அத்தியாயம்: 15, பாடம்: 25, ஹதீஸ் எண்: 2163

‏و حَدَّثَنَا ‏ ‏ابْنُ أَبِي عُمَرَ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏هِشَامُ بْنُ سُلَيْمَانَ الْمَخْزُومِيُّ ‏ ‏وَعَبْدُ الْمَجِيدِ ‏ ‏عَنْ ‏ ‏ابْنِ جُرَيْجٍ ‏ ‏عَنْ ‏ ‏نَافِعٍ ‏ ‏عَنْ ‏ ‏ابْنِ عُمَرَ ‏ ‏قَالَ حَدَّثَتْنِي ‏ ‏حَفْصَةُ ‏ ‏رَضِيَ اللَّهُ عَنْهَا ‏
‏أَنَّ النَّبِيَّ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏أَمَرَ أَزْوَاجَهُ أَنْ يَحْلِلْنَ عَامَ حَجَّةِ الْوَدَاعِ قَالَتْ ‏ ‏حَفْصَةُ ‏ ‏فَقُلْتُ مَا يَمْنَعُكَ أَنْ تَحِلَّ قَالَ ‏ ‏إِنِّي ‏ ‏لَبَّدْتُ ‏ ‏رَأْسِي ‏ ‏وَقَلَّدْتُ ‏ ‏هَدْيِي ‏ ‏فَلَا أَحِلُّ حَتَّى أَنْحَرَ ‏ ‏هَدْيِي

நபி (ஸல்) விடைபெறும் ஹஜ் ஆண்டில், (தவாஃபும் ஸயீயும் செய்துவிட்டு) உம்ராவின் இஹ்ராமிலிருந்து விடுபட்டுக் கொள்ளுமாறு தம் துணைவியருக்கு உத்தரவிட்டார்கள். அப்போது நான், “நீங்கள் ஏன் இஹ்ராமிலிருந்து விடுபடவில்லை?” என்று கேட்டேன்.

அதற்கு நபி (ஸல்), “நான் என் தலைக்குக் களிம்பு தடவிப் படிய வைத்து விட்டேன். மேலும், எனது பலிப் பிராணிக்கு அடையாள மாலை தொங்க விட்டுவிட்டேன். ஆகவே, நான் (ஹஜ்ஜை முடித்து) எனது பலிப் பிராணியை அறுத்துப் பலியிடாத வரை இஹ்ராமிலிருந்து விடுபட மாட்டேன்” என்று விடையளித்தார்கள்.

அறிவிப்பாளர் : அன்னை ஹஃப்ஸா (ரலி)

அத்தியாயம்: 15, பாடம்: 25, ஹதீஸ் எண்: 2162

‏حَدَّثَنَا ‏ ‏مُحَمَّدُ بْنُ الْمُثَنَّى ‏ ‏حَدَّثَنَا ‏ ‏يَحْيَى بْنُ سَعِيدٍ ‏ ‏عَنْ ‏ ‏عُبَيْدِ اللَّهِ ‏ ‏قَالَ أَخْبَرَنِي ‏ ‏نَافِعٌ ‏ ‏عَنْ ‏ ‏ابْنِ عُمَرَ ‏ ‏عَنْ ‏ ‏حَفْصَةَ ‏ ‏رَضِيَ اللَّهُ عَنْهُمْ ‏ ‏قَالَتْ ‏
‏قُلْتُ لِلنَّبِيِّ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏مَا شَأْنُ النَّاسِ حَلُّوا وَلَمْ تَحِلَّ مِنْ عُمْرَتِكَ قَالَ ‏ ‏إِنِّي ‏ ‏قَلَّدْتُ ‏ ‏هَدْيِي ‏ ‏وَلَبَّدْتُ ‏ ‏رَأْسِي فَلَا أَحِلُّ حَتَّى أَحِلَّ مِنْ الْحَجِّ ‏
‏و حَدَّثَنَا ‏ ‏أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏أَبُو أُسَامَةَ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏عُبَيْدُ اللَّهِ ‏ ‏عَنْ ‏ ‏نَافِعٍ ‏ ‏عَنْ ‏ ‏ابْنِ عُمَرَ ‏ ‏أَنَّ ‏ ‏حَفْصَةَ ‏ ‏رَضِيَ اللَّهُ عَنْهَا ‏ ‏قَالَتْ ‏ ‏يَا رَسُولَ اللَّهِ ‏ ‏بِمِثْلِ حَدِيثِ ‏ ‏مَالِكٍ ‏ ‏فَلَا أَحِلُّ حَتَّى أَنْحَرَ

நான் நபி (ஸல்) அவர்களிடம், “மக்களுக்கு என்ன நேர்ந்தது? நீங்கள் உங்கள் உம்ராவின் இஹ்ராமிலிருந்து விடுபடாமல் இருக்கும் போதே, அவர்கள் இஹ்ராமிலிருந்து விடுபட்டு விட்டார்களே?” என்று கேட்டேன்.

அதற்கு நபி (ஸல்), “நான் எனது பலிப் பிராணிக்கு அடையாள மாலை தொங்க விட்டுவிட்டேன். மேலும், நான் என் தலைக்குக் களிம்பு தடவிப் படிய வைத்துவிட்டேன். ஆகவே, நான் ஹஜ் செய்து முடிக்காத வரை இஹ்ராமிலிருந்து விடுபட மாட்டேன்” என்று விடையளித்தார்கள்.

அறிவிப்பாளர் : அன்னை ஹஃப்ஸா (ரலி)

அத்தியாயம்: 15, பாடம்: 25, ஹதீஸ் எண்: 2161

‏حَدَّثَنَا ‏ ‏يَحْيَى بْنُ يَحْيَى ‏ ‏قَالَ قَرَأْتُ عَلَى ‏ ‏مَالِكٍ ‏ ‏عَنْ ‏ ‏نَافِعٍ ‏ ‏عَنْ ‏ ‏عَبْدِ اللَّهِ بْنِ عُمَرَ ‏ ‏أَنَّ ‏ ‏حَفْصَةَ زَوْجَ النَّبِيِّ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏قَالَتْ ‏
‏يَا رَسُولَ اللَّهِ مَا شَأْنُ النَّاسِ حَلُّوا وَلَمْ تَحْلِلْ أَنْتَ مِنْ عُمْرَتِكَ قَالَ ‏ ‏إِنِّي ‏ ‏لَبَّدْتُ ‏ ‏رَأْسِي ‏ ‏وَقَلَّدْتُ ‏ ‏هَدْيِي فَلَا أَحِلُّ حَتَّى أَنْحَرَ ‏
‏و حَدَّثَنَاه ‏ ‏ابْنُ نُمَيْرٍ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏خَالِدُ بْنُ مَخْلَدٍ ‏ ‏عَنْ ‏ ‏مَالِكٍ ‏ ‏عَنْ ‏ ‏نَافِعٍ ‏ ‏عَنْ ‏ ‏ابْنِ عُمَرَ ‏ ‏عَنْ ‏ ‏حَفْصَةَ ‏ ‏رَضِيَ اللَّهُ عَنْهُمْ ‏ ‏قَالَتْ قُلْتُ ‏ ‏يَا رَسُولَ اللَّهِ مَا لَكَ لَمْ تَحِلَّ ‏ ‏بِنَحْوِهِ

நான் (ஹஜ்ஜின்போது நபி (ஸல்) அவர்களிடம்), “அல்லாஹ்வின் தூதரே! மக்களுக்கு என்ன நேர்ந்தது? நீங்கள் உம்ராவின் இஹ்ராமிலிருந்து விடுபடாமல் இருக்கும் போதே, அவர்கள் இஹ்ராமிலிருந்து விடுபட்டு விட்டார்களே?” என்று கேட்டேன்.

அதற்கு நபி (ஸல்), “நான் என் தலைக்குக் களிம்பு தடவிப் படிய வைத்துவிட்டேன். மேலும், எனது பலிப் பிராணிக்கு அடையாள மாலை தொங்கவிட்டு விட்டேன். ஆகவே, நான் (ஹஜ்ஜை முடித்து அந்தப் பிராணியை) பலியிடாத வரை இஹ்ராமிலிருந்து விடுபட மாட்டேன்” என்று விடையளித்தார்கள்.

அறிவிப்பாளர் : அன்னை ஹஃப்ஸா (ரலி)


குறிப்புகள்:

காலித் பின் மக்லத் (ரஹ்) வழி அறிவிப்பு, ““அல்லாஹ்வின் தூதரே! உங்கள் நிலை என்ன? நீங்கள் உங்கள் உம்ராவின் இஹ்ராமிலிருந்து விடுபடாமல் இருக்கிறீர்களே? என்று நான் கேட்டேன் … ” என ஆரம்பமாகிறது.

முஃப்ரித் = ஹஜ்ஜுக்கு மட்டும் இஹ்ராம் பூண்டவர்

காரின் = உம்ராவுக்கும் ஹஜ்ஜுக்கும் சேர்த்து ஒரே இஹ்ராம் பூண்டவர்

அத்தியாயம்: 15, பாடம்: 24, ஹதீஸ் எண்: 2160

‏و حَدَّثَنِيهِ ‏ ‏عَبْدُ الْمَلِكِ بْنُ شُعَيْبٍ ‏ ‏حَدَّثَنِي ‏ ‏أَبِي ‏ ‏عَنْ ‏ ‏جَدِّي ‏ ‏حَدَّثَنِي ‏ ‏عُقَيْلٌ ‏ ‏عَنْ ‏ ‏ابْنِ شِهَابٍ ‏ ‏عَنْ ‏ ‏عُرْوَةَ بْنِ الزُّبَيْرِ ‏ ‏أَنَّ ‏ ‏عَائِشَةَ زَوْجَ النَّبِيِّ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏أَخْبَرَتْهُ ‏
‏عَنْ رَسُولِ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏فِي ‏ ‏تَمَتُّعِهِ ‏ ‏بِالْحَجِّ إِلَى الْعُمْرَةِ ‏ ‏وَتَمَتُّعِ ‏ ‏النَّاسِ مَعَهُ ‏
‏بِمِثْلِ الَّذِي ‏ ‏أَخْبَرَنِي ‏ ‏سَالِمُ بْنُ عَبْدِ اللَّهِ ‏ ‏عَنْ ‏ ‏عَبْدِ اللَّهِ ‏ ‏رَضِيَ اللَّهُ عَنْهُ ‏ ‏عَنْ رَسُولِ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ

அல்லாஹ்வின் தூதர் (ஸல்), ஹஜ்ஜின்போது உம்ராவை முற்படுத்தினார்கள். அவர்களோடு (வந்திருந்த) சிலரும் உம்ராவை முதலில் நிறைவேற்றி (இடைக்காலப்) பயனடைந்தனர்.

அறிவிப்பாளர் : அன்னை ஆயிஷா (ரலி)

அத்தியாயம்: 15, பாடம்: 24, ஹதீஸ் எண்: 2159

‏حَدَّثَنَا ‏ ‏عَبْدُ الْمَلِكِ بْنُ شُعَيْبِ بْنِ اللَّيْثِ ‏ ‏حَدَّثَنِي ‏ ‏أَبِي ‏ ‏عَنْ ‏ ‏جَدِّي ‏ ‏حَدَّثَنِي ‏ ‏عُقَيْلُ بْنُ خَالِدٍ ‏ ‏عَنْ ‏ ‏ابْنِ شِهَابٍ ‏ ‏عَنْ ‏ ‏سَالِمِ بْنِ عَبْدِ اللَّهِ ‏ ‏أَنَّ ‏ ‏عَبْدَ اللَّهِ بْنَ عُمَرَ ‏ ‏رَضِيَ اللَّهُ عَنْهُمَا ‏ ‏قَالَ ‏
‏تَمَتَّعَ ‏ ‏رَسُولُ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏فِي حَجَّةِ الْوَدَاعِ بِالْعُمْرَةِ إِلَى الْحَجِّ ‏ ‏وَأَهْدَى ‏ ‏فَسَاقَ مَعَهُ ‏ ‏الْهَدْيَ ‏ ‏مِنْ ‏ ‏ذِي الْحُلَيْفَةِ ‏ ‏وَبَدَأَ رَسُولُ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏فَأَهَلَّ ‏ ‏بِالْعُمْرَةِ ثُمَّ ‏ ‏أَهَلَّ ‏ ‏بِالْحَجِّ ‏ ‏وَتَمَتَّعَ ‏ ‏النَّاسُ مَعَ رَسُولِ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏بِالْعُمْرَةِ إِلَى الْحَجِّ فَكَانَ مِنْ النَّاسِ مَنْ ‏ ‏أَهْدَى ‏ ‏فَسَاقَ ‏ ‏الْهَدْيَ ‏ ‏وَمِنْهُمْ مَنْ لَمْ ‏ ‏يُهْدِ ‏ ‏فَلَمَّا قَدِمَ رَسُولُ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏مَكَّةَ ‏ ‏قَالَ لِلنَّاسِ ‏ ‏مَنْ كَانَ مِنْكُمْ ‏ ‏أَهْدَى ‏ ‏فَإِنَّهُ لَا يَحِلُّ مِنْ شَيْءٍ حَرُمَ مِنْهُ حَتَّى يَقْضِيَ حَجَّهُ وَمَنْ لَمْ يَكُنْ مِنْكُمْ ‏ ‏أَهْدَى ‏ ‏فَلْيَطُفْ ‏ ‏بِالْبَيْتِ ‏ ‏وَبِالصَّفَا ‏ ‏وَالْمَرْوَةِ ‏ ‏وَلْيُقَصِّرْ وَلْيَحْلِلْ ثُمَّ ‏ ‏لِيُهِلَّ ‏ ‏بِالْحَجِّ ‏ ‏وَلْيُهْدِ ‏ ‏فَمَنْ لَمْ يَجِدْ ‏ ‏هَدْيًا ‏ ‏فَلْيَصُمْ ثَلَاثَةَ أَيَّامٍ فِي الْحَجِّ وَسَبْعَةً إِذَا رَجَعَ إِلَى أَهْلِهِ وَطَافَ رَسُولُ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏حِينَ قَدِمَ ‏ ‏مَكَّةَ ‏ ‏فَاسْتَلَمَ ‏ ‏الرُّكْنَ أَوَّلَ شَيْءٍ ثُمَّ ‏ ‏خَبَّ ‏ ‏ثَلَاثَةَ أَطْوَافٍ مِنْ السَّبْعِ وَمَشَى أَرْبَعَةَ أَطْوَافٍ ثُمَّ رَكَعَ حِينَ ‏ ‏قَضَى ‏ ‏طَوَافَهُ ‏ ‏بِالْبَيْتِ ‏ ‏عِنْدَ الْمَقَامِ رَكْعَتَيْنِ ثُمَّ سَلَّمَ فَانْصَرَفَ فَأَتَى ‏ ‏الصَّفَا ‏ ‏فَطَافَ ‏ ‏بِالصَّفَا ‏ ‏وَالْمَرْوَةِ ‏ ‏سَبْعَةَ أَطْوَافٍ ثُمَّ لَمْ يَحْلِلْ مِنْ شَيْءٍ حَرُمَ مِنْهُ حَتَّى ‏ ‏قَضَى ‏ ‏حَجَّهُ وَنَحَرَ ‏ ‏هَدْيَهُ ‏ ‏يَوْمَ النَّحْرِ ‏ ‏وَأَفَاضَ ‏ ‏فَطَافَ ‏ ‏بِالْبَيْتِ ‏ ‏ثُمَّ حَلَّ مِنْ كُلِّ شَيْءٍ حَرُمَ مِنْهُ وَفَعَلَ مِثْلَ مَا فَعَلَ رَسُولُ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏مَنْ ‏ ‏أَهْدَى ‏ ‏وَسَاقَ ‏ ‏الْهَدْيَ ‏ ‏مِنْ النَّاسِ

அல்லாஹ்வின் தூதர் (ஸல்), விடைபெறும் ஹஜ்ஜின்போது உம்ராவையும் ஹஜ்ஜையும் (அடுத்தடுத்து) நிறைவேற்றினார்கள். அவர்கள் பலிப் பிராணியை (ஹஜ்ஜில்) அறுத்துப் பலியிட்டார்கள். (மதீனாவாசிகளின் இஹ்ராம் எல்லையான) துல்ஹுலைஃபாவிலிருந்தே தம்முடன் பலிப் பிராணியை நபியவர்கள் கொண்டு வந்திருந்தார்கள்.

முதலில் உம்ராவிற்கான இஹ்ராமுடன் தல்பியா கூறி, பின்னர் ஹஜ்ஜுக்காக இஹ்ராமுடன் தல்பியா கூறினார்கள். மக்களும் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடன் உம்ராவிற்கும் ஹஜ்ஜுக்குமாக இஹ்ராம் பூண்டிருந்தனர். மக்களில் பலிப் பிராணியைத் தம்முடன் கொண்டு வந்திருந்த சிலர் பலிப் பிராணியை அறுத்துப் பலியிடுபவர்களாக இருந்தனர். தம்முடன் பலிப் பிராணியைக் கொண்டுவராதவர்கள் பலியிடுபவர்களாக இருக்கவில்லை.

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) மக்காவிற்கு வந்ததும் மக்களிடம், “உங்களில் பலிப் பிராணியைக் கொண்டு வந்தவர்கள், தமது ஹஜ்ஜை நிறைவு செய்யாத வரை இஹ்ராமிலிருந்து விடுபடக் கூடாது. பலிப் பிராணியைக் கொண்டு வராதவர்கள் இறையில்லம் கஅபாவையும், ஸஃபா-மர்வாவுக்கு இடையேயும் சுற்றி வந்து(உம்ராவை முடித்து)விட்டு, தமது தலைமுடியை குறைத்துக் கொண்டு இஹ்ராமிலிருந்து விடுபட்டுக் கொள்ளட்டும்.

பின்னர் ஹஜ்ஜுக்காக இஹ்ராம் பூண்டு, அறுத்துப் பலியிடட்டும். பலிப் பிராணி கிடைக்காதவர்கள், ஹஜ்ஜின் நாட்களில் மூன்று நோன்புகளும் (ஹஜ்ஜை முடித்து) தமது வீடு திரும்பியதும் ஏழு நோன்புகளும் நோற்றுக் கொள்ளட்டும்” என்று கூறினார்கள்.

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) மக்காவிற்கு வந்ததும் (கஅபாவை ஏழு முறை) சுற்றி வந்துவிட்டு, முதல் வேலையாக (கஅபாவின்) மூலையை (ஒட்டிப் பதிக்கப்பட்டுள்ள ஹஜருல் அஸ்வதை)த் தொட்டு முத்தமிட்டார்கள். ஏழில் மூன்று சுற்றுகள் (தோள்களைக் குலுக்கி) வேகமாக நடந்தும், நான்கு சுற்றுகள் மெதுவாக நடந்தும் சுற்றி (தவாஃபுல் குதூம்) வந்தார்கள். இறையில்லத்தைச் சுற்றி முடித்ததும் மகாமு இப்ராஹீமில் இரண்டு ரக்அத்கள் தொழுதார்கள். பின்னர் ஸலாம் கொடுத்துவிட்டு நேராக ஸஃபாவுக்குச் சென்று, ஸஃபா-மர்வாவுக்கிடையே ஏழு தடவைச் சுற்றி (ஸயீ) வந்தார்கள்.

பிறகு ஹஜ்ஜை முடிக்கும்வரை அவர்கள் இஹ்ராமிலிருந்து விடுபடாமல் இருந்தார்கள். துல்ஹஜ் பத்தாவது நாள் (யவ்முந் நஹ்ரு) அன்று தமது பலிப் பிராணியை அறுத்துப் பலியிட்டார்கள். பிறகு அங்கிருந்து திரும்பி இறையில்லம் கஅபாவைச் சுற்றி (தவாஃபுல் இஃபாளா) வந்துவிட்டுப் பின்னர் இஹ்ராமிலிருந்து விடுபட்டார்கள்.

மக்களில் பலிப் பிராணியைக் கொண்டுவந்து, அறுத்துப் பலியிட்டவர்களும் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) செய்ததைப் போன்றே செய்தனர்.

அறிவிப்பாளர் : அப்துல்லாஹ் பின் உமர் (ரலி)

அத்தியாயம்: 12, பாடம்: 41, ஹதீஸ் எண்: 1744

حَدَّثَنِي ‏ ‏عَلِيُّ بْنُ حُجْرٍ ‏ ‏أَخْبَرَنَا ‏ ‏إِسْمَعِيلُ بْنُ إِبْرَاهِيمَ ‏ ‏عَنْ ‏ ‏هِشَامٍ صَاحِبِ الدَّسْتَوَائِيِّ ‏ ‏عَنْ ‏ ‏يَحْيَى بْنِ أَبِي كَثِيرٍ ‏ ‏عَنْ ‏ ‏هِلَالِ بْنِ أَبِي مَيْمُونَةَ ‏ ‏عَنْ ‏ ‏عَطَاءِ بْنِ يَسَارٍ ‏ ‏عَنْ ‏ ‏أَبِي سَعِيدٍ الْخُدْرِيِّ ‏ ‏قَالَ ‏

‏جَلَسَ رَسُولُ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏عَلَى الْمِنْبَرِ وَجَلَسْنَا حَوْلَهُ فَقَالَ ‏ ‏إِنَّ مِمَّا أَخَافُ عَلَيْكُمْ بَعْدِي مَا يُفْتَحُ عَلَيْكُمْ مِنْ زَهْرَةِ الدُّنْيَا وَزِينَتِهَا فَقَالَ رَجُلٌ ‏ ‏أَوَ يَأْتِي الْخَيْرُ بِالشَّرِّ يَا رَسُولَ اللَّهِ قَالَ فَسَكَتَ عَنْهُ رَسُولُ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏فَقِيلَ لَهُ مَا شَأْنُكَ تُكَلِّمُ رَسُولَ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏وَلَا يُكَلِّمُكَ قَالَ وَرَأَيْنَا أَنَّهُ يُنْزَلُ عَلَيْهِ فَأَفَاقَ يَمْسَحُ عَنْهُ ‏ ‏الرُّحَضَاءَ ‏ ‏وَقَالَ إِنَّ هَذَا السَّائِلَ وَكَأَنَّهُ حَمِدَهُ فَقَالَ إِنَّهُ لَا يَأْتِي الْخَيْرُ بِالشَّرِّ وَإِنَّ مِمَّا يُنْبِتُ الرَّبِيعُ يَقْتُلُ أَوْ ‏ ‏يُلِمُّ ‏ ‏إِلَّا آكِلَةَ الْخَضِرِ فَإِنَّهَا أَكَلَتْ حَتَّى إِذَا امْتَلَأَتْ خَاصِرَتَاهَا اسْتَقْبَلَتْ عَيْنَ الشَّمْسِ ‏ ‏فَثَلَطَتْ ‏ ‏وَبَالَتْ ثُمَّ ‏ ‏رَتَعَتْ ‏ ‏وَإِنَّ هَذَا الْمَالَ خَضِرٌ حُلْوٌ وَنِعْمَ صَاحِبُ الْمُسْلِمِ هُوَ لِمَنْ أَعْطَى مِنْهُ الْمِسْكِينَ وَالْيَتِيمَ وَابْنَ السَّبِيلَ أَوْ كَمَا قَالَ رَسُولُ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏وَإِنَّهُ مَنْ يَأْخُذُهُ بِغَيْرِ حَقِّهِ كَانَ كَالَّذِي يَأْكُلُ وَلَا يَشْبَعُ وَيَكُونُ عَلَيْهِ شَهِيدًا يَوْمَ الْقِيَامَةِ

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) (ஒரு நாள்), சொற்பொழிவு மேடைமீது அமர்ந்திருந்தார்கள். அவர்களைச் சுற்றி நாங்களும் அமர்ந்திருந்தோம். அப்போது அவர்கள் “எனக்குப் பின், உங்களிடையே இவ்வுலகின் கவர்ச்சியும் அதன் அலங்காரங்களும் தாராளமாகத் திறந்துவிடப்படுவதானது, உங்கள் விஷயத்தில் நான் அஞ்சுகின்றவற்றில் ஒன்றாகும்” என்று கூறினார்கள். அப்போது ஒருவர், “அல்லாஹ்வின் தூதரே! (செல்வம் எனும்) நன்மை, தீமையை உருவாக்குமா?” என்று கேட்டார். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) (சிறிது நேரம்) மௌனமாக இருந்தார்கள். அப்போது அந்த மனிதரிடம், “உமக்கு என்ன ஆயிற்று? நீர் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் பேச்சுக்கொடுக்கின்றீர். ஆனால், அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களோ உம்மிடம் பேசாமலிருக்கிறார்களே!” என்று கேட்கப்பட்டது.

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுக்கு இறை அறிவிப்பு (வஹீ) அருளப்படுகிறது என்று நாங்கள் புரிந்துகொண்டோம். பிறகு அவர்கள் இயல்பு நிலைக்கு வந்து, தம்மீதிருந்த வியர்வைத் துளிகளைத் துடைத்துவிட்டு, “இந்தக் கேள்வி கேட்டவர் (எங்கே?)” என்று (அவரைப் பாராட்டுவதைப் போல) வினவினார்கள். பின்னர், “நன்மையால் நன்மையே விளையும். வசந்த காலத்தில் விளைகின்ற (செழித்து வளர்ந்த பயிர்கள்) ஒவ்வொன்றும் (கால்நடைகளை ஈர்த்து,) வயிறு புடைக்கத் தின்னவைத்துக் கொன்று விடுகின்றன; அல்லது கொல்லும் அளவிற்குச் சென்றுவிடுகின்றன; (சற்றே துளிர்விட்ட) பசும் புற்களைத் தின்னும் கால்நடையைத் தவிர. அது (பசும் புல்லைத்) தின்று வயிறு நிரம்பிவிடும்போது, (அசைபோடுவதற்காகச்) சூரியனை நோக்கி(ப் படுத்து)க்கொள்கிறது. சிறுநீரை வெளியேற்றி சாணமும் இடுகிறது. பின்னர் (வயிறு காலியானவுடன்) மீண்டும் சென்று மேய்கிறது.

இந்த (உலகின்) செல்வம் இனிமையும் பசுமையும் உடையதாகும். ஒரு முஸ்லிம் தமது செல்வத்திலிருந்து ஏழைகளுக்கும் அநாதைகளுக்கும் வழிப்போக்கர்களுக்கும் கொடுத்துக் கொண்டிருக்கும்வரை அ(வரது செல்வமான)து அவருக்குச் சிறந்த தோழனாகும்”. என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) கூறினார்கள். மேலும் அவர்கள் கூறியதைப் போன்று.- யார் முறையற்ற வழிகளில் செல்வத்தை எடுத்துக் கொள்கின்றாரோ அவர் உண்டும் வயிறு நிரம்பாதவரைப் போன்றவர் ஆவார். மேலும், மறுமை நாளில் அந்தச் செல்வம் அவருக்கு எதிரான சாட்சியாக அமையும்.

அறிவிப்பாளர் : அபூஸயீத் அல்குத்ரீ (ரலி)