அத்தியாயம்: 6, பாடம்: 55, ஹதீஸ் எண்: 1390

حَدَّثَنَا ‏ ‏يَحْيَى بْنُ يَحْيَى ‏ ‏قَالَ قَرَأْتُ عَلَى ‏ ‏مَالِكٍ ‏ ‏عَنْ ‏ ‏يَزِيدَ بْنِ رُومَانَ ‏ ‏عَنْ ‏ ‏صَالِحِ بْنِ خَوَّاتٍ ‏ ‏عَمَّنْ ‏ ‏صَلَّى مَعَ ‏ ‏رَسُولِ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏يَوْمَ ‏ ‏ذَاتِ الرِّقَاعِ ‏ ‏صَلَاةَ الْخَوْفِ

‏أَنَّ طَائِفَةً صَفَّتْ مَعَهُ وَطَائِفَةٌ وِجَاهَ الْعَدُوِّ فَصَلَّى بِالَّذِينَ مَعَهُ رَكْعَةً ثُمَّ ثَبَتَ قَائِمًا وَأَتَمُّوا لِأَنْفُسِهِمْ ثُمَّ انْصَرَفُوا فَصَفُّوا وِجَاهَ الْعَدُوِّ وَجَاءَتْ الطَّائِفَةُ الْأُخْرَى فَصَلَّى بِهِمْ الرَّكْعَةَ الَّتِي بَقِيَتْ ثُمَّ ثَبَتَ جَالِسًا وَأَتَمُّوا لِأَنْفُسِهِمْ ثُمَّ سَلَّمَ بِهِمْ

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடன் ‘தாத்துர் ரிகாஉ’ போரின்போது அச்சச் சூழல் தொழுகை தொழுத (நபித்தோழர்களுள்) ஒருவர் கூறியதாவது:

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அப்போரின்போது அச்சச் சூழல் தொழுகையைத் தொழுவித்தார்கள். (எங்களில்) ஓர் அணியினர் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடன் தொழுகையில் அணி வகுத்தனர். மற்றோர் அணியினர் எதிரிகளுக்கு எதிரே அணிவகுத்தனர். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) தம்முடன் (தொழுகைக்காக) நின்றவர்களுக்கு ஒரு ரக்அத் தொழுவித்துவிட்டு அப்படியே நின்றுகொண்டார்கள். அந்த அணியினர் தங்களுக்கு (மீதியிருந்த இன்னொரு ரக்அத்தைத் தானாகவே) நிறைவு செய்துகொண்டு, திரும்பிச் சென்று எதிரிகளுக்கு எதிரே அணிவகுத்து நின்றுகொண்டார்கள். (அதுவரை எதிரிகளுக்கு எதிரே நின்றுகொண்டிருந்த) மற்றோர் அணியினர் வந்தனர். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) (தம்முடைய தொழுகையில்) மீதியிருந்த ஒரு ரக்அத்தை இவர்களுக்குத் தொழுவித்துவிட்டு (அப்படியே) அமர்ந்துகொண்டிருந்தார்கள். (இரண்டாவது அணியினர்) தங்களுக்கு (மீதியிருந்த ஒரு ரக்அத்தை) நிறைவு செய்தனர். பிறகு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) ஸலாம் கொடுத்தார்கள்.

அறிவிப்பாளர் : ஸாலிஹ் பின் கவ்வாத் பின் ஜுபைர் (ரஹ்)

Share this Hadith:

Leave a Comment