و حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ عَبْدِ الرَّحْمَنِ الدَّارِمِيُّ أَخْبَرَنَا يَحْيَى يَعْنِي ابْنَ حَسَّانَ حَدَّثَنَا مُعَاوِيَةُ وَهُوَ ابْنُ سَلَّامٍ أَخْبَرَنِي يَحْيَى أَخْبَرَنِي أَبُو سَلَمَةَ بْنُ عَبْدِ الرَّحْمَنِ أَنَّ جَابِرًا أَخْبَرَهُ :
أَنَّهُ صَلَّى مَعَ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ صَلَاةَ الْخَوْفِ فَصَلَّى رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ بِإِحْدَى الطَّائِفَتَيْنِ رَكْعَتَيْنِ ثُمَّ صَلَّى بِالطَّائِفَةِ الْأُخْرَى رَكْعَتَيْنِ فَصَلَّى رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ أَرْبَعَ رَكَعَاتٍ وَصَلَّى بِكُلِّ طَائِفَةٍ رَكْعَتَيْنِ
நான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடன் அச்சச் சூழல் தொழுகையைத் தொழுதிருக்கின்றேன். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) (தம்முடனிருந்த தோழர்களில்) ஓர் அணியினருக்கு இரண்டு ரக்அத்கள் தொழுவித்தார்கள். பிறகு மற்றோர் அணியினருக்கு இரண்டு ரக்அத்கள் தொழுவித்தார்கள். அதாவது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) நான்கு ரக்அத்கள் தொழுதார்கள்; (தம்முடனிருந்த) ஒவ்வோர் அணியினருக்கும் (தலா) இரண்டு ரக்அத்கள் தொழுவித்தார்கள்.
அறிவிப்பாளர் : ஜாபிர் (ரலி)