அத்தியாயம்: 6, பாடம்: 07, ஹதீஸ் எண்: 1159

و حَدَّثَنَا ‏ ‏أَبُو كُرَيْبٍ ‏ ‏أَخْبَرَنَا ‏ ‏ابْنُ أَبِي زَائِدَةَ ‏ ‏عَنْ
‏ ‏مِسْعَرٍ ‏ ‏عَنْ ‏ ‏ثَابِتِ بْنِ عُبَيْدٍ ‏ ‏عَنْ ‏ ‏ابْنِ الْبَرَاءِ ‏ ‏عَنْ ‏ ‏الْبَرَاءِ ‏ ‏قَالَ

‏كُنَّا إِذَا صَلَّيْنَا خَلْفَ رَسُولِ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏أَحْبَبْنَا أَنْ نَكُونَ عَنْ يَمِينِهِ يُقْبِلُ عَلَيْنَا بِوَجْهِهِ قَالَ فَسَمِعْتُهُ يَقُولُ ‏ ‏رَبِّ قِنِي عَذَابَكَ يَوْمَ تَبْعَثُ ‏ ‏أَوْ تَجْمَعُ ‏ ‏عِبَادَكَ ‏

و حَدَّثَنَاه ‏ ‏أَبُو كُرَيْبٍ ‏ ‏وَزُهَيْرُ بْنُ حَرْبٍ ‏ ‏قَالَا حَدَّثَنَا ‏ ‏وَكِيعٌ ‏ ‏عَنْ ‏ ‏مِسْعَرٍ ‏ ‏بِهَذَا الْإِسْنَادِ ‏ ‏وَلَمْ يَذْكُرْ يُقْبِلُ عَلَيْنَا بِوَجْهِهِ

நாங்கள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுக்குப் பின்னால் தொழும்போது அவர்களுக்கு வலப்பக்க வரிசையில் இருப்பதையே விரும்புவோம். அவர்கள் (தொழுது முடித்ததும்) எங்களை நோக்கித் திரும்புவார்கள். அப்போது அவர்கள், “ரப்பீ கினீ அதாபக யவ்ம தப்அஸு (அல்லது தஜ்மஉ’) இபாதக்க’ (இறைவா! உன் அடியார்களை உயிர் கொடுத்து எழுப்பும்’ (அல்லது ஒன்றுதிரட்டும்) நாளில் உன் வேதனையிலிருந்து என்னைக் காப்பாயாக!)” என்று பிரார்த்திப்பதை நான் கேட்டுள்ளேன்.

அறிவிப்பாளர் : பராஉ பின் ஆஸிப் (ரலி)

குறிப்பு :

வகீஉ (ரஹ்) வழி அறிவிப்பில், “எங்களை நோக்கித் திரும்புவார்கள்” என்பது இடம்பெறவில்லை.

Share this Hadith:

Leave a Comment