அத்தியாயம்: 7, பாடம்: 18, ஹதீஸ் எண்: 1461

و حَدَّثَنَا ‏ ‏يَحْيَى بْنُ يَحْيَى ‏ ‏قَالَ قَرَأْتُ عَلَى ‏ ‏مَالِكٍ ‏ ‏عَنْ ‏ ‏نَافِعٍ ‏ ‏عَنْ ‏ ‏عَبْدِ اللَّهِ بْنِ عُمَرَ ‏ ‏أَنَّهُ ‏

‏وَصَفَ تَطَوُّعَ صَلَاةِ رَسُولِ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏قَالَ فَكَانَ لَا ‏ ‏يُصَلِّي بَعْدَ الْجُمُعَةِ حَتَّى يَنْصَرِفَ فَيُصَلِّي رَكْعَتَيْنِ فِي بَيْتِهِ ‏
‏قَالَ ‏ ‏يَحْيَى ‏ ‏أَظُنُّنِي قَرَأْتُ فَيُصَلِّي أَوْ ‏ ‏أَلْبَتَّةَ

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) தொழுதுவந்த கூடுதலான தொழுகைகள் குறித்து அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) குறிப்பிடும்போது, “அல்லாஹ்வின் தூதர் (ஸல்) ஜும்ஆத் தொழுதபின் (வீட்டுக்குத்) திரும்பிச் செல்லும்வரை (பள்ளியில்) தொழமாட்டார்கள். (வீட்டுக்குச் சென்றதும்) வீட்டில் இரண்டு ரக்அத்கள் (ஸுன்னத்) தொழுவார்கள்” என்று கூறினார்கள்.

அறிவிப்பாளர் : இபுனு உமர் (ரலி) வழியாக நாஃபிஉ (ரஹ்)

Share this Hadith:

Leave a Comment