அத்தியாயம்: 7, பாடம்: 01, ஹதீஸ் எண்: 1396

حَدَّثَنَا ‏ ‏إِسْحَقُ بْنُ إِبْرَاهِيمَ ‏ ‏أَخْبَرَنَا ‏ ‏الْوَلِيدُ بْنُ مُسْلِمٍ ‏ ‏عَنْ ‏ ‏الْأَوْزَاعِيِّ ‏ ‏قَالَ حَدَّثَنِي ‏ ‏يَحْيَى بْنُ أَبِي كَثِيرٍ ‏ ‏حَدَّثَنِي ‏ ‏أَبُو سَلَمَةَ بْنُ عَبْدِ الرَّحْمَنِ ‏ ‏حَدَّثَنِي ‏ ‏أَبُو هُرَيْرَةَ ‏ ‏قَالَ :‏

‏ ‏بَيْنَمَا ‏ ‏عُمَرُ بْنُ الْخَطَّابِ ‏ ‏يَخْطُبُ النَّاسَ يَوْمَ الْجُمُعَةِ إِذْ دَخَلَ ‏ ‏عُثْمَانُ بْنُ عَفَّانَ ‏ ‏فَعَرَّضَ بِهِ ‏ ‏عُمَرُ ‏ ‏فَقَالَ مَا بَالُ رِجَالٍ يَتَأَخَّرُونَ بَعْدَ النِّدَاءِ فَقَالَ ‏ ‏عُثْمَانُ ‏ ‏يَا أَمِيرَ الْمُؤْمِنِينَ مَا زِدْتُ حِينَ سَمِعْتُ النِّدَاءَ أَنْ تَوَضَّأْتُ ثُمَّ أَقْبَلْتُ ‏فَقَالَ ‏ ‏عُمَرُ ‏ ‏وَالْوُضُوءَ أَيْضًا أَلَمْ تَسْمَعُوا رَسُولَ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏يَقُولُ ‏ ‏إِذَا جَاءَ أَحَدُكُمْ إِلَى الْجُمُعَةِ فَلْيَغْتَسِلْ

உமர் பின் அல்கத்தாப் (ரலி) வெள்ளிக்கிழமையன்று மக்களுக்கு உரையாற்றிக்கொண்டிருந்தபோது, உஸ்மான் பின் அஃப்பான் (ரலி) (பள்ளிக்குத் தாமதமாக) வந்தார்கள். அப்போது உமர் (ரலி), “சிலருக்கு என்ன நேர்ந்தது? அவர்கள் தொழுகை அறிவிப்புச் செய்யப்பட்ட பின் தாமதமாக வருகின்றனரே!” என உஸ்மான் (ரலி) அவர்களைக் குறிப்பிட்டுக் கேட்டார்கள். அதற்கு உஸ்மான் (ரலி), “இறைநம்பிக்கையாளர்களின் தலைவரே! தொழுகை அறிவிப்பைக் கேட்டவுடன் உளூச் செய்துவிட்டுப் புறப்பட்டுவிட்டேன்” என்று கூறினார்கள். அதற்கு உமர் (ரலி), “உளூ மட்டும்தானா? அல்லாஹ்வின் தூதர் (ஸல்) ‘உங்களில் ஒருவர் ஜும்ஆவுக்குச் செல்லும்போது குளித்துக்கொள்ளட்டும்’ எனக் கூறியதை நீங்கள் செவியுறவில்லையா?” என்று கேட்டார்கள்.

அறிவிப்பாளர் : அபூஹுரைரா (ரலி)

Share this Hadith:

Leave a Comment