை உயர்த்தினார்கள். நாங்கள் அனைவரும் (தலையை) உயர்த்தினோம். பிறகு நபி (ஸல்) அவர்களும் அவர்களை அடுத்து (முதல் வரிசையில்) நின்றவர்களும் குனிந்து ஸஜ்தாச் செய்தனர். அப்போது பின் வரிசையிலிருந்தவர்கள் எதிரிகளுக்கு நேராக (அவர்களைக் கண்காணித்தவாறு) நின்றுகொண்டேயிருந்தனர். நபி (ஸல்) அவர்களும் அவர்களைப் பின்பற்றி முன் வரிசையிலிருந்தவர்களும் ஸஜ்தாவை நிறைவேற்றி எழுந்து நின்றதும் பின் வரிசையிலிருந்தவர்கள் குனிந்து ஸஜ்தாச் செய்தனர். பிறகு எழுந்தனர்.
பிறகு பின் வரிசையினர் முன் (வரிசைக்கு) வந்தனர். முன் வரிசையினர் பின் (வரிசைக்குச்) சென்றனர். பிறகு நபி (ஸல்) ருகூஉச் செய்தபோது (இரு வரிசையினர்) அனைவரும் ருகூஉச் செய்தோம். பிறகு நபி (ஸல்) ருகூஉவிலிருந்து தலையை உயர்த்தியபோது நாங்கள் அனைவரும் தலையை உயர்த்தினோம்.
பிறகு நபி (ஸல்) குனிந்து ஸஜ்தாச் செய்தார்கள். முதல் ரக்அத் நடைபெற்றபோது பின் வரிசையிலிருந்தவர்களும் இப்போது நபியவர்களை அடுத்து இருப்பவர்களுமான (முதல்) அணியினர் ஸஜ்தாச் செய்தார்கள். பின்வரிசையினர் (ஸஜ்தாச் செய்யாமல்) எதிரிகளுக்கு நேராக (அவர்களைக் கண்காணித்தவாறு) நின்று கொண்டனர். நபி (ஸல்) அவர்களும் முன் வரிசையினரும் ஸஜ்தாச் செய்து முடித்த பின்னர் பின்வரிசையில் நின்றுகொண்டிருந்தவர்கள் குனிந்து ஸஜ்தாச் செய்தனர். நபி (ஸல்) ஸலாம் கொடுத்தபோது நாங்கள் அனைவரும் ஸலாம் கொடுத்தோம்.
உங்கள் படைவீரர்கள் (இக்காலத்தில்) தங்கள் தலைவர்களுடன் சேர்ந்து (போர்க் களங்களில்) தொழுவதைப் போன்றுதான் (அக்காலத்தில் நாங்களும் தொழுதோம்).
அறிவிப்பாளர் : ஜாபிர் பின் அப்தில்லாஹ் (ரலி)