அத்தியாயம்: 7, பாடம்: 18, ஹதீஸ் எண்: 1463

حَدَّثَنَا ‏ ‏أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏غُنْدَرٌ ‏ ‏عَنْ ‏ ‏ابْنِ جُرَيْجٍ ‏ ‏قَالَ أَخْبَرَنِي ‏ ‏عُمَرُ بْنُ عَطَاءِ بْنِ أَبِي الْخُوَارِ ‏ ‏أَنَّ ‏ ‏نَافِعَ بْنَ جُبَيْرٍ ‏ ‏أَرْسَلَهُ إِلَى ‏ ‏السَّائِبِ ‏ ‏ابْنِ أُخْتِ ‏ ‏نَمِرٍ ‏ ‏يَسْأَلُهُ عَنْ شَيْءٍ رَآهُ مِنْهُ ‏ ‏مُعَاوِيَةُ ‏ ‏فِي الصَّلَاةِ ‏ ‏فَقَالَ ‏ ‏نَعَمْ صَلَّيْتُ مَعَهُ الْجُمُعَةَ فِي ‏ ‏الْمَقْصُورَةِ ‏ ‏فَلَمَّا سَلَّمَ الْإِمَامُ قُمْتُ فِي مَقَامِي فَصَلَّيْتُ فَلَمَّا دَخَلَ أَرْسَلَ إِلَيَّ فَقَالَ لَا تَعُدْ لِمَا فَعَلْتَ إِذَا صَلَّيْتَ الْجُمُعَةَ فَلَا تَصِلْهَا بِصَلَاةٍ حَتَّى تَكَلَّمَ أَوْ تَخْرُجَ ‏

‏فَإِنَّ رَسُولَ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏أَمَرَنَا بِذَلِكَ ‏ ‏أَنْ لَا ‏ ‏تُوصَلَ ‏ ‏صَلَاةٌ بِصَلَاةٍ حَتَّى نَتَكَلَّمَ أَوْ نَخْرُجَ ‏

‏و حَدَّثَنَا ‏ ‏هَارُونُ بْنُ عَبْدِ اللَّهِ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏حَجَّاجُ بْنُ مُحَمَّدٍ ‏ ‏قَالَ قَالَ ‏ ‏ابْنُ جُرَيْجٍ ‏ ‏أَخْبَرَنِي ‏ ‏عُمَرُ بْنُ عَطَاءٍ ‏ ‏أَنَّ ‏ ‏نَافِعَ بْنَ جُبَيْرٍ ‏ ‏أَرْسَلَهُ إِلَى ‏ ‏السَّائِبِ بْنِ يَزِيدَ ‏ ‏ابْنِ أُخْتِ ‏ ‏نَمِرٍ ‏ ‏وَسَاقَ الْحَدِيثَ بِمِثْلِهِ غَيْرَ ‏ ‏أَنَّهُ قَالَ ‏ ‏فَلَمَّا سَلَّمَ قُمْتُ فِي مَقَامِي وَلَمْ يَذْكُرْ الْإِمَامَ

நாஃபிஉ பின் ஜுபைர் (ரஹ்) என்னை ஸாயிப் பின் யஸீத் (ரலி) அவர்களிடம் அனுப்பி, “நீங்கள் முஆவியா (ரலி) அவர்களுடன் ஜும்ஆத் தொழுதுவிட்டு, அதே இடத்தில் எழுந்து நின்று தொடர்ந்து (ஸுன்னத்) தொழுததைக் கண்ட முஆவியா (ரலி) என்ன கூறினார்கள்?” என்பது பற்றிக் கேட்கச் சொன்னார்கள் என்றேன்.

அதற்கு ஸாயிப் (ரலி), “ஆம்; நான் முஆவியா (ரலி) அவர்களுடன் பள்ளிவாசலில் இருந்த ஒரு குறுகிய இடத்தில் ஜும்ஆத் தொழுதேன். இமாம் ஸலாம் கொடுத்ததும் நான் உடனே அதே இடத்தில் எழுந்து (கூடுதலான தொழுகை) தொழுதேன். முஆவியா (ரலி) (ஜும்ஆத் தொழுததும் எழுந்து) தமது அறைக்குள் நுழைந்து, என்னை அழைத்துவருமாறு ஆளனுப்பினார்கள்.

(நான் சென்றபோது என்னிடம்), “இப்போது செய்ததுபோல் இனிமேல் செய்யாதீர்! ஜும்ஆத் தொழுததும் (யாருடனும்) உரையாடாமலோ, பள்ளிவாசலிலிருந்து வெளியேறிச் செல்லாமலோ (பள்ளிவாசலில் கூடுதல் தொழுகை) தொழாதீர்! இவ்வாறுதான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) எங்களுக்கு உத்தரவிட்டார்கள். அதாவது, (கடமையான) ஒரு தொழுகைக்கும் (கூடுதலான) மற்றொரு தொழுகைக்குமிடையே நமக்குள் உரையாடாமல் அல்லது (பள்ளிவாசலில் இருந்து) வெளியேறிச் செல்லாமல் அவ்விரு தொழுகைகளையும் (சேர்ந்தாற்போல்) அடுத்தடுத்துத் தொழக் கூடாது” என்று முஆவியா (ரலி) கூறினார்கள் என்று விவரித்தார்கள்.

அறிவிப்பாளர்: முஆவியா (ரலி) வழியாக உமர் பின் அதாஉ பின் அபில்குவார் (ரஹ்)


குறிப்பு : ஹஜ்ஜாஜ் பின் முஹம்மது (ரஹ்) வழி அறிவிப்பில், “இமாம் ஸலாம் கொடுத்தபோது” என்று இல்லாமல், “அவர் ஸலாம் கொடுத்தபோது நான் எழுந்து, அதே இடத்தில் நின்று…” என இடம் பெற்றுள்ளது.

Share this Hadith:

Leave a Comment