அத்தியாயம்: 1, பாடம்: 1.27, ஹதீஸ் எண்: 96

حَدَّثَنَا ‏ ‏أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏يَحْيَى بْنُ زَكَرِيَّاءَ بْنِ أَبِي زَائِدَةَ ‏ ‏وَأَبُو مُعَاوِيَةَ ‏ ‏عَنْ ‏ ‏عَاصِمٍ ‏ ‏عَنْ ‏ ‏أَبِي عُثْمَانَ ‏ ‏عَنْ ‏ ‏سَعْدٍ ‏ ‏وَأَبِي بَكْرَةَ ‏ ‏كِلَاهُمَا ‏ ‏يَقُولُا ‏:‏

‏سَمِعَتْهُ أُذُنَايَ وَوَعَاهُ قَلْبِي ‏ ‏مُحَمَّدًا ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏يَقُولُ ‏ ‏مَنْ ادَّعَى إِلَى غَيْرِ أَبِيهِ وَهُوَ يَعْلَمُ أَنَّهُ غَيْرُ أَبِيهِ فَالْجَنَّةُ عَلَيْهِ حَرَامٌ

“தம் தகப்பனல்லாத ஒருவரை – அவர் தம் தகப்பனல்லர் என்பதை அறிந்து கொண்டே- தம் தகப்பன் என்று கூறுபவருக்குச் சொர்க்கம் தடை செய்யப்பட்டுள்லது” என்று முஹம்மது (ஸல்) கூறியதை எம்மிரு காதுகள் செவியேற்றன; மனம் மனனம் செய்து கொண்டது.

அறிவிப்பாளர் : ஸஅத் பின் அபீவக்காஸ் (ரலி) & அபூபக்ரா (ரலி)

அத்தியாயம்: 1, பாடம்: 1.27, ஹதீஸ் எண்: 95

حَدَّثَنِي ‏ ‏عَمْرٌو النَّاقِدُ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏هُشَيْمُ بْنُ بَشِيرٍ ‏ ‏أَخْبَرَنَا ‏ ‏خَالِدٌ ‏ ‏عَنْ ‏ ‏أَبِي عُثْمَانَ ‏ ‏قَالَ ‏ ‏لَمَّا ادُّعِيَ ‏ ‏زِيَادٌ ‏ ‏لَقِيتُ ‏ ‏أَبَا بَكْرَةَ ‏ ‏فَقُلْتُ لَهُ مَا هَذَا الَّذِي صَنَعْتُمْ إِنِّي ‏ ‏سَمِعْتُ ‏ ‏سَعْدَ بْنَ أَبِي وَقَّاصٍ ‏ ‏يَقُولُا ‏:‏

‏سَمِعَ أُذُنَايَ مِنْ رَسُولِ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏وَهُوَ يَقُولُ ‏ ‏مَنْ ادَّعَى أَبًا فِي الْإِسْلَامِ غَيْرَ أَبِيهِ يَعْلَمُ أَنَّهُ غَيْرُ أَبِيهِ فَالْجَنَّةُ عَلَيْهِ حَرَامٌ ‏
‏فَقَالَ ‏ ‏أَبُو بَكْرَةَ ‏ ‏وَأَنَا سَمِعْتُهُ مِنْ رَسُولِ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ

(உபைத் அஸ்ஸகஃபீ என்பாரின் மகன்) ஸியாத் என்பவரை (அபூஸுஃப்யான் (ரலி) அவர்களின் மகன் என்று குறிப்பிட்டு) அழைக்கப்பட்ட காலகட்டதில், (உஸ்மான் அந்நஹ்தீ ஆகிய) நான் அபூபக்ரா (ரலி) அவர்களைச் சந்தித்தேன். அவர்களிடம், “நீங்களெல்லாம் செய்வதென்ன? ‘இஸ்லாத்தில் தம் தகப்பனல்லாத வேறொருவரை – அவர்தம் தகப்பனல்லர் என்று தெரிந்து கொண்டே – தம் தகப்பன் என்று கூறுகின்றவருக்குச் சொர்க்கம் தடை செய்யப்பட்டுள்ளது’ என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) கூற என்னிரு காதுகளால் செவியுற்றேன் என்று ஸஅத் பின் அபீவக்காஸ் (ரலி)  கூறியுள்ளார்களே!” என்று கேட்டேன். அதற்கு அபூபக்ரா (ரலி), “நானும் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடமிருந்து அதைச் செவியுற்றுள்ளேன்” என்று கூறினார்கள்.

அறிவிப்பாளர் : ஸஅத் பின் அபீவக்காஸ் (ரலி)

அத்தியாயம்: 1, பாடம்: 1.27, ஹதீஸ் எண்: 94

حَدَّثَنِي ‏ ‏هَارُونُ بْنُ سَعِيدٍ الْأَيْلِيُّ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏ابْنُ وَهْبٍ ‏ ‏قَالَ أَخْبَرَنِي ‏ ‏عَمْرٌو ‏ ‏عَنْ ‏ ‏جَعْفَرِ بْنِ رَبِيعَةَ ‏ ‏عَنْ ‏ ‏عِرَاكِ بْنِ مَالِكٍ ‏ ‏أَنَّهُ سَمِعَ ‏ ‏أَبَا هُرَيْرَةَ ‏ ‏يَقُولُا :‏

‏إِنَّ رَسُولَ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏قَالَ ‏ ‏لَا تَرْغَبُوا عَنْ آبَائِكُمْ فَمَنْ رَغِبَ عَنْ أَبِيهِ فَهُوَ كُفْرٌ

“உங்கள் தகப்பனை நீங்கள் வெறுக்காதீர்கள். தம் தகப்பனை வெறுத்து(வேறொருவரைத் தம் தகப்பன் என்று கூறி)விடுகின்றவர் நன்றி கொன்றவர் (காஃபிர்) ஆவார்” என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) கூறினார்கள்.

அறிவிப்பாளர் : அபூஹுரைரா (ரலி)

அத்தியாயம்: 1, பாடம்: 1.27, ஹதீஸ் எண்: 93

و حَدَّثَنِي ‏ ‏زُهَيْرُ بْنُ حَرْبٍ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏عَبْدُ الصَّمَدِ بْنُ عَبْدِ الْوَارِثِ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏أَبِي ‏ ‏حَدَّثَنَا ‏ ‏حُسَيْنٌ الْمُعَلِّمُ ‏ ‏عَنْ ‏ ‏ابْنِ بُرَيْدَةَ ‏ ‏عَنْ ‏ ‏يَحْيَى بْنِ يَعْمَرَ ‏ ‏أَنَّ ‏ ‏أَبَا الْأَسْوَدِ ‏ ‏حَدَّثَهُ عَنْ ‏ ‏أَبِي ذَرٍّ ‏:‏

‏أَنَّهُ سَمِعَ رَسُولَ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏يَقُولُ ‏ ‏لَيْسَ مِنْ رَجُلٍ ادَّعَى لِغَيْرِ أَبِيهِ وَهُوَ يَعْلَمُهُ إِلَّا كَفَرَ وَمَنْ ادَّعَى مَا لَيْسَ لَهُ فَلَيْسَ مِنَّا وَلْيَتَبَوَّأْ مَقْعَدَهُ مِنْ النَّارِ وَمَنْ دَعَا رَجُلًا بِالْكُفْرِ أَوْ قَالَ عَدُوَّ اللَّهِ وَلَيْسَ كَذَلِكَ إِلَّا حَارَ عَلَيْهِ

“தன் தகப்பன் அல்லாத(ஒரு)வரை, அவர் தன் தகப்பனல்லர் என்று அறிந்து கொண்டே, “அவர்தாம் என் தகப்பன்” என்று கூறும் ஒருவன் நன்றி கொன்றவன் (காஃபிர்) ஆகி விட்டான். தனக்குச் சொந்தமில்லாத ஒன்றைக் குறித்து “அது என்னுடையது” என்று உரிமை கொண்டாடுபவன் நம்மைச் சார்ந்தவன் அல்லன்; அவன் தனது இருப்பிடத்தை நரகத்தில் அமைத்துக் கொள்ளட்டும். ஒருவர் மற்றொரு (முஸ்லிமான) மனிதரை ‘இறைமறுப்பாளரே’ என்றோ ‘அல்லாஹ்வின் எதிரியே!’ என்றோ அழைத்தால் – அழைக்கப் பட்டவர் (உண்மையில்) அவ்வாறு இல்லையாயின் – சொன்னவரை நோக்கியே அச்சொல் திரும்பிவிடும்” என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) சொல்லக் கேட்டேன்.

அறிவிப்பாளர் : அபூதர் (ரலி)