حَدَّثَنَا عُثْمَانُ بْنُ أَبِي شَيْبَةَ وَإِسْحَقُ بْنُ إِبْرَاهِيمَ جَمِيعًا عَنْ جَرِيرٍ قَالَ عُثْمَانُ حَدَّثَنَا جَرِيرٌ عَنْ الْأَعْمَشِ عَنْ أَبِي وَائِلٍ عَنْ عَمْرِو بْنِ شُرَحْبِيلَ قَالَ قَالَ عَبْدُ اللَّهِ :
قَالَ رَجُلٌ يَا رَسُولَ اللَّهِ أَيُّ الذَّنْبِ أَكْبَرُ عِنْدَ اللَّهِ قَالَ أَنْ تَدْعُوَ لِلَّهِ نِدًّا وَهُوَ خَلَقَكَ قَالَ ثُمَّ أَيٌّ قَالَ أَنْ تَقْتُلَ وَلَدَكَ مَخَافَةَ أَنْ يَطْعَمَ مَعَكَ قَالَ ثُمَّ أَيٌّ قَالَ أَنْ تُزَانِيَ حَلِيلَةَ جَارِكَ
فَأَنْزَلَ اللَّهُ عَزَّ وَجَلَّ تَصْدِيقَهَا وَالَّذِينَ لَا يَدْعُونَ مَعَ اللَّهِ إِلَهًا آخَرَ وَلَا يَقْتُلُونَ النَّفْسَ الَّتِي حَرَّمَ اللَّهُ إِلَّا بِالْحَقِّ وَلَا يَزْنُونَ وَمَنْ يَفْعَلْ ذَلِكَ يَلْقَ أَثَامًا
ஒருவர் நபி (ஸல்) அவர்களிடம், “அல்லாஹ்வின் தூதரே! அல்லாஹ்வின் பார்வையில் மிகப் பெரிய பாவம் எது?” என்று கேட்டார். அதற்கு அவர்கள், “அல்லாஹ் உன்னைப் படைத்திருக்க, அவனுக்கு நீ இணை வைப்பதுதான் (பெரும் பாவம்)” என்று பதிலளித்தார்கள். அவர், “பிறகு எது?” என்று கேட்டார். அவர்கள், “உன் பிள்ளை உன்னுடன் (உன் உணவைப் பங்கு போட்டு) உண்ணும் என அஞ்சி அதை நீ கொல்வது” என்று சொன்னார்கள். “பிறகு எது?” என்று அவர் கேட்க, “உன் அண்டை வீட்டானின் மனைவியுடன் நீ விபச்சாரம் செய்வது” என்று அவர்கள் பதிலளித்தார்கள்.
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களது இக்கூற்றை மெய்பிக்கும் வகையில், “மேலும், அவர்கள் அல்லாஹ்வை அன்றி வேறெந்தக் கடவுளையும் அழைக்க மாட்டார்கள்; மேலும், அல்லாஹ் தடை விதித்துள்ள எந்த உயிரையும் உரிமையின்றி (அநியாயமாகக்) கொலை செய்ய மாட்டார்கள்; மேலும், விபச்சாரம் செய்ய மாட்டார்கள். யாரேனும் இப்பாவச் செயல்களைச் செய்தால் அவன் (தன் பாவத்திற்கான) தண்டனையைப் பெற்றே தீருவான்” எனும் (25:68ஆவது) வசனத்தை அல்லாஹ் அருளினான்.
அறிவிப்பாளர் : அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி)