அத்தியாயம்: 15, பாடம்: 15.17, ஹதீஸ் எண்: 2108

حَدَّثَنَا ‏ ‏يَحْيَى بْنُ يَحْيَى التَّمِيمِيُّ ‏ ‏قَالَ قَرَأْتُ عَلَى ‏ ‏مَالِكٍ ‏ ‏عَنْ ‏ ‏ابْنِ شِهَابٍ ‏ ‏عَنْ ‏ ‏عُرْوَةَ ‏ ‏عَنْ ‏ ‏عَائِشَةَ ‏ ‏رَضِيَ اللَّهُ عَنْهَا ‏ ‏أَنَّهَا قَالَتْ : ‏

‏خَرَجْنَا مَعَ رَسُولِ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏عَامَ حَجَّةِ الْوَدَاعِ فَأَهْلَلْنَا بِعُمْرَةٍ ثُمَّ قَالَ رَسُولُ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏مَنْ كَانَ مَعَهُ ‏ ‏هَدْيٌ ‏ ‏فَلْيُهِلَّ بِالْحَجِّ مَعَ الْعُمْرَةِ ثُمَّ لَا يَحِلُّ حَتَّى يَحِلَّ مِنْهُمَا جَمِيعًا قَالَتْ فَقَدِمْتُ ‏ ‏مَكَّةَ ‏ ‏وَأَنَا حَائِضٌ لَمْ أَطُفْ ‏ ‏بِالْبَيْتِ ‏ ‏وَلَا بَيْنَ ‏ ‏الصَّفَا ‏ ‏وَالْمَرْوَةِ ‏ ‏فَشَكَوْتُ ذَلِكَ إِلَى رَسُولِ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏فَقَالَ ‏ ‏انْقُضِي رَأْسَكِ ‏ ‏وَامْتَشِطِي وَأَهِلِّي بِالْحَجِّ وَدَعِي الْعُمْرَةَ قَالَتْ فَفَعَلْتُ فَلَمَّا قَضَيْنَا الْحَجَّ أَرْسَلَنِي رَسُولُ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏مَعَ ‏ ‏عَبْدِ الرَّحْمَنِ بْنِ أَبِي بَكْرٍ ‏ ‏إِلَى ‏ ‏التَّنْعِيمِ ‏ ‏فَاعْتَمَرْتُ فَقَالَ هَذِهِ مَكَانُ عُمْرَتِكِ فَطَافَ الَّذِينَ أَهَلُّوا بِالْعُمْرَةِ بِالْبَيْتِ ‏ ‏وَبِالصَّفَا ‏ ‏وَالْمَرْوَةِ ‏ ‏ثُمَّ حَلُّوا ثُمَّ طَافُوا طَوَافًا آخَرَ بَعْدَ أَنْ رَجَعُوا مِنْ ‏ ‏مِنًى ‏ ‏لِحَجِّهِمْ وَأَمَّا الَّذِينَ كَانُوا جَمَعُوا الْحَجَّ وَالْعُمْرَةَ فَإِنَّمَا طَافُوا طَوَافًا وَاحِدًا

நாங்கள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடன் ‘விடைபெறும் ஹஜ்’ ஆண்டில் புறப்பட்டோம். (முதலில்) உம்ராச் செய்வதற்காக தல்பியா கூறி முஹ்ரிம் ஆனோம். பிறகு அல்லாஹ்வின் தூதர் (ஸல்), “எவரிடம் பலிப் பிராணி உள்ளதோ அவர் உம்ராவுடன் ஹஜ்ஜுக்காகவும் சேர்த்து முஹ்ரிமாகிக் கொள்ளவும். அவ்விரண்டையும் நிறைவேற்றிய பிறகே அவர் இஹ்ராமின் நிலையிலிருந்து விடுபடவேண்டும்” என்று சொன்னார்கள். எனக்கு மாதவிடாய் ஏற்பட்டிருந்த நிலையில் மக்காவிற்குச் சென்றடைந்திருந்தேன். எனவே, நான் இறையில்லத்தைச் சுற்றி (தவாஃப்) வரவில்லை. ஸஃபா-மர்வாவுக்கிடையே (ஸயீ) ஓடவுமில்லை.

ஆகவே, இதைப் பற்றி நான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் முறையிட்டேன். அப்போது அவர்கள், “உன் தலை முடியை அவிழ்த்து வாரிக்கொள். உம்ராவை விட்டுவிடு. ஹஜ்ஜுக்காக முஹ்ரிம் ஆகிக்கொள்” என்று சொன்னார்கள். அவ்வாறே நான் செய்தேன்.

நாங்கள் ஹஜ்ஜை நிறைவேற்றி முடித்தபோது, அல்லாஹ்வின் தூதர் (ஸல்) என்னை (என் சகோதரர்) அப்துர் ரஹ்மான் பின் அபீபக்ரு அஸ்ஸித்தீக் (ரலி) அவர்களுடன் ‘தன்யீம்’ எனும் இடத்திற்கு (உம்ராவுக்காக) முஹ்ரிம் ஆவதற்கு அனுப்பினார்கள். (அங்கிருந்து புறப்பட்டு வந்து) நான் உம்ராச் செய்தேன். “இது உனது (விடுபட்ட) உம்ராவிற்குப் பகரமாகும்” என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) சொன்னார்கள்.

உம்ராவிற்காக முஹ்ரிம் ஆனவர்கள் இறையில்லத்தைச் சுற்றிவந்து, ஸஃபா-மர்வாவுக்கிடையே ஓடவும் (ஸயீ) செய்தனர்; பிறகு இஹ்ராமிலிருந்து விடுபட்டனர். பின்னர் மினாவிலிருந்து திரும்பிய பின் மற்றொரு முறை ஹஜ்ஜுக்காகச் சுற்றி (தவாஃப்) வந்தனர். ஹஜ்ஜையும் உம்ராவையும் சேர்த்து (ஹஜ்ஜுல் கிரான்) செய்தவர்கள் ஒரு முறை மட்டுமே இறையில்லத்தைச் சுற்றி (தவாஃப்) வந்தனர்.

அறிவிப்பாளர் : அன்னை ஆயிஷா (ரலி)

அத்தியாயம்: 15, பாடம்: 15.16, ஹதீஸ் எண்: 2107

حَدَّثَنَا ‏ ‏أَبُو غَسَّانَ مُحَمَّدُ بْنُ عَمْرٍو ‏ ‏حَدَّثَنَا ‏ ‏جَرِيرُ بْنُ عَبْدِ الْحَمِيدِ ‏ ‏عَنْ ‏ ‏يَحْيَى بْنِ سَعِيدٍ ‏ ‏عَنْ ‏ ‏جَعْفَرِ بْنِ مُحَمَّدٍ ‏ ‏عَنْ ‏ ‏أَبِيهِ ‏ ‏عَنْ ‏ ‏جَابِرِ بْنِ عَبْدِ اللَّهِ ‏ ‏رَضِيَ اللَّهُ عَنْهُمَا ‏ ‏فِي حَدِيثِ ‏ ‏أَسْمَاءَ بِنْتِ عُمَيْسٍ ‏ ‏حِينَ نُفِسَتْ ‏ ‏بِذِي الْحُلَيْفَةِ :‏

‏أَنَّ رَسُولَ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏أَمَرَ ‏ ‏أَبَا بَكْرٍ ‏ ‏رَضِيَ اللَّهُ عَنْهُ ‏ ‏فَأَمَرَهَا أَنْ تَغْتَسِلَ ‏ ‏وَتُهِلَّ

அஸ்மா பின்த்தி உமைஸ் (ரலி), துல்ஹுலைஃபா எனுமிடத்தில் பிரசவித்தார்கள். அல்லாஹ்வின் தூதர் (ஸல்), அவரைக் குளித்துவிட்டு தல்பியா கூறச் சொல்லுமாறு அபூபக்ரு (ரலி) அவர்களுக்கு உத்தரவிட்டார்கள்.

அறிவிப்பாளர் : ஜாபிர் பின் அப்தில்லாஹ் (ரலி)

அத்தியாயம்: 15, பாடம்: 15.16, ஹதீஸ் எண்: 2106

حَدَّثَنَا ‏ ‏هَنَّادُ بْنُ السَّرِيِّ ‏ ‏وَزُهَيْرُ بْنُ حَرْبٍ ‏ ‏وَعُثْمَانُ بْنُ أَبِي شَيْبَةَ ‏ ‏كُلُّهُمْ ‏ ‏عَنْ ‏ ‏عَبْدَةَ ‏ ‏قَالَ ‏ ‏زُهَيْرٌ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏عَبْدَةُ بْنُ سُلَيْمَانَ ‏ ‏عَنْ ‏ ‏عُبَيْدِ اللَّهِ بْنِ عُمَرَ ‏ ‏عَنْ ‏ ‏عَبْدِ الرَّحْمَنِ بْنِ الْقَاسِمِ ‏ ‏عَنْ ‏ ‏أَبِيهِ ‏ ‏عَنْ ‏ ‏عَائِشَةَ ‏ ‏رَضِيَ اللَّهُ عَنْهَا ‏ ‏قَالَتْ :‏

‏نُفِسَتْ ‏ ‏أَسْمَاءُ بِنْتُ عُمَيْسٍ ‏ ‏بِمُحَمَّدِ بْنِ أَبِي بَكْرٍ ‏ ‏بِالشَّجَرَةِ فَأَمَرَ رَسُولُ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏أَبَا بَكْرٍ ‏ ‏يَأْمُرُهَا أَنْ تَغْتَسِلَ ‏ ‏وَتُهِلَّ

அஸ்மா பின்த்தி உமைஸ் (ரலி) அவர்களுக்கு ‘அஷ்ஷஜரா’ எனுமிடத்தில் முஹம்மது பின் அபீபக்ரு எனும் குழந்தை பிறந்தது. அஸ்மா பின்த்தி உமைஸ் (ரலி) அவர்களைக் குளித்துவிட்டு, தல்பியா கூறச் சொல்லுமாறு (என் தந்தை) அபூபக்ரு (ரலி) அவர்களுக்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) உத்தரவிட்டார்கள்.

அறிவிப்பாளர் : அன்னை ஆயிஷா (ரலி)

அத்தியாயம்: 15, பாடம்: 15.15, ஹதீஸ் எண்: 2105

و حَدَّثَنَا ‏ ‏إِسْحَقُ بْنُ إِبْرَاهِيمَ ‏ ‏وَأَبُو أَيُّوبَ الْغَيْلَانِيُّ ‏ ‏وَأَحْمَدُ بْنُ خِرَاشٍ ‏ ‏قَالَ ‏ ‏إِسْحَقُ ‏ ‏أَخْبَرَنَا ‏ ‏و قَالَ ‏ ‏الْآخَرَانِ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏أَبُو عَامِرٍ وَهُوَ عَبْدُ الْمَلِكِ بْنُ عَمْرٍو ‏ ‏حَدَّثَنَا ‏ ‏رَبَاحٌ وَهُوَ ابْنُ أَبِي مَعْروفٍ ‏ ‏عَنْ ‏ ‏عَطَاءٍ ‏ ‏عَنْ ‏ ‏ابْنِ عَبَّاسٍ ‏ ‏رَضِيَ اللَّهُ عَنْهُمَا : ‏

‏أَنَّ النَّبِيَّ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏قَالَ ‏ ‏لِضُبَاعَةَ ‏ ‏حُجِّي وَاشْتَرِطِي أَنَّ مَحِلِّي حَيْثُ ‏ ‏تَحْبِسُنِي ‏


‏وَفِي رِوَايَةِ ‏ ‏إِسْحَقَ ‏ ‏أَمَرَ ‏ ‏ضُبَاعَةَ

நபி (ஸல்), ளுபாஆ (ரலி) அவர்களிடம், “நீ ஹஜ்ஜுக்காக முன் நிபந்தனையுடன், ‘(இறைவா!) நீ எந்த இடத்தில் (ஹஜ்ஜுக் கடமை செயல்பாடுகளைச் செய்ய முடியாதவாறு) என்னைத் தடுக்கின்றாயோ அதுதான் நான் இஹ்ராமிலிருந்து விடுபடும் இடமாகும்’ என்று கூறிவிடு!” என்றார்கள்.

அறிவிப்பாளர் : இப்னு அப்பாஸ் (ரலி)


குறிப்பு :

இஸ்ஹாக் பின் இப்ராஹீம் (ரஹ்) வழி அறிவிப்பில் “நபி (ஸல்), ளுபாஆ (ரலி) அவர்களிடம் (மேற்கண்டவாறு) உத்தரவிட்டார்கள்” என இடம்பெற்றுள்ளது.

அத்தியாயம்: 15, பாடம்: 15.15, ஹதீஸ் எண்: 2104

حَدَّثَنَا ‏ ‏هَارُونُ بْنُ عَبْدِ اللَّهِ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏أَبُو دَاوُدَ الطَّيَالِسِيُّ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏حَبِيبُ بْنُ يَزِيدَ ‏ ‏عَنْ ‏ ‏عَمْرِو بْنِ هَرِمٍ ‏ ‏عَنْ ‏ ‏سَعِيدِ بْنِ جُبَيْرٍ ‏ ‏وَعِكْرِمَةَ ‏ ‏عَنْ ‏ ‏ابْنِ عَبَّاسٍ ‏ ‏رَضِيَ اللَّهُ عَنْهُمَا : ‏

‏أَنَّ ‏ ‏ضُبَاعَةَ ‏ ‏أَرَادَتْ الْحَجَّ ‏ ‏فَأَمَرَهَا النَّبِيُّ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏أَنْ تَشْتَرِطَ فَفَعَلَتْ ذَلِكَ عَنْ أَمْرِ رَسُولِ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ

ளுபாஆ (ரலி) ஹஜ் செய்ய விரும்பியபோது, அவருக்கு முன் நிபந்தனை இட்டுக் கொள்ள அல்லாஹ்வின் தூதர் (ஸல்) உத்தரவிட்டார்கள்.

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் உத்தரவுக்கிணங்க அவ்வாறே அவர் (முன் நிபந்தனையுடன் ஹஜ்) செய்து முடித்தார்.

அறிவிப்பாளர் : இப்னு அப்பாஸ் (ரலி)

அத்தியாயம்: 15, பாடம்: 15.15, ஹதீஸ் எண்: 2103

و حَدَّثَنَا ‏ ‏مُحَمَّدُ بْنُ بَشَّارٍ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏عَبْدُ الْوَهَّابِ بْنُ عَبْدِ الْمَجِيدِ ‏ ‏وَأَبُو عَاصِمٍ ‏ ‏وَمُحَمَّدُ بْنُ بَكْرٍ ‏ ‏عَنْ ‏ ‏ابْنِ جُرَيْجٍ ‏ ‏ح ‏ ‏و حَدَّثَنَا ‏ ‏إِسْحَقُ بْنُ إِبْرَاهِيمَ ‏ ‏وَاللَّفْظُ لَهُ ‏ ‏أَخْبَرَنَا ‏ ‏مُحَمَّدُ بْنُ بَكْرٍ ‏ ‏أَخْبَرَنَا ‏ ‏ابْنُ جُرَيْجٍ ‏ ‏أَخْبَرَنِي ‏ ‏أَبُو الزُّبَيْرِ ‏ ‏أَنَّهُ سَمِعَ ‏ ‏طَاوُسًا ‏ ‏وَعِكْرِمَةَ ‏ ‏مَوْلَى ‏ ‏ابْنِ عَبَّاسٍ ‏ ‏عَنْ ‏ ‏ابْنِ عَبَّاسٍ :‏

‏أَنَّ ‏ ‏ضُبَاعَةَ بِنْتَ الزُّبَيْرِ بْنِ عَبْدِ الْمُطَّلِبِ ‏ ‏رَضِيَ اللَّهُ عَنْهَا ‏ ‏أَتَتْ رَسُولَ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏فَقَالَتْ إِنِّي امْرَأَةٌ ثَقِيلَةٌ وَإِنِّي أُرِيدُ الْحَجَّ فَمَا تَأْمُرُنِي قَالَ ‏ ‏أَهِلِّي بِالْحَجِّ وَاشْتَرِطِي أَنَّ مَحِلِّي حَيْثُ ‏ ‏تَحْبِسُنِي ‏ ‏قَالَ ‏ ‏فَأَدْرَكَتْ

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் ளுபாஆ பின்த்தி அஸ்ஸுபைர் பின் அப்தில் முத்தலிப் (ரலி) வந்து, “எனக்கு (நோய் ஏற்பட்டு) உடல் கனத்துவிட்டது. நான் ஹஜ் செய்ய விரும்புகின்றேன். நீங்கள் எனக்கு என்ன உத்தரவிடுகின்றீர்கள்?” என்று கேட்டார்கள்.

அல்லாஹ்வின் தூதர் (ஸல்), “நீ முன் நிபந்தனையிட்டு ஹஜ்ஜுக்காக தல்பியாக் கூறி, ‘(இறைவா!) நீ எந்த இடத்தில் (ஹஜ்ஜுக் கடமை செயல்பாடுகளைச் செய்ய முடியாதவாறு) என்னைத் தடுக்கிறாயோ அதுதான் நான் இஹ்ராமிலிருந்து விடுபடும் இடமாகும்’ என்று கூறிவிடு!” என்றார்கள்.

எனினும் ளுபாஆ (ரலி) (தடையின்றி) ஹஜ்ஜை நிறைவேற்றினார்கள்.

அறிவிப்பாளர் : இப்னு அப்பாஸ் (ரலி)

அத்தியாயம்: 15, பாடம்: 15.15, ஹதீஸ் எண்: 2102

و حَدَّثَنَا ‏ ‏عَبْدُ بْنُ حُمَيْدٍ ‏ ‏أَخْبَرَنَا ‏ ‏عَبْدُ الرَّزَّاقِ ‏ ‏أَخْبَرَنَا ‏ ‏مَعْمَرٌ ‏ ‏عَنْ ‏ ‏الزُّهْرِيِّ ‏ ‏عَنْ ‏ ‏عُرْوَةَ ‏ ‏عَنْ ‏ ‏عَائِشَةَ ‏ ‏رَضِيَ اللَّهُ عَنْهَا ‏ ‏قَالَتْ : ‏

‏دَخَلَ النَّبِيُّ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏عَلَى ‏ ‏ضُبَاعَةَ بِنْتِ الزُّبَيْرِ بْنِ عَبْدِ الْمُطَّلِبِ ‏ ‏فَقَالَتْ يَا رَسُولَ اللَّهِ إِنِّي أُرِيدُ الْحَجَّ وَأَنَا ‏ ‏شَاكِيَةٌ ‏ ‏فَقَالَ النَّبِيُّ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏حُجِّي وَاشْتَرِطِي أَنَّ مَحِلِّي حَيْثُ ‏ ‏حَبَسْتَنِي ‏


‏و حَدَّثَنَا ‏ ‏عَبْدُ بْنُ حُمَيْدٍ ‏ ‏أَخْبَرَنَا ‏ ‏عَبْدُ الرَّزَّاقِ ‏ ‏أَخْبَرَنَا ‏ ‏مَعْمَرٌ ‏ ‏عَنْ ‏ ‏هِشَامِ بْنِ عُرْوَةَ ‏ ‏عَنْ ‏ ‏أَبِيهِ ‏ ‏عَنْ ‏ ‏عَائِشَةَ ‏ ‏رَضِيَ اللَّهُ عَنْهَا ‏ ‏مِثْلَهُ

நபி (ஸல்), ளுபாஆ பின்த்தி அஸ்ஸுபைர் பின் அப்தில் முத்தலிப் (ரலி) அவர்களிடம் சென்றார்கள். அப்போது அவர், “அல்லாஹ்வின் தூதரே! நான் ஹஜ் செய்ய விரும்புகிறேன். ஆனால், நான் நோயாளியாக இருக்கின்றேன்” என்றார்.

அதற்கு நபி (ஸல்), “நீ முன் நிபந்தனையிட்டு ‘(இறைவா!) நீ எந்த இடத்தில் (ஹஜ்ஜுக் கடமை செயல்களைச் செய்ய முடியாதவாறு) என்னைத் தடுக்கிறாயோ அதுதான் நான் இஹ்ராமிலிருந்து விடுபடும் இடமாகும்’ என்று கூறிவிடு!” என்றார்கள்.

அறிவிப்பாளர் : அன்னை ஆயிஷா (ரலி)

அத்தியாயம்: 15, பாடம்: 15.15, ஹதீஸ் எண்: 2101

حَدَّثَنَا ‏ ‏أَبُو كُرَيْبٍ مُحَمَّدُ بْنُ الْعَلَاءِ الْهَمْدَانِيُّ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏أَبُو أُسَامَةَ ‏ ‏عَنْ ‏ ‏هِشَامٍ ‏ ‏عَنْ ‏ ‏أَبِيهِ ‏ ‏عَنْ ‏ ‏عَائِشَةَ ‏ ‏رَضِيَ اللَّهُ عَنْهَا ‏ ‏قَالَتْ :‏

‏دَخَلَ رَسُولُ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏عَلَى ‏ ‏ضُبَاعَةَ بِنْتِ الزُّبَيْرِ ‏ ‏فَقَالَ لَهَا أَرَدْتِ الْحَجَّ قَالَتْ وَاللَّهِ مَا أَجِدُنِي إِلَّا وَجِعَةً فَقَالَ لَهَا ‏ ‏حُجِّي وَاشْتَرِطِي وَقُولِي ‏ ‏اللَّهُمَّ مَحِلِّي حَيْثُ ‏ ‏حَبَسْتَنِي ‏ ‏وَكَانَتْ تَحْتَ ‏ ‏الْمِقْدَادِ

ளுபாஆ பின்த்தி அஸ்ஸுபைர் (ரலி) அவர்களிடம் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) சென்று, “நீ ஹஜ் செய்ய விரும்புகிறாயா?” என்று கேட்டார்கள். அதற்கு அவர், “அல்லாஹ்வின் மீதாணையாக! நான் இன்னும் நோயாளியாக இருக்கின்றேன்” என்று சொன்னார்.

அதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவரிடம், “நீ ஹஜ்ஜுக்காக முன் நிபந்தனையிட்டு, ‘இறைவா, நீ எந்த இடத்தில் (ஹஜ்ஜுக் கடமை செயற்பாடுகளைச் செய்ய முடியாதவாறு) என்னைத் தடுக்கிறாயோ அதுதான் நான் இஹ்ராமிலிருந்து விடுபடும் இடமாகும்’ என்று கூறிவிடு!” என்றார்கள்.

அறிவிப்பாளர் : அன்னை ஆயிஷா (ரலி)


குறிப்பு :

ளுபாஆ (ரலி)., மிக்தாத் பின் அல்அஸ்வத் (ரலி) அவர்களுடைய மனைவி ஆவார்.

அத்தியாயம்: 15, பாடம்: 15.14, ஹதீஸ் எண்: 2100

و حَدَّثَنَا ‏ ‏عَبْدُ بْنُ حُمَيْدٍ ‏ ‏أَخْبَرَنَا ‏ ‏عُبَيْدُ اللَّهِ بْنُ مُوسَى ‏ ‏حَدَّثَنَا ‏ ‏إِسْرَائِيلُ ‏ ‏عَنْ ‏ ‏مَنْصُورٍ ‏ ‏عَنْ ‏ ‏سَعِيدِ بْنِ جُبَيْرٍ ‏ ‏عَنْ ‏ ‏ابْنِ عَبَّاسٍ ‏ ‏رَضِيَ اللَّهُ عَنْهُمَا ‏ ‏قَالَ : ‏

‏كَانَ مَعَ رَسُولِ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏رَجُلٌ ‏ ‏فَوَقَصَتْهُ ‏ ‏نَاقَتُهُ فَمَاتَ فَقَالَ النَّبِيُّ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏اغْسِلُوهُ وَلَا تُقَرِّبُوهُ طِيبًا وَلَا تُغَطُّوا وَجْهَهُ فَإِنَّهُ يُبْعَثُ يُلَبِّي

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடன் ஒருவர் (இஹ்ராம் பூண்டவராக) இருந்தார். அப்போது அவரது ஒட்டகம் (இடறி விழுந்து) அவரது கழுத்தை முறித்துவிட்டது. அதனால் அவர் இறந்துவிட்டார். அப்போது நபி (ஸல்), “அவரைக் குளிப்பாட்டுங்கள். ஆனால், எந்த நறுமணத்தையும் அவருக்குப் பூசாதீர்கள். அவரது முகத்தை மூடாதீர்கள். ஏனெனில் அவர், மறுமை நாளில் தல்பியா சொல்லிக்கொண்டிருப்பவராக எழுப்பப்படுவார்” என்று கூறினார்கள்.

அறிவிப்பாளர் : இப்னு அப்பாஸ் (ரலி)

அத்தியாயம்: 15, பாடம்: 15.14, ஹதீஸ் எண்: 2099

حَدَّثَنَا ‏ ‏هَارُونُ بْنُ عَبْدِ اللَّهِ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏الْأَسْوَدُ بْنُ عَامِرٍ ‏ ‏عَنْ ‏ ‏زُهَيْرٍ ‏ ‏عَنْ ‏ ‏أَبِي الزُّبَيْرِ ‏ ‏قَالَ سَمِعْتُ ‏ ‏سَعِيدَ بْنَ جُبَيْرٍ ‏ ‏يَقُولُ قَالَ ‏ ‏ابْنُ عَبَّاسٍ ‏ ‏رَضِيَ اللَّهُ عَنْهُمَا : ‏

‏وَقَصَتْ ‏ ‏رَجُلًا رَاحِلَتُهُ وَهُوَ مَعَ رَسُولِ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏فَأَمَرَهُمْ رَسُولُ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏أَنْ يَغْسِلُوهُ بِمَاءٍ ‏ ‏وَسِدْرٍ ‏ ‏وَأَنْ يَكْشِفُوا وَجْهَهُ حَسِبْتُهُ قَالَ وَرَأْسَهُ فَإِنَّهُ يُبْعَثُ يَوْمَ الْقِيَامَةِ وَهُوَ ‏ ‏يُهِلُّ

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடன் இருந்த ஒருவரது கழுத்தை அவரது ஒட்டகம் (இடறி விழுந்து) முறித்துவிட்டது. அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்), “அவரை நீராலும் இலந்தை இலையாலும் குளிப்பாட்டும்படியும் அவரது முகத்தையும் தலையையும் திறந்து வைக்குமாறும் உத்தரவிட்டார்கள். “ஏனெனில் அவர், மறுமை நாளில் தல்பியா சொல்பவராக எழுப்பப் படுவார்” என்றும் கூறினார்கள்.

அறிவிப்பாளர் : இப்னு அப்பாஸ் (ரலி)