حَدَّثَنَا أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ حَدَّثَنَا أَبُو مُعَاوِيَةَ وَوَكِيعٌ عَنْ الْأَعْمَشِ ح و حَدَّثَنَا مِنْجَابُ بْنُ الْحَارِثِ التَّمِيمِيُّ وَاللَّفْظُ لَهُ أَخْبَرَنَا ابْنُ مُسْهِرٍ عَنْ الْأَعْمَشِ عَنْ إِبْرَاهِيمَ عَنْ هَمَّامِ بْنِ الْحَارِثِ قَالَ :
كُنَّا جُلُوسًا مَعَ حُذَيْفَةَ فِي الْمَسْجِدِ فَجَاءَ رَجُلٌ حَتَّى جَلَسَ إِلَيْنَا فَقِيلَ لِحُذَيْفَةَ إِنَّ هَذَا يَرْفَعُ إِلَى السُّلْطَانِ أَشْيَاءَ فَقَالَ حُذَيْفَةُ إِرَادَةَ أَنْ يُسْمِعَهُ سَمِعْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُولُ لَا يَدْخُلُ الْجَنَّةَ قَتَّاتٌ
நாங்கள் ஹுதைஃபா (ரலி) அவர்களுடன் பள்ளிவாசலில் அமர்ந்திருந்தோம். அப்போது ஒருவர் வந்து எங்கள் அருகில் அமர்ந்தார். “இதோ! இவர் (நாம் பேசிக்கொள்ளும்) விஷயங்களை ஆட்சியாளரிடம் போய்(ப் புறங்) கூறுகிறார்” என்று ஹுதைஃபா (ரலி) அவர்களிடம் கூறப்பட்டபோது, “புறங் கூறுபவன் சொர்க்கம் செல்ல மாட்டான் என அல்லாஹ்வின் தூதர் (ஸல்) கூற நான் கேட்டுள்ளேன்” என்று அம்மனிதர் செவியுறும் வண்ணம் ஹுதைஃபா (ரலி) கூறினார்கள்.
அறிவிப்பாளர் : ஹுதைஃபா (ரலி) வழியாக ஹம்மாம் பின் அல் ஹாரிஸ் (ரஹ்)