அத்தியாயம்: 15, பாடம்: 92, ஹதீஸ் எண்: 2463

‏حَدَّثَنَا ‏ ‏قُتَيْبَةُ بْنُ سَعِيدٍ ‏ ‏عَنْ ‏ ‏مَالِكِ بْنِ أَنَسٍ ‏ ‏فِيمَا قُرِئَ عَلَيْهِ ‏ ‏عَنْ ‏ ‏عَبْدِ اللَّهِ بْنِ أَبِي بَكْرٍ ‏ ‏عَنْ ‏ ‏عَبَّادِ بْنِ تَمِيمٍ ‏ ‏عَنْ ‏ ‏عَبْدِ اللَّهِ بْنِ زَيْدٍ الْمَازِنيِّ : ‏

أَنَّ رَسُولَ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏قَالَ ‏ ‏مَا بَيْنَ بَيْتِي وَمِنْبَرِي رَوْضَةٌ مِنْ رِيَاضِ الْجَنَّةِ

“எனது இல்லத்திற்கும் எனது சொற்பொழிவு மேடை(மிம்பரு)க்கும் இடைப்பட்ட பகுதியானது, சொர்க்கத்துப் பூஞ்சோலைகளுள் ஒன்றாகும்” என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) கூறினார்கள்.

அறிவிப்பாளர் : அப்துல்லாஹ் பின் ஸைத் அல் அன்ஸாரி (ரலி)

அத்தியாயம்: 15, பாடம்: 91, ஹதீஸ் எண்: 2462

‏و حَدَّثَنِي ‏ ‏عَبْدُ الْمَلِكِ بْنُ شُعَيْبِ بْنِ اللَّيْثِ ‏ ‏حَدَّثَنِي ‏ ‏أَبِي ‏ ‏عَنْ ‏ ‏جَدِّي ‏ ‏حَدَّثَنِي ‏ ‏عُقَيْلُ بْنُ خَالِدٍ ‏ ‏عَنْ ‏ ‏ابْنِ شِهَابٍ ‏ ‏أَنَّهُ قَالَ أَخْبَرَنِي ‏ ‏سَعِيدُ بْنُ الْمُسَيَّبِ ‏ ‏أَنَّ ‏ ‏أَبَا هُرَيْرَةَ ‏ ‏قَالَ : ‏

سَمِعْتُ رَسُولَ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏يَقُولُ ‏ ‏يَتْرُكُونَ ‏ ‏الْمَدِينَةَ ‏ ‏عَلَى خَيْرِ مَا كَانَتْ لَا ‏ ‏يَغْشَاهَا ‏ ‏إِلَّا ‏ ‏الْعَوَافِي ‏ ‏يُرِيدُ ‏ ‏عَوَافِيَ ‏ ‏السِّبَاعِ وَالطَّيْرِ ‏ ‏ثُمَّ يَخْرُجُ رَاعِيَانِ مِنْ ‏ ‏مُزَيْنَةَ ‏ ‏يُرِيدَانِ ‏ ‏الْمَدِينَةَ ‏ ‏يَنْعِقَانِ ‏ ‏بِغَنَمِهِمَا فَيَجِدَانِهَا ‏ ‏وَحْشًا ‏ ‏حَتَّى إِذَا بَلَغَا ‏ ‏ثَنِيَّةَ الْوَدَاعِ ‏ ‏خَرَّا عَلَى وُجُوهِهِمَا

“மதீனா சிறந்த நிலையில் இருக்கும்போதே அதைவிட்டு மக்கள் அகன்றுவிடுவர். வன விலங்குகளும் பறவைகளும்தாம் அதைச் சூழ்ந்து கொண்டிருக்கும். பின்னர் ‘முஸைனா’ குலத்தைச் சேர்ந்த இரு இடையர்கள் தம் ஆடுகளைச் சப்தமிட்டு ஓட்டிக்கொண்டு மதீனாவை நோக்கி வருவர். அங்கு வனவிலங்குகளையே காண்பர். அவர்கள் ‘அல்வதா’ மலைக்குன்றை அடைந்ததும் மூர்ச்சையுற்று முகங்குப்புற விழுந்து விடுவர்” என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) கூறினார்கள்.

அறிவிப்பாளர் : அபூஹுரைரா (ரலி)

அத்தியாயம்: 15, பாடம்: 91, ஹதீஸ் எண்: 2461

‏حَدَّثَنِي ‏ ‏زُهَيْرُ بْنُ حَرْبٍ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏أَبُو صَفْوَانَ ‏ ‏عَنْ ‏ ‏يُونُسَ بْنِ يَزِيدَ ‏ ‏ح ‏ ‏و حَدَّثَنِي ‏ ‏حَرْمَلَةُ بْنُ يَحْيَى ‏ ‏وَاللَّفْظُ لَهُ ‏ ‏أَخْبَرَنَا ‏ ‏ابْنُ وَهْبٍ ‏ ‏أَخْبَرَنِي ‏ ‏يُونُسُ ‏ ‏عَنْ ‏ ‏ابْنِ شِهَابٍ ‏ ‏عَنْ ‏ ‏سَعِيدِ بْنِ الْمُسَيَّبِ ‏ ‏أَنَّهُ سَمِعَ ‏ ‏أَبَا هُرَيْرَةَ ‏ ‏يَقُولُ : ‏

قَالَ رَسُولُ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏لِلْمَدِينَةِ ‏ ‏لَيَتْرُكَنَّهَا أَهْلُهَا عَلَى خَيْرِ مَا كَانَتْ مُذَلَّلَةً ‏ ‏لِلْعَوَافِي ‏ ‏يَعْنِي السِّبَاعَ وَالطَّيْرَ ‏


قَالَ ‏ ‏مُسْلِم ‏ ‏أَبُو صَفْوَانَ ‏ ‏هَذَا هُوَ ‏ ‏عَبْدُ اللَّهِ بْنُ عَبْدِ الْمَلِكِ ‏ ‏يَتِيمُ ‏ ‏ابْنِ جُرَيْجٍ ‏ ‏عَشْرَ سِنِينَ كَانَ فِي ‏ ‏حَجْرِهِ

“மதீனாவாசிகள், மதீனா சிறந்த நிலையில் இருக்கும்போதே, வனவிலங்குகள் மற்றும் பறவைகளின் சரணாலயமாக மதீனாவை விட்டுச் செல்வர்” என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) கூறினார்கள்.

அறிவிப்பாளர் : அபூஹுரைரா (ரலி)


குறிப்பு :

“இந்த ஹதீஸை எனக்கு அறிவித்த அபூஸஃப்வானின் பெயர் அப்துல்லாஹ் பின் அப்தில் மலிக் என்பதாகும். அநாதையாயிருந்த அவர், இப்னு ஜுரைஜ் (ரஹ்) அவர்களின் பொறுப்பில் பத்து ஆண்டுகள் வளர்ந்தார்” என்று இமாம் முஸ்லிம் (ரஹ்) குறிப்பிடுகின்றார்கள்.

அத்தியாயம்: 15, பாடம்: 90, ஹதீஸ் எண்: 2460

‏حَدَّثَنَا ‏ ‏مُحَمَّدُ بْنُ رَافِعٍ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏عَبْدُ الرَّزَّاقِ ‏ ‏أَخْبَرَنَا ‏ ‏ابْنُ جُرَيْجٍ ‏ ‏أَخْبَرَنِي ‏ ‏هِشَامُ بْنُ عُرْوَةَ ‏ ‏عَنْ ‏ ‏أَبِيهِ ‏ ‏عَنْ ‏ ‏عَبْدِ اللَّهِ بْنِ الزُّبَيْرِ ‏ ‏عَنْ ‏ ‏سُفْيَانَ بْنِ أَبِي زُهَيْرٍ ‏ ‏قَالَ : ‏

سَمِعْتُ رَسُولَ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏يَقُولُ ‏ ‏يُفْتَحُ ‏ ‏الْيَمَنُ ‏ ‏فَيَأْتِي قَوْمٌ ‏ ‏يَبُسُّونَ ‏ ‏فَيَتَحَمَّلُونَ ‏ ‏بِأَهْلِيهِمْ وَمَنْ أَطَاعَهُمْ ‏ ‏وَالْمَدِينَةُ ‏ ‏خَيْرٌ لَهُمْ لَوْ كَانُوا يَعْلَمُونَ ثُمَّ يُفْتَحُ ‏ ‏الشَّامُ ‏ ‏فَيَأْتِي قَوْمٌ ‏ ‏يَبُسُّونَ ‏ ‏فَيَتَحَمَّلُونَ ‏ ‏بِأَهْلِيهِمْ وَمَنْ أَطَاعَهُمْ ‏ ‏وَالْمَدِينَةُ ‏ ‏خَيْرٌ لَهُمْ لَوْ كَانُوا يَعْلَمُونَ ثُمَّ يُفْتَحُ ‏ ‏الْعِرَاقُ ‏ ‏فَيَأْتِي قَوْمٌ ‏ ‏يَبُسُّونَ ‏ ‏فَيَتَحَمَّلُونَ ‏ ‏بِأَهْلِيهِمْ وَمَنْ أَطَاعَهُمْ ‏ ‏وَالْمَدِينَةُ ‏ ‏خَيْرٌ لَهُمْ لَوْ كَانُوا يَعْلَمُونَ

“யமன் நாடு வெற்றி கொள்ளப்படும்; ஒரு கூட்டத்தார் தம் குடும்பத்தாரையும் தமது கட்டுப்பாட்டில் உள்ளோரையும் ஏற்றிக்கொண்டு வாகனங்களை விரட்டியவர்களாக மதீனாவிலிருந்து வெளியேறிவிடுவர். ஆயினும், அவர்கள் அறிந்திருந்தால் மதீனாவே அவர்களுக்குச் சிறந்ததாகும்; பின்னர் ஷாம் (சிரியா) நாடு வெற்றி கொள்ளப்படும்; ஒரு கூட்டத்தார் தம் குடும்பத்தாரையும் தமது கட்டுப்பாட்டில் உள்ளோரையும் ஏற்றிக்கொண்டு வாகனங்களை விரட்டியவர்களாக மதீனாவிலிருந்து வெளியேறுவர்; ஆயினும், அவர்கள் அறிந்திருந்தால் மதீனாவே அவர்களுக்குச் சிறந்ததாகும்; பின்னர் இராக் வெற்றி கொள்ளப்படும்; ஒரு கூட்டத்தார் தம் குடும்பத்தாரையும் தமது கட்டுப்பாட்டில் உள்ளோரையும் ஏற்றிக்கொண்டு வாகனங்களை விரட்டியவர்களாக மதீனாவிலிருந்து வெளியேறுவர். ஆயினும், அவர்கள் அறிந்திருந்தால் மதீனாவே அவர்களுக்குச் சிறந்ததாகும்” என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) கூறினார்கள்.

அறிவிப்பாளர் : ஸுஃப்யான் பின் அபீஸுஹைர் (ரலி)

அத்தியாயம்: 15, பாடம்: 90, ஹதீஸ் எண்: 2459

‏حَدَّثَنَا ‏ ‏أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏وَكِيعٌ ‏ ‏عَنْ ‏ ‏هِشَامِ بْنِ عُرْوَةَ ‏ ‏عَنْ ‏ ‏أَبِيهِ ‏ ‏عَنْ ‏ ‏عَبْدِ اللَّهِ بْنِ الزُّبَيْرِ ‏ ‏عَنْ ‏ ‏سُفْيَانَ بْنِ أَبِي زُهَيْرٍ ‏ ‏قَالَ : ‏

قَالَ رَسُولُ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏تُفْتَحُ ‏ ‏الشَّامُ ‏ ‏فَيَخْرُجُ مِنْ ‏ ‏الْمَدِينَةِ ‏ ‏قَوْمٌ بِأَهْلِيهِمْ ‏ ‏يَبُسُّونَ ‏ ‏وَالْمَدِينَةُ ‏ ‏خَيْرٌ لَهُمْ لَوْ كَانُوا يَعْلَمُونَ ثُمَّ تُفْتَحُ ‏ ‏الْيَمَنُ ‏ ‏فَيَخْرُجُ مِنْ ‏ ‏الْمَدِينَةِ ‏ ‏قَوْمٌ بِأَهْلِيهِمْ ‏ ‏يَبُسُّونَ ‏ ‏وَالْمَدِينَةُ ‏ ‏خَيْرٌ لَهُمْ لَوْ كَانُوا يَعْلَمُونَ ثُمَّ تُفْتَحُ ‏ ‏الْعِرَاقُ ‏ ‏فَيَخْرُجُ مِنْ ‏ ‏الْمَدِينَةِ ‏ ‏قَوْمٌ بِأَهْلِيهِمْ ‏ ‏يَبُسُّونَ ‏ ‏وَالْمَدِينَةُ ‏ ‏خَيْرٌ لَهُمْ لَوْ كَانُوا يَعْلَمُونَ

“ஷாம் (சிரியா) நாடு வெற்றி கொள்ளப்படும்; ஒரு கூட்டத்தார் தம் குடும்பத்தாருடன் வாகனங்களை விரட்டிக்கொண்டு மதீனாவிலிருந்து வெளியேறுவர். ஆயினும், அவர்கள் அறிந்திருந்தால் மதீனாவே அவர்களுக்குத் சிறந்ததாகும்; பின்னர் யமன் வெற்றி கொள்ளப்படும்; ஒரு கூட்டத்தார் தம் குடும்பத்தாருடன் வாகனங்களை விரட்டிக்கொண்டு மதீனாவிலிருந்து வெளியேறுவர். ஆயினும், அவர்கள் அறிந்திருந்தால் மதீனாவே அவர்களுக்குச் சிறந்ததாகும்; பின்னர் இராக் வெற்றி கொள்ளப்படும்; ஒரு கூட்டத்தார் தம் குடும்பத்தாருடன் வாகனங்களை விரட்டிக்கொண்டு மதீனாவிலிருந்து வெளியேறுவர். ஆயினும், அவர்கள் அறிந்திருந்தால் மதீனாவே அவர்களுக்குச் சிறந்ததாகும்” என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) கூறினார்கள்.

அறிவிப்பாளர் : ஸுஃப்யான் பின் அபீஸுஹைர் (ரலி)

அத்தியாயம்: 15, பாடம்: 89, ஹதீஸ் எண்: 2458

‏حَدَّثَنَا ‏ ‏قُتَيْبَةُ بْنُ سَعِيدٍ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏حَاتِمٌ يَعْنِي ابْنَ إِسْمَعِيلَ ‏ ‏عَنْ ‏ ‏عُمَرَ بْنِ نُبَيْهٍ ‏ ‏أَخْبَرَنِي ‏ ‏دِينَارٌ الْقَرَّاظُ ‏ ‏قَالَ سَمِعْتُ ‏ ‏سَعْدَ بْنَ أَبِي وَقَّاصٍ ‏ ‏يَقُولُ : ‏

قَالَ رَسُولُ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏مَنْ أَرَادَ أَهْلَ ‏ ‏الْمَدِينَةِ ‏ ‏بِسُوءٍ أَذَابَهُ اللَّهُ كَمَا يَذُوبُ الْمِلْحُ فِي الْمَاءِ ‏


و حَدَّثَنَا ‏ ‏قُتَيْبَةُ بْنُ سَعِيدٍ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏إِسْمَعِيلُ يَعْنِي ابْنَ جَعْفَرٍ ‏ ‏عَنْ ‏ ‏عُمَرَ بْنِ نُبَيْهٍ الْكَعْبِيِّ ‏ ‏عَنْ ‏ ‏أَبِي عَبْدِ اللَّهِ الْقَرَّاظِ ‏ ‏أَنَّهُ سَمِعَ ‏ ‏سَعْدَ بْنَ مَالِكٍ ‏ ‏يَقُولُ ‏ ‏قَالَ رَسُولُ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏بِمِثْلِهِ غَيْرَ أَنَّهُ قَالَ بِدَهْمٍ ‏ ‏أَوْ بِسُوءٍ ‏ ‏و حَدَّثَنَا ‏ ‏أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏عُبَيْدُ اللَّهِ بْنُ مُوسَى ‏ ‏حَدَّثَنَا ‏ ‏أُسَامَةُ بْنُ زَيْدٍ ‏ ‏عَنْ ‏ ‏أَبِي عَبْدِ اللَّهِ الْقَرَّاظِ ‏ ‏قَالَ سَمِعْتُهُ يَقُولُ سَمِعْتُ ‏ ‏أَبَا هُرَيْرَةَ ‏ ‏وَسَعْدًا ‏ ‏يَقُولَانِ ‏ ‏قَالَ رَسُولُ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏اللَّهُمَّ بَارِكْ لِأَهْلِ ‏ ‏الْمَدِينَةِ ‏ ‏فِي ‏ ‏مُدِّهِمْ ‏ ‏وَسَاقَ الْحَدِيثَ وَفِيهِ مَنْ أَرَادَ أَهْلَهَا بِسُوءٍ أَذَابَهُ اللَّهُ كَمَا يَذُوبُ الْمِلْحُ فِي الْمَاءِ

“மதீனாவாசிகளுக்குக் கேடு நினைப்பவனை, நீரில் உப்பு கரைவதைப் போன்று அல்லாஹ், கரைந்துபோகச் செய்துவிடுவான்” என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) கூறினார்கள்.

அறிவிப்பாளர் : ஸஅத் பின் அபீவக்காஸ் (ரலி)


குறிப்புகள் :

இஸ்மாயீல் இப்னு ஜஅஃபர் (ரஹ்) வழி அறிவிப்பில், ‘தீவினை’ அல்லது ‘கேடு’ என (ஐயப்பாட்டுடன்) இடம்பெற்றுள்ளது.

அல்லாஹ்வின் தூதர் (ஸல்), “இறைவா! மதீனாவாசிகளுக்கு (அவர்களது அளவையான) ‘முத்’துவில் வளம் ஏற்படுத்துவாயாக!” என்று பிரார்த்தித்தார்கள். என்றும், “இவ்வூர்வாசிகளுக்குக் கேடு நினைப்பவர்களை, நீரில் உப்பு கரைவதைப் போன்று அல்லாஹ், கரைந்துபோகச் செய்துவிடுவான்” (என்று கூறினார்கள்) என்றும் அபூஹுரைரா (ரலி) மற்றும் ஸஅத் பின் அபீவக்காஸ் (ரலி) ஆகியோர் அறிவிக்கின்றனர்.

அத்தியாயம்: 15, பாடம்: 89, ஹதீஸ் எண்: 2457

‏و حَدَّثَنِي ‏ ‏مُحَمَّدُ بْنُ حَاتِمٍ ‏ ‏وَإِبْرَاهِيمُ بْنُ دِينَارٍ ‏ ‏قَالَا حَدَّثَنَا ‏ ‏حَجَّاجٌ ‏ ‏ح ‏ ‏و حَدَّثَنِيهِ ‏ ‏مُحَمَّدُ بْنُ رَافِعٍ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏عَبْدُ الرَّزَّاقِ ‏ ‏جَمِيعًا ‏ ‏عَنْ ‏ ‏ابْنِ جُرَيْجٍ ‏ ‏قَالَ أَخْبَرَنِي ‏ ‏عَمْرُو بْنُ يَحْيَى بْنِ عُمَارَةَ ‏ ‏أَنَّهُ سَمِعَ ‏ ‏الْقَرَّاظَ ‏ ‏وَكَانَ مِنْ أَصْحَابِ ‏ ‏أَبِي هُرَيْرَةَ ‏ ‏يَزْعُمُ أَنَّهُ ‏ ‏سَمِعَ ‏ ‏أَبَا هُرَيْرَةَ ‏ ‏يَقُولُ : ‏

قَالَ رَسُولُ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏مَنْ أَرَادَ أَهْلَهَا بِسُوءٍ يُرِيدُ ‏ ‏الْمَدِينَةَ ‏ ‏أَذَابَهُ اللَّهُ كَمَا يَذُوبُ الْمِلْحُ فِي الْمَاءِ ‏


قَالَ ‏ ‏ابْنُ حَاتِمٍ ‏ ‏فِي حَدِيثِ ‏ ‏ابْنِ يُحَنَّسَ ‏ ‏بَدَلَ قَوْلِهِ بِسُوءٍ شَرًّا ‏ ‏حَدَّثَنَا ‏ ‏ابْنُ أَبِي عُمَرَ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏سُفْيَانُ ‏ ‏عَنْ ‏ ‏أَبِي هَارُونَ مُوسَى بْنِ أَبِي عِيسَى ‏ ‏ح ‏ ‏و حَدَّثَنَا ‏ ‏ابْنُ أَبِي عُمَرَ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏الدَّرَاوَرْدِيُّ ‏ ‏عَنْ ‏ ‏مُحَمَّدِ بْنِ عَمْرٍو ‏ ‏جَمِيعًا ‏ ‏سَمِعَا ‏ ‏أَبَا عَبْدِ اللَّهِ الْقَرَّاظَ ‏ ‏سَمِعَ ‏ ‏أَبَا هُرَيْرَةَ ‏ ‏عَنْ النَّبِيِّ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏بِمِثْلِهِ

“இவ்வூர்(மதீனா)வாசிகளுக்குக் கேடு நினைப்பவர்களை, நீரில் உப்பு கரைவதைப் போன்று அல்லாஹ், கரைந்துபோகச் செய்துவிடுவான்” என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) கூறினார்கள்.

அறிவிப்பாளர் : அபூஹுரைரா (ரலி)


குறிப்பு :

இப்னு யுஹன்னஸ் (ரஹ்) வழி அறிவிப்பில், ‘கேடு’ என்பதற்குப் பகரமாக ‘தீங்கு’ எனும் சொல் ஆளப்பட்டுள்ளது.

அத்தியாயம்: 15, பாடம்: 89, ஹதீஸ் எண்: 2456

‏حَدَّثَنِي ‏ ‏مُحَمَّدُ بْنُ حَاتِمٍ ‏ ‏وَإِبْرَاهِيمُ بْنُ دِينَارٍ ‏ ‏قَالَا حَدَّثَنَا ‏ ‏حَجَّاجُ بْنُ مُحَمَّدٍ ‏ ‏ح ‏ ‏و حَدَّثَنِي ‏ ‏مُحَمَّدُ بْنُ رَافِعٍ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏عَبْدُ الرَّزَّاقِ ‏ ‏كِلَاهُمَا ‏ ‏عَنْ ‏ ‏ابْنِ جُرَيْجٍ ‏ ‏أَخْبَرَنِي ‏ ‏عَبْدُ اللَّهِ بْنُ عَبْدِ الرَّحْمَنِ بْنِ يُحَنَّسَ ‏ ‏عَنْ ‏ ‏أَبِي عَبْدِ اللَّهِ الْقَرَّاظِ ‏ ‏أَنَّهُ قَالَ أَشْهَدُ عَلَى ‏ ‏أَبِي هُرَيْرَةَ ‏ ‏أَنَّهُ ‏ ‏قَالَ : ‏

قَالَ ‏ ‏أَبُو الْقَاسِمِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏مَنْ أَرَادَ أَهْلَ هَذِهِ الْبَلْدَةِ بِسُوءٍ ‏ ‏يَعْنِي ‏ ‏الْمَدِينَةَ ‏ ‏أَذَابَهُ اللَّهُ كَمَا يَذُوبُ الْمِلْحُ فِي الْمَاءِ

“இந்த ஊர்(மதீனா)வாசிகளுக்குக் கேடு நினைப்பவர்களை, நீரில் உப்பு கரைவதைப் போன்று அல்லாஹ் கரைந்துபோகச் செய்துவிடுவான்” என்று அபுல்காஸிம் (முஹம்மது – ஸல்) கூறினார்கள்.

அறிவிப்பாளர் : அபூஹுரைரா (ரலி)

அத்தியாயம்: 15, பாடம்: 88, ஹதீஸ் எண்: 2455

‏و حَدَّثَنَا ‏ ‏قُتَيْبَةُ بْنُ سَعِيدٍ ‏ ‏وَهَنَّادُ بْنُ السَّرِيِّ ‏ ‏وَأَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ ‏ ‏قَالُوا حَدَّثَنَا ‏ ‏أَبُو الْأَحْوَصِ ‏ ‏عَنْ ‏ ‏سِمَاكٍ ‏ ‏عَنْ ‏ ‏جَابِرِ بْنِ سَمُرَةَ ‏ ‏قَالَ : ‏

سَمِعْتُ رَسُولَ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏يَقُولُ ‏ ‏إِنَّ اللَّهَ تَعَالَى سَمَّى ‏ ‏الْمَدِينَةَ ‏ ‏طَابَةَ

“உயர்ந்தோன் அல்லாஹ், மதீனாவுக்கு ‘தாபா’ (தூயது) எனப் பெயரிட்டான்” என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) கூறினார்கள்.

அறிவிப்பாளர் : ஜாபிர் பின் சமுரா (ரலி)

அத்தியாயம்: 15, பாடம்: 88, ஹதீஸ் எண்: 2454

‏و حَدَّثَنَا ‏ ‏عُبَيْدُ اللَّهِ بْنُ مُعَاذٍ وَهُوَ الْعَنْبَرِيُّ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏أَبِي ‏ ‏حَدَّثَنَا ‏ ‏شُعْبَةُ ‏ ‏عَنْ ‏ ‏عَدِيٍّ وَهُوَ ابْنُ ثَابِتٍ ‏ ‏سَمِعَ ‏ ‏عَبْدَ اللَّهِ بْنَ يَزِيدَ ‏ ‏عَنْ ‏ ‏زَيْدِ بْنِ ثَابِتٍ : ‏

عَنْ النَّبِيِّ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏قَالَ ‏ ‏إِنَّهَا طَيْبَةُ ‏ ‏يَعْنِي ‏ ‏الْمَدِينَةَ ‏ ‏وَإِنَّهَا ‏ ‏تَنْفِي ‏ ‏الْخَبَثَ ‏ ‏كَمَا ‏ ‏تَنْفِي ‏ ‏النَّارُ ‏ ‏خَبَثَ ‏ ‏الْفِضَّةِ

“மதீனா தூயதாகும். வெள்ளியின் அழுக்கைத் தீஉலை நீக்குவதைப் போன்று தன்னிலுள்ள தீயவர்களை மதீனா வெளியேற்றும்” என்று நபி (ஸல்) கூறினார்கள்.

அறிவிப்பாளர் : ஸைத் பின் ஸாபித் (ரலி)